பெங்களூரு: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அடிமட்டத்திலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், தலைமை இதில் கவனம் செலுத்தவில்லை. காங்கிரசில், கட்சி தலைமைக்கும் அடி மட்ட தொண்டருக்கு தொடர்பில்லாமல் உள்ளது. கட்சியில் மரியாதையும், என்னிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என மட்டுமே எதிர்பார்த்தேன். எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. ஊழலுக்கு எதிராக மோடி பொறுமை காட்டவில்லை. இது என்னை கவர்ந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்னை கவர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Friday 24 March 2017
Wednesday 22 March 2017
ராகுல் ஒதுங்கி வழிவிட வேண்டும்: கேரள இளைஞர் காங்., யோசனை
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று நடத்த ராகுல்காந்தி விரும்பவில்லை என்றால், அவர் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்று கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் மகேஷ் கூறி உள்ளார்..
இது குறித்து மகேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛மதிப்பிற்குரிய ராகுல்காந்தி அவர்களே, மிகப் பெரிய இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று நடத்த தாங்கள் விரும்பாவிட்டால், மற்றவர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கி விடுங்கள்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் மேலிடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரான ஏ.கே. அந்தோணி வெளிப்படையாக கூற வேண்டும் என மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் புதுப்பொலிவுடன் மேலெழுந்து வருவதற்கு நாங்கள் எங்கள் உயிரைக் கூட தரத் தயாராக உள்ளோம் என்று கூறி உள்ள அவர், கட்சியில் அதற்கான மரியாதை கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tuesday 7 March 2017
மன்மோகன் பலவீன பிரதமரா? காங்., சமாளிப்பு
புதுடில்லி: மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக இருந்தார் எனக்கூறப்படுவதை
காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மணிஷ் திவாரி கூறியதாவது: மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக எப்போதும் இருக்கவில்லை. இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவர், சில காரணங்களுக்காக தன்னை முன்னிலைபடுத்தவில்லை. அவர் பலவீனமான பிரதமராக இருந்திருந்தால், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எவ்வாறு மேற்கொள்ள முடியும் எனக்கூறினார்.

Friday 24 February 2017
தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
சென்னை: ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவர் ‛குட்லக்' ராஜேந்திரனை, தங்கம் கடத்திய விவகாரத்தில், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக் ராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி சுங்கசாவடியில், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த குட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமான டிஎன் 07 பிக்யூ 8485 என்ற பதிவு எண் கொண்ட நிசான் மைக்ரா காரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கடந்த, 22ம் தேதி சோதனை செய்தனர்.
12 கிலோ தங்கம்:
அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இந்த தங்கம் குட்லக் ராஜேந்திரனுடையது என பிடிபட்ட காரின் டிரைவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் குட்லக் ராஜேந்திரனின் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் வீடு சோதனையிடப்பட்டது.
அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது, குட்லக் ராஜேந்திரன் அவர் வீட்டு எதிரிலேயே தப்பி ஓடி, தடுக்கி விழுந்து இடது கையை முறித்துக் கொண்டார். அவருக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவுக் கட்டு போடப்பட்டது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Saturday 18 February 2017
உத்தராகண்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் : முதல்வர் நம்பிக்கை
டேராடூன் - உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
கடும் போட்டி:
உத்தராகண்டில் 69 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 15-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்த லின்போது ஆ
ளும் காங்கிரஸுக் கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நிலையான ஆட்சி:
இந்நிலையில் முதல்வர் ஹரீஷ் ராவத், டேராடூனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 15-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியாக மக்கள் வாக்கு அளித்ததற்கு நன்றி. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். மாநிலத்தில் நிலையான ஆட்சியை காங்கிரஸ் வழங்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பணத்தை நம்பி போட்டியிட்டது. அந்தக் கட்சி தோல்வியைத் தழுவுவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பழனிச்சாமிக்கு எதிராக காங்., ஓட்டு: முகுல் வாஸ்னிக்
February 18, 2017ALADMK, Assembly election, chennai, congress, minister edappadi palanisamy, tamil nadu, Tamil Nadu Assembly
சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்., எதிர்த்து ஓட்டளிக்கும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு:
முதலமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோருகிறார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. காங்கிரசின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் நம்பிக்கை ஓட்டெடுப்பில், காங்., நிலைப்பாடு குறித்து இன்று(பிப்.,18) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ராகுல் உத்தரவு:
இந்நிலையில், இதுகுறித்து, காங்., பொதுச் செயலரும், தமிழக பொறுப்பாளருமான முகல் வாஸ்னிக் கூறியதாவது: இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓட்டுப்போடுமாறு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு கட்சியின் துணை தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக ஓட்டளிப்பர். இவ்வாறு, முகுல் வாஸ்னிக் கூறினார்.

