சென்னை: ‛ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. நகரில் முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, டில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். வளமையான விவசாயம் என முழக்கமிட்ட பா.ஜ.,அரசும் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசு ஏற்கனவே கூறியிருக்கும் ரூ.62 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாகவழங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Monday, 27 March 2017
Friday, 24 March 2017
அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம்: ஸ்டாலின்
சென்னை: இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுக உட்கட்சி பிரச்னை. இதில் தி.முக., தலையிடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபை வளாகத்தில் அவர் கூறியதாவது: சட்டசபையில் எந்த விதிகளும் கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இதன் முடிவு தெரிந்து தான் தீர்மானம் கொண்டு வந்தோம். இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு திமுக காரணமல்ல. இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. இதில், தி.மு.க., தலையிடாது. அதிமுக சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க.,விற்கு சாதகம் என தவறான தகவல் பரவுகிறது. அனைவரின் நம்பிக்கையை பெறும்படி பணியாற்றுவேன் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Friday, 10 March 2017
ஆட்சியை அகற்ற போராடுவோம்: ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஆட்சி அகன்றால் தான் அநியாயம் அகற்றப்படும் என்றால், அதையும் அகற்ற போராடுவோம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வரும் 13ம் தேதி போராட்ட முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கட்டும். ரேசன் கடைகளில் நிலவும் அநியாயங்களை அகற்றிட போராடுவோம். இந்த ஆட்சி அகன்றால்தான் அநியாயம் அகற்றப்படும் என்றால் அதையும் அகற்ற போராடுவோம். ரேசன் கடைகள் செயல்பாடுகளை அதிமுக அரசு சீர்குலைத்து விட்டது.
வறுமையில் வாடும் மக்களை பட்டினியில் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் இருப்பதாக அமைச்சர்கள் கூறுவது உண்மைக்கு மாறானது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: AIADMK regime were to be removed, but if it's wrong, and he will fight to eliminate the DMK leader MK Stalin said act.

Wednesday, 8 March 2017
பினாமி ஆட்சி பேச்சை கேட்க வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் அறிவுரை
சென்னை: குற்றவாளியின் பினாமி ஆட்சி சொல்படி நடக்காமல், ஐகோர்ட் அறிவுரைப்படி மாநில தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை: ஐகோர்ட் அறிவித்த கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். குற்றவாளி பினாமி ஆட்சியின் சொல்படி நடக்காமல், ஐகோர்ட் அறிவுரைப்படி செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னா
ட்சி பெற்ற அரசியல் சட்டஅமைப்பாகும். மாநில தேர்தல் ஆணையம், பினாமி ஆட்சி சொல் கேட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த தொடர்ந்து தயங்கிவருகிறது. ஜனநாயக தீபத்தை ஏற்றி கிராம சபைகளை வலுவாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. பொறுப்புகளை உணர்ந்து கோர்ட் விதித்த கெடுவிற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: guilty, not the words of the proxy rule, the court must act on the advice of the State Election Commission DMK leader MK Stalin said act.

Tuesday, 7 March 2017
எய்ம்ஸ் அறிக்கையில் குளறுபடி: ஸ்டாலின்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குளறுபடி உள்ளதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முரண்பாடு:
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்த ஸ்டாலின் அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வேதனை அளிப்பதுடன், வேடிக்கை அளிப்பதாகவும் உள்ளது. கடந்த செப்.,25ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என சொல்லப்பட்டது. ஆனால், நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா போயஸ் தோட்ட வீட்டிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டார் என சொல்லப்பட்டுள்ளது. இதனால், அறிக்கையில் குளறுபடி உள்ளது, வேறுபாடு,முரண்பாடு உள்ளது.
மாறி மாறி...:
நாளை ஓ.பி.எஸ்., உண்ணாவிரதம் உள்ள நிலையில் அறிக்கை வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ்.,சிடம் தான் விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ்., கூறுகிறார். இது 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் உள்ளது.
நீதிவிசாரணை நடத்த வேண்டும் :
அதிமுக பொது செயலர் ஜெயலலிதா மறைந்திருந்தால், அரசியல் நாகரீகம் கருதி எந்த பிரச்னையையும் கிளப்ப விரும்பவில்லை. ஆனால், முதல்வர் மரணத்தில் மர்மம் உள்ளதாக வெளியில் பேச்சு உள்ளது. எனவே ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தினால் ஓ.பி.எஸ்., சொல்வது உண்மையா, விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா, அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை உண்மையா, எய்ம்ஸ் அறிக்கை உண்மையா அல்லது வெளியில் பேசுவது உண்மையா என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: In a statement released by her death AIIMS is messy DMK leader MK Stalin said act.

