புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் நம்மிடம் இல்லாததால், இந்தியா முழுமை பெற்றது போல் உணரவில்லை என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
டில்லியில் பிரஜ்பிதா பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்யா விஸ்வ வித்யாலாயா அமைப்பின் நிறுவனர் பிதாஸ்ரீ பிரம்மாவின் 48 வது நினைவு தின நிகழ்ச்சி டில்லியல் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., ல் தீவிரம்:
இந்த விழாவில் அத்வானி பேசியதாவது: கராச்சி மற்றும் சிந்து பகுதிகள் இந்தியாவிடம் இல்லாதது குறித்து பலமுறை கவலைப்பட்டுள்ளேன். எனது குழந்தை பருவத்தில், சிந்து மாகாணத்தில் வசித்த போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக பணியாற்றியுள்ளேன். சிந்து மாகாணம் நம்மிடம் இல்லாததை பார்க்கும் போது, இந்தியா முழுமை பெறாததை போன்றே எண்ண தோன்றுகிறது எனக்கூறினார்.
மேலும், பெண்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களை முக்கிய பதவிக்கு கொண்டு வர பாடுபடும் இந்த அமைப்பை பாராட்டிய அத்வானி, ஆர்எஸ்எஸ் அமைப்பும் தனது இயக்கத்தில் அதிகளவில் பெண்களை சேர்க்க வேண்டும் எனக்கூறினார்.
பா.ஜ., மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பிறந்தவர் ஆவார்.
English summary:
NEW DELHI: Sindh in Pakistan if we do not, we do not feel that India was complete senior BJP leader LK Advani said.