Friday 17 February 2017
'ஜெ., உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கியிருப்பார்?': இளங்கோவன்
ஈரோடு: ''கல்லறைக்குள் இருக்கும் போதே, இப்படி அடி விழுந்தால், ஜெ., உயிரோடு இருந்த போது, எப்படி அடி வாங்கி இருப்பார் என்று சிந்திக்க வேண்டும்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசினார்.
தப்ப முடியாது:
ஈரோட்டில் நடந்த, திருமண விழா ஒன்றில், அவர் பேசியதாவது: தேசிய அளவில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், ஒரு வழக்கை தொடுத்து, மிகப்பெரிய தண்டனையை பெற்றுத் தந்துள்ளார். அயோக்கியத்தனம் செய்தால், தப்பிக்க முடியாது என்பதை உணரச் செய்துள்ளார்.
தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்கள் கல்லறை செல்ல வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும். இதை விடுத்து தப்ப முடியாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது.
எப்படி அடி வாங்கியிருப்பார்?
எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு. தமிழகத்தை முந்தானையில் முடிந்து கொள்ளலாம் என நினைத்தால், சிறைக்குத்தான் போக வேண்டும். கல்லறைக்குள் இருக்கும் போதே, இப்படி அடி விழுந்தால், அவர் உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கி இருப்பார் என, சிந்திக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்கள் சொல்கின்றனர், 'அடித்து கொன்று விட்டனர்' என்று.
சிறையில் நிம்மதி:
கல்லறையில் ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியை பார்த்தால், உண்மையிலேயே அடி வாங்கியவர், உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. நாட்டை குட்டிச்சுவராக்கினால் போதும் என நினைத்தால், சிறையில் போய் தான் நிம்மதியாக இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
Erode: '' while the tomb, the blow falls, J., When he was alive, that she will have to think how to blow, '' and, TN Cong., Former chairman Mr spoke.

Friday 3 February 2017
உ.பி.,யை சீரழிக்க நினைக்கும் இளவரசர்கள்: அமித்ஷா பேச்சு
மீரட்: காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இளவரசர்கள், உ.பி.,யை சீரழிக்க நினைப்பதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறினார்.
பிரசாரம்:
சட்டசபை தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தலைவர் அமித் ஷா மீரட்டில் பேசியதாவது:
முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கூட்டணி கட்சியின் தலைவரும், உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு நிலை மோசம் பற்றி விளக்கமளிக்க வேண்டும். அவர்கள் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லவில்லை. இருவரும் நாட்டை கொள்ளையடித்தவர்கள்.
தற்போது அவர்கள் ஒன்று சேர்ந்து உ.பி.,யை சீரழிக்க பார்க்கின்றனர். இந்த முறை மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதுகாக்கப்படும். விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் எனக்கூறினார்.
English Summary:
Meerut: Congress and Samajwadi Party princes, UP, it is looking to make inroads into the BJP leader Amit Shah said.

Wednesday 1 February 2017
புதுடில்லி : மத்திய பட்ஜெட்டை திட்டமிட்டபடி தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் கேரள எம்.பி.,யின் மறைவு காரணமாக பட்ஜெட் தாக்கலை ஒருநாள் ஒத்திவைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பட்ஜெட்டை தள்ளி வைக்க வலியுறுத்தல் :
கேரள எம்.பி., அகமது திடீரென மாரடைப்பால் காலமானதால், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பட்ஜெட் தாக்கலை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவருக்கு மரியாதை தரும் வகையில் அவையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் பட்ஜெட் திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், கேரள மாநில எம்.பி.,க்களை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் குரல் எழுப்புமாறு வலியுறுத்த போவதாக லோக்சபா காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கடும் தாக்கு :
காங்கிரஸ் மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளும் பட்ஜெட் தாக்கலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்க மறுத்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இது மரபுக்கு எதிரானது. மத்திய அரசு மிகப் பெரிய தவறு செய்கிறது. ஒருநாள் பட்ஜெட்டை தாமதமாக தாக்கல் செய்வதால் ஒன்றும் ஆகி விடாது. அகமது உயிரிழந்தது தெரிந்தும், பட்ஜெட்டை தள்ளி வைக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. பட்ஜெட் தள்ளி வைத்து, அவையையும் ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English summary:
New Delhi: The government is making all preparations to file the planned budget. The Kerala MPs, including the dissolution of the opposition parties are urging Congress to postpone the day of the budget.