மீண்டும் திமுக ஆட்சி : ஸ்டாலின் அழைப்பு
சென்னை : மீனவர்கள் கைது விவகாரம் மற்றும் திமுக.,வின் 50வது ஆண்டை முன்னிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128 படகுகளும் விடுவிக்கப்படாததால் அவர்களின் குடும்பங்கள் தாங்க முடியாத துயரத்தில் தத்தளிக்கின்றன. கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் மீன்வளத்துறை அமைச்சரை உடனே டில்லிக்கு அனுப்பி தமிழக மீனவர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தானே என மௌனம் சாதிக்காமல் இந்திய மீனவர்களே என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு தாக்குதலையும் கைதுகளையும் தடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
'தமிழ்நாடு' என்று தாய்க்கு பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50வது ஆண்டு இது. மீண்டும் தி.மு.க அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம். அண்ணாவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதி பல சாதனைகளை செய்துள்ளார். பல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திராவிட இயக்கம் அழிந்து விட்டதாக மனப்பால் குடிப்போர் முளைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். தமிழ்பயிரை விளைக்க திமுக.,வால் மட்டுமே முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
English summary:
Chennai: DMK fishermen arrest and., In honor of the 50th anniversary of DMK leader MK Stalin is the statement issued on Twitter.

Friday, 3 March 2017
மாணவர்கள் பற்றி கவலைப்படாத அரசு: ஸ்டாலின் தாக்கு
சென்னை: நீட் தேர்வு குறித்து மாணவர்களை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு குறித்து சி.பி.எஸ்.இ. அடுக்கடுக்கான நிபந்தனைகளால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பே இனி கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களித்து தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலில் பெறுவதில் அதிமுக அரசு எவ்வித அவசரமோ, அக்கறையோ காட்டவில்லை.
மன அழுத்தம்:
அவர்களுக்கு, “கூவத்தூரில்” கொண்டாட்டம் நடத்த நேரமிருந்ததே தவிர, மார்ச் 1 ஆம் தேதி “நீட் தேர்வுக்கு” விண்ணப்பிக்க இறுதி நாள் என்ற நிலையிலும் கூட போர்க்கால நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட “நீட்” மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. “நீட்” தேர்வு பற்றிய நிலை என்ன என்பது தெரியாமல் தேர்வு நடைபெறும் மே 7 ஆம் தேதியை எதிர்நோக்கி ஒருவிதமான மன அழுத்தத்துடனும், குழப்பத்துடனும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அதைவிட அதிகமான மன அழுத்தத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
பேராபத்து:
பெங்களூரு சிறையில் உள்ள குற்றவாளி சசிகலாவைப் பார்க்க அமைச்சர்கள் படையெடுக்கிறார்களே தவிர, நீட் தேர்வு பற்றி கவலைப்படவில்லை. அதிலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் “நீட்” தேர்வு குறித்த கேள்விக்கு “மாணவர்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருப்பது “பெங்களூருக்கு ஓடோடிச் சென்று குற்றவாளி சசிகலாவை பார்ப்பதற்கு மட்டுமே அவருக்கு நேரம் இருக்கிறது” என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துடன் குற்றவாளியின் “பினாமி ஆட்சி” நடத்தும் இந்த விளையாட்டு பேராபத்து என்பதை அதிமுக அரசும், கல்வி அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் போன்றவர்களும் உணர மறுப்பது வேதனையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English summary:
Chennai: The Tamil Nadu government does not care about the students about the need to select the DMK leader MK Stalin said act.