Saturday 28 January 2017
ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக வாதாடும் காங்கிரசார்: நிர்மலா சீதாராமன்
சென்னை: ‛‛ ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக காங்கிரசார் தான் வாதாடுகின்றனர்,'' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில், இன்று( ஜன.,28) நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேசிய கொடியை எரித்தவர்கள்:
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது, சிலர் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் கோஷம் போட்டது வருத்தம் அளிக்கிறது. தேசிய கொடியை அவமதித்தவர்கள், பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, 2014ல் இருந்து பா.ஜ., ஆதரவு அளித்து வருகிறது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க, 2016 ஜனவரியில், மத்திய அரசு ஒரு அறிவிப்பாணையை பிறப்பித்தது. ஆனால், இந்த அறிவிப்பாணையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. அது தொடர்பான விசாரணை தொடர்ந்து இறுதி கட்டத்தில் உள்ளது.
காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்:
இந்த நேரத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பாணை கொண்டு வந்தால், கோர்ட் அவமதிப்பாகும் என்பதால் தான் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரவில்லை. எனினும், தமிழக அரசு கொண்டு வரலாம் என்று அப்போதே சொன்னோம். அது தான் தற்போது நடந்துள்ளது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வந்துள்ளது. எனவே, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக, கோர்ட்டில் வாதாடுபவர்கள் காங்கிரசார் தான். ஆனால், அவர்கள் தனிநபர் என்ற நிலையில் செயல்படுவதாக கூறுகின்றனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: '' Congress is in favor of the ban argued jallikattu ', Union Minister Nirmala Sitharaman alleged.

நாளை ஒரே மேடையில் ராகுல் - அகிலேஷ் பிரசாரம்
January 28, 2017Assembly election, congress, lucknow, rahul gandhi, samajwadi party, UP chief minister Akhilesh, uttar pradesh
லக்னோ : உ.பி., சட்டசபை தேர்தலுக்காக காங்., துணைத்தலைவர் ராகுலும், உ.பி., முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேசும், நாளை ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ஒரே மேடையில் அகிலேஷ் -ராகுல் :
உ.பி., சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 11 ம் தேதி துவங்கி, 7 கட்டங்களாக நடக்க உள்ளது. உ.பி.,யில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி உருவாகி உள்ளதால், நாளை (ஜனவரி 29) நடக்கும் பிரசார கூட்டத்தில் முதல் முறையாக ராகுலும், அகிலேசும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும் இருவரும் இணைந்து கொடியசைத்து, கூட்டணி பிரசாத்தை துவக்கி வைக்க உள்ளனர்.
அகிலேஷ் நம்பிக்கை :
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வதால் நிச்சயம் தங்கள் கட்சி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல், அகிலேஷ் பங்கேற்கும் இந்த பிரசார கூட்டத்தில் பிரியங்காவும், கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதே போல் சமாஜ்வாதி சார்பில் அகிலேஷின் மனைவி டிம்பிளும் இந்த கூட்டத்தில் பேச உள்ளார். உ.பி., தேர்தலில் இந்த பிரசார கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary:
Lucknow: Uttar Pradesh assembly election Cong., Vice President Rahul, UP Chief Minister and leader of the Samajwadi Party akhilesh, tomorrow are set to the same stage of the election campaign.

Sunday 22 January 2017
உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்., கூட்டணி உறுதியானது
January 22, 2017congress, election commission of india, New delhi, samajwadi party, sonia gandhi, UP chief minister Akhilesh, uttar pradesh
டெல்லி: உத்திரப்பிரதேச அரசியல் களத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 105 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டணி உறுதியானது. உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதியும் இதுவரை தேர்தலில் கூட்டணி வைத்ததில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக இவ்விரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் பிப்ரவரி 11-ல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் 11-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
English summary:
New Delhi: Samajwadi Party in Uttar Pradesh in the political arena - Congress is assured. Samajwadi Party joined the governing coalition 105 seats allocated to the Congress. SP leader Akhilesh Yadav and Congress President Sonia Gandhi held coalition talks after the firm