பிறந்த நாளுக்கு குறைந்த கூட்டம்: ஸ்டாலின் குடும்பம் அதிர்ச்சி
சென்னை: மார்ச் 1. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த தினம். இந்த தினத்திற்கு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தி.மு.க., தொண்டர்கள் பெரும் திரளாக சென்னை வந்து, அவரை வாழ்த்தி விட்டு, திரும்பிச் செல்வது வாடிக்கை.
இந்தாண்டு, அவர், கட்சியின் பொருளாளர் நிலையில் இருந்து செயல்தலைவர் பதவிக்கு உயர்ந்து விட்டதால், கடந்த ஆண்டு பிறந்த நாளை விட, கூடுதல் எண்ணிக்கையில் தொண்டர்கள் வருவர் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் ஸ்டாலின். ஆனால், வழக்கமான மாற்றுக் கட்சித் தலைவர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அதிக அளவில், ஸ்டாலினை, நேரிலும் போனிலும் வாழ்த்தினர்.
ஆர்வம் குறைந்தது?:
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கு, முன்பு போல கூடும் தொண்டர்கள் கூட்டம், சமீப காலமாக எல்லா தலைவர்களுக்கும் சரிந்துதான் வருகிறது. ஜெயலலிதா இறந்த பின் வந்த முதல் பிறந்த நாளுக்கே, அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எழுச்சி இல்லை. பணம் கொடுத்து, ஆட்களை கூட்டி வந்துதான், நலத் திட்ட உதவிகளையும்; பொதுக்கூட்டங்களையும், மாவட்ட செயலர்களும்; அமைச்சர்களும் நடத்தினர்.
அவர்களுக்கே நிலைமை அப்படித்தான் என்கிற போது, தி.மு.க.,வில் மட்டும், தொண்டர்கள், ஸ்டாலினுக்காக கிளர்ந்து எழுந்து வாழ்த்து தெரிவிக்க வந்து விடுவார்களா? இதே, தி.மு.க., ஆட்சி இருந்து, ஸ்டாலின் முதல்வராக இருந்தால், காரியம் சாதிக்கும் எண்ணத்துடன், தொண்டர்கள் பெரும் அளவில் கிளம்பி வந்திருப்பர். இதுதான் யதார்த்தம். அதை விட்டு விட்டு, நான் இவ்வளவு தொண்டர்களை எதிர்பார்த்தேன். அதில் பத்து சதவீத அளவுக்குக் கூட வரவில்லை என்று ஸ்டாலின் புலம்ப தேவையில்லை.
இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில், அவசர உலகில், இந்த அளவுக்கு குறைந்த எண்ணிக்கையிலாவது, தொண்டர்கள் தன்னிச்சையாக வருவதற்காக, ஸ்டாலினும், அவரது குடும்பத்தாரும் சந்தோஷம்தான் பட வேண்டும். அதற்காக வருத்தப்படவோ, கலங்கவோ கூடாது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English summary:
Archives: March 1. The DMK leader Stalin's Birthday Adventure. This Day, from all the districts of Tamil Nadu, the DMK, the mass of volunteers arrived in Chennai to salute him, leaving the client to go back.

Thursday, 2 March 2017
பழனிசாமி முதல்வரானதற்கு ஸ்டாலின் காரணம் : தமிழிசை
கும்பகோணம் : ஸ்டாலின் முறையாக நடந்திருந்தால் பழனிசாமி முதல்வர் ஆகி இருக்க முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தான் காரணம் :
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நெடுவாசல் போராட்டத்தை சில அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தூண்டி விடுகின்றன. விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் பா.ஜ., அரசு கொண்டு வராது. கரும்பு நிலுவைத் தொகையை மத்திய அரசு அளித்த பிறகும், மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கவில்லை. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் போது ஸ்டாலின் முறையாக நடந்திருந்தால் பழனிச்சாமியால் முதல்வராகி இருக்க முடியாது. போராட்டத்தில் மாணவர்கள் கலந்த கொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பது வேதனை அளிக்கிறது.

‛சசிகலாவை கடுமையாக விமர்சியுங்கள்'; ஸ்டாலின் உத்தரவு
'ஜெயலலிதாவை விமர்சிப்பதை தவிர்த்து, சசிகலாவை கடுமையாக விமர்சியுங்கள்' என, தி.மு.க., பேச்சாளர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் படத்தை, தலைமைச் செயலகத்திலிருந்து அகற்ற வேண்டும் என, ஸ்டாலின் வலியுறுத்தினார். இது, பொது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக, மாவட்ட செயலர்கள், ஸ்டாலினிடம் தெரிவித்தனர். அதையடுத்து, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்டாலின், நேற்று முன்தினம் நடந்த பேச்சாளர்கள் கூட்டத்தில், சசிகலாவை கடுமையாக விமர்சிக்கும்படி கூறினார்.
'ஜெயலலிதாவை விமர்சிப்பதை தவிர்த்து, குற்றவாளி சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் பற்றி, காட்டமாக விமர்சனம் செய்யுங்கள். தி.மு.க., மேடைகளில், சசிகலா எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்' என, பேச்சாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரம் கூறியது.

ஆட்சி கவிழும்; தேர்தலுக்கு தயாராகுங்க : மாவட்டச் செயலர்களை முடுக்கிய ஸ்டாலின்
சென்னை: முதல்வர் பழனிச்சாமி அரசு, எந்த நேரத்திலும் கவிழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால், உடனே, தேர்தல் வரலாம். எனவே, தேர்தலை எதிர்கொள்ள, நாம் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், கட்சியினரை தேர்தலை நோக்கி உசுப்பி விடுவதற்காக, நேற்று, சென்னை, அறிவாலயத்தில் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய மாவட்டச் செயலர்கள், உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க., தனித்தே எதிர்கொள்ளலாம். இன்றைக்கு, அ.தி.மு.க., என்ற பிரதான கட்சி, சிதறுண்டுள்ள நிலையில், தி.மு.க.,வுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால், யாரையும் கூட்டணி சேர்க்கத் தேவையில்லை. காங்கிரசோடு கூட கூட்டணி தேவையில்லை. பார்லிமெண்ட், சட்டசபை தேர்தலுக்கு மட்டும் காங்கிரசை கூட்டணியில் வைத்துக் கொள்ளலாம். அதேபோல, பழனிச்சாமி அரசை விமர்சிக்கலாம். இறந்து போன ஜெயலலிதாவை விமர்சிப்பதை விட்டு விடலாம். அதை மக்கள் ரசிக்கவில்லை என்று கருத்துச் சொல்லியுள்ளனர்.
மாவட்டச் செயலர்கள் கருத்துக்களையெல்லாம் கேட்டு, அதை குறிப்பெடுத்துக் கொண்டு ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படுகிறது.
அவர் பேசியுள்ளதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், கட்சி, மிகக் குறைய சீட் எண்ணிக்கையில், ஆட்சிப் பொறுப்பை இழந்து நிற்பதில், கட்சியின் எல்லா நிலைகளில் இருப்பவர்களுக்கும் வருத்தம் இருப்பதை நான் அறிகிறேன். ஆனால், அதற்கான, காரணத்தைச் சொன்னால், பலருக்கும் வருத்தம் ஏற்படும். அதனால், அவர்கள் தாங்களாகவே திருந்திக் கொள்ளட்டும் என விட்டு விட்டேன். ஆனால், அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தவறு என்றால், அவர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்படுவார்கள். கட்சி தோற்க காரணமாக இருந்தவர்களை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்.
முதல்வர் பழனிச்சாமி, தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். இந்த ஓட்டெடுப்பை, நியாயமாக நடத்த வேண்டும் என்றுதான் கோரினோம். அதற்கு, ரகசிய ஓட்டெடுப்பு கோரினோம். ஆனால், சபாநாயகர் தனபால் ஒப்புக் கொள்ளவில்லை.
அதனால், சட்டசபைக்குள் தர்ணா செய்தோம். உடனே, நம்மை திட்டமிட்டபடி, வெளியேற்றி விட்டு, ஓட்டெடுப்பை நடத்தி முடித்து, வெற்றி பெற்றதாகவும் அறிவித்தனர்.
இதற்கு முன்பாக, ஒட்டெடுப்பு நாளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஒத்திகை பார்த்து விட்டு, சபைக்கு வந்துள்ளனர். அதற்கு காரணம், சபையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, நாம், முதல் நாள் பேசிய அத்தனை விஷயங்களும் அச்சுபிசகாமல் அவர்களுக்கு போய் சேர்ந்ததுதான். ஆக, இங்கிருக்கும் ஏதோ ஒரு கறுப்பு ஆடுதானே, அதை, அந்தப் பக்கம் தெரிவித்திருக்க முடியும். அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. கறுப்பு ஆட்டை கட்டாயம் வெளியேற்றுவேன்.
பழனிச்சாமி அரசு, நீண்ட காலத்துக்கு நீடிக்காது. விரைவில் கவிழ்ந்து விடும். அதனால், எந்த நேரமும் தேர்தல் வரலாம். தேர்தலுக்கு இப்போதிலிருந்தே நாம் தயாராக வேண்டும். ஒவ்வொரு மாவட்டச் செயலரும், இந்த நிமிடத்தில் இருந்தே, தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் திட்டங்களை, தொடர்ந்து தொகுதிகளில் செயல்படுத்த வேண்டும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. இந்த முறை, கட்சி சார்பில் போட்டியிடும் 90 சதவீத வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான், நம்முடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசோடு கூட்டணி வேண்டாம் என்று, மாவட்டச் செயலர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் தான் நமக்கு, இப்போது இருக்கும் நம்பிக்கையான கூட்டணி. அதனால், உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கு மரியாதையான சீட்களை ஒதுக்கிக்
கொடுத்து, அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாவட்டங்களில் தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கும் போது, எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது.
நமக்கு, சசிகலா முதல் எதிரி என்றால், பன்னீர்செல்வம் இரண்டாவது எதிரி, தீபா மூன்றாவது எதிரி. அதனால், அவர்களோடு நமக்கு எந்த ஒட்டும் உறவும் வேண்டாம். எதிரிகள் அனைவரையும், சேர்த்து வீழ்த்த வேண்டும். வைகோ, விஜயகாந்த பற்றி எதையும் பேசி, அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்

லவுட் ஸ்பீக்கர் வேண்டாம் : ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை :
ப்ளஸ் 2 தேர்வுகள் துவங்க உள்ளதால் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது லவுட் ஸ்பீக்கர் வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை :
நாளை முதல் (மார்ச் 2) பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களின் அடுத்த கட்ட கல்லூரி வாழ்க்கையை தொடங்குவதற்கு மிக முக்கியமான இந்த தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். இந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து தி.மு.க.,வினர் மக்கள் நலம் பயக்கும் உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியும், மனநிறைவும் தருகிறது. அப்படி பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்தும் கட்சி நிர்வாகிகள் நாளை துவங்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் படிப்பதற்கு தொந்தரவு செய்ய வேண்டாம். தங்களின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான தேர்வை மாணவர்கள் எழுதுகின்ற இந்த நேரத்தில் ஆடம்பரம், ஆரவாரம் இன்றி மிகவும் அமைதியான முறையில் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுத வழிவிட வேண்டும்.
English Summary:
Chennai: The birthday celebration will start today, plus 2 choices of action during the DMK leader MK Stalin as not Loud speaker, urged parties.

ஸ்டாலின் பிறந்தநாள்: சென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை : திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாளை திமுக.,வினர் இன்று கொண்டாடி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அண்ணாத்துரை நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்துவதற்காக கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.
இதனால் சென்னை தேனாம்பேட்டை முதல் அண்ணாத்துரை நினைவிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாதாரண நாட்களிலேயே பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலாகவும் காணப்படும் அண்ணாசாலையில், ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் அவமதிக்கு ஆளாகினர்.

Chennai: DMK active DMK leader Stalin's 65th birthday., Are celebrating today is staggering. To mark the birthday, Marina put a wreath at the memorial of the CN Annadurai paid homage to Stalin. Went in procession to mourn with the party cadres.
Wednesday, 1 March 2017
ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்: ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பன்னீர் செல்வத்தின் காலம் கடந்த உண்ணா விரத போராட்ட முடிவை வரவேற்கிறேன். முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? கைதிகளை பராமரிப்பது அரசு தான். ஆனால் அரசே கை
தியை போல் பார்க்கிறது. என தெரிவித்துள்ளார்.

Friday, 24 February 2017
சோனியா, ராகுலை நாளை(பிப்.,24) சந்திக்கிறார் ஸ்டாலின்
புதுடில்லி: டில்லி சென்றுள்ள தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், காங்., தலைவர் சோனியா மற்றும் துணை தலைவர் ராகுலை நாளை(பிப்.,24) சந்திக்க உள்ளார்.
டில்லி பயணம்:
தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் முறையிடுவதற்காக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இன்று(பிப்.,23) டில்லி சென்றார். மாலை பிரணாப்பை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சோனியாவுடன் சந்திப்பு:
இந்நிலையில் நாளை(பிப்.,24) காங்., தலைவர் சோனியாவை ஸ்டாலின் சந்திக்கிறார். இச்சந்திப்புக்கு பின் காங்., துணை தலைவர் ராகுலையும், ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்: டில்லியில் ஸ்டாலின் பேட்டி
புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து முறையிட்டார். மேலும் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார். ஸ்டாலினுடன் துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் சென்றனர்.
மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு:
பின்னர் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்தினோம். ஆட்சியாளர்களுக்கு சாதகமாக சபாநாயகர் தனபால் நடந்து கொண்டார். எதிர்கட்சி உறுப்பினர்களான எங்களை வேண்டுமென்றே வெளியேற்றிவிட்டார். உ.பி. ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரகசிய ஓட்டெடுப்பு நடந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி தமிழக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் கோரிக்கை ஜனாதிபதி பரிசீலிப்பார் என நம்புகிறோம். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தி.மு.க., தலையிடாது. விரைவில் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மலரும் என்றார்.

வரும் 28 ம்தேதி தி.மு.க., ஆலோசனை
சென்னை: தி.மு.க.,வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும், 28 ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த பிறகு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற கோரி, டில்லியில் இன்று ஜனாதிபதியை அவர் சந்திக்க உள்ளார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14க்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை செய்ய வரும், 28 ம் தேதி காலை, 10 மணிக்கு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tuesday, 21 February 2017
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின்
சென்னை: ‛தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடரில் சபாநாயகர் தனபால் மீது தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்' என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இடைப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது சபாநாயகர் தனபால் முறையாக நடந்து கொள்ளவில்லை. அவர் சசிகலாவின் பினாமி ஆட்சியை காப்பாற்றும் நோக்குடன் செயல்பட்டார். சட்டசபை விதிகளின்படி, எதிர்கட்சியினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முடியாது. சட்டசபை ல் அடுத்த கூட்டத்தொடரில் சபாநாயகர் தனபால் மீது தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்.
கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி:
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வு காரணமாக சில உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ட்ரக்யோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், பேச்சு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. விரைவில் நலம் பெறுவார்.
உள் காயம்:
சட்டசபையில் சபை காவலர்கள் என்னை குண்டுகட்டாகி துாக்கி வெளியேற்றினர். அதனால், உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. வெளி காயம் எதுவும் இல்லை. உள்காயம் இருக்கிறது. தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்க்க உள்ளேன்.
* வைகோ ஒரு அரசியல் ஞானி. அவரின் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.
சசிக்கு கோபம்:
* சசிகலா எப்படியாவது முதல்வர் ஆகி விட வேண்டும் என்று முயற்சித்தார். ஒரு நாள் முதல்வராக ஆகி இருந்தால் கூட சிறையில் ‛ஏ' வகுப்பு அறை கிடைத்திருக்கும். அப்படி, எதுவும் நடக்கவில்லை. முதல்வர் ஆக முடியாமல் சிறைக்கு போக வேண்டிய நிலை உருவானதால் ஏற்பட்ட கோபத்தை ஜெ., சமாதிக்கு சென்று சபதம் எடுப்பது போல் வெளிப்படுத்தி உள்ளார்.இவ்வாறு ஸ்டாலின் பேட்டியளி்த்தார்.

பிப். 22-ம் தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின்
சென்னை: இடைப்பாடி பழனிச்சாமியின் பினாமி அரசை கண்டித்து பிப். 22-ம் தேதி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியது.
* கடந்த 9 காலமாக தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு முழுமையாகசெயல்படவில்லை. ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து அரசு தரப்பில் முழுமையாக அறிக்கையும் தரவில்லை. அவரது மரணத்தில் குழப்பமான தகவல்கள் தான் வெளி வருகின்றன.
* ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இன்று வரை நீடிக்கிறது. அண்ணாதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தொடர்ந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது.
* தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க கவர்னரை தொடர்ந்து வலியுறுத்திவோம்.
* சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
* கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிணைய கைதிகள் போல் வைக்கப்பட்டிருந்தனர்.
* சட்டசபையில் வாக்கெடுப்பு சுதந்திரமாக நடைபெறவில்லை. சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளோம். சந்திக்க நேரம் கேட்டுளோம்
* தற்போது நடக்கும் இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. இடைப்பாடி பழனிச்சாமியின் பினாமி ஆட்சியை கண்டித்து தமிழகத்தில் பிப்.22-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசம் : ஸ்டாலின்
சென்னை : எண்ணூரில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்தினரை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு ரித்திகா கொலை உதாரணம். சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டிய போலீஸ், கூவத்தூரில் பாதுகாக்கிறது. சட்டசபையில் எங்களை தாக்கத் தான் போலீஸ் இருக்கிறது. சிறுமி, பெண்களை பாதுகாக்க அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.