Wednesday 18 January 2017
உ.பி.,யில் சமாஜ்வாதி - காங்., கூட்டணி
புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தலை ஆளும் சமாஜ்வாதியுடன் இணைந்து எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: உ.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரசும் சமாஜ்வாதியும் இணைந்து எதிர்கொள்ளும். கூட்டணி குறித்த விபரங்கள், தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள்
இன்னும் இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என்றார்.
சைக்கிள் சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் உள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: காங்கிரசுடன் கூட்டணி தொடர்பான முடிவு இன்னும் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். மதவாத சக்திகளை எதிர்க்கவே காங்கிரசுடன் கூட்டணி வைப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் அகிலேஷ் டில்லி வந்து ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
English Summary:
NEW DELHI: Uttar Pradesh assembly elections, with the ruling Samajwadi Party has decided to confront the Congress.

Monday 16 January 2017
நவீன் ஜிண்டாலுக்கு எதிரான நிலக்கரி ஊழல் வழக்கு : இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
புதுடெல்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் மற்றும் பிறருக்கு எதிரான தனது அடுத்த விசாரணை யின் இறுதி அறிக்கையை சிபிஐ நேற்று தாக்கல் செய்தது.
நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய தடய அறிவியல் ஆய் வக அறிக்கைகள், சாட்சிகளின் பட்டியல் மற்றும் அவர்களிட மிருந்து சிபிஐ பதிவுசெய்த வாக்கு மூலங்கள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில் இடம்பெற்றிருந்தன.
அறிக்கை தாக்கல் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணை யின் முன்னேற்றத்தை இது பாதிக்கும் என சி.பி.ஐ.யை கண்டித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள பட்டய கணக்காளர் சுரேஷ் சிங்கால் அப்ரூவர் ஆக மாறுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கோரியுள்ளார். அவர் அளித்த தகவலின்படி இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
சுரேஷ் சிங்கால் முறையீடு:
மேலும் மன்னிப்பு கோரும் சுரேஷ் சிங்கால் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டிய லில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமர்கொண்டா - முர்கதாங்கல் நிலக்கரி சுரங்கத்தை ஜிண்டால் குழுமத்தின் ஜிண்டால் ஸ்டீல், ககன் ஸ்பாஞ்ச் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் :
இந்த வழக்கில் நவீன் ஜிண்டால் தவிர, முன்னாள் நிலக் கரித் துறை அமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, நிலக்கரித் துறை முன்னாள் செய லாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஜிண்டால் ரியால்டி இயக்குநர் ராஜீவ் ஜெயின், ககன் ஸ்பாஞ்ச் இயக்குநர்கள் கிரிஷ்குமார் ஜுனேஜா, ஆர்.கே.சரஃப், சவுபாக்யா மீடியா நிர்வாக இயக்குநர் கே.ராமகிருஷ்ணா ஆகி யோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
English Summary:
New Delhi: In the case of coal block allocation scam, former Congress MP and industrialist Naveen Jindal and others against the CBI yesterday filed its final report in the next session.

காங்.,கில் இணைந்தார் சித்து; முடிவுக்கு வந்தது இழுபறி
புதுடில்லி : கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான நவ்ஜோத் சிங் சித்து, 53, நீண்ட இழுபறிக்கு பின், நேற்று(ஜன.,15), முறைப்படி காங்கிரசில் இணைந்தார்.
விலகல்:
கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான, நவ்ஜோத்சிங் சித்து, அந்த கட்சியிலிருந்து விலகி, பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், ஆம் ஆத்மியில் சேரப் போவதாக தகவல் வெளியானது. டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, மூத்த தலைவர்கள் பலருடன், பல கட்ட பேச்சு நடத்தியும், அந்த முயற்சி நிறைவேறவில்லை.
குழப்பம்:
இதன்பின், புதிய அமைப்பை துவங்கினார்; அதுவும் போணியாகவில்லை. இதையடுத்து, சித்துவின் கவனம், காங்., பக்கம் திரும்பியது. அக்கட்சி யில் சேருவதற்கு முன்னோட்டமாக, சித்துவின் மனைவி, நவ்ஜோத் கவுர், காங்.,கில் சேர்ந்தார்; ஆனாலும், அதிகாரபூர்வமாக காங்கிரசில் சேராமல் இருந்தார், சித்து. இதனால், அவரது நிலைப்பாடு குறித்து குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், காங்., துணைத் தலைவர், ராகுலை, நேற்று சித்து சந்தித்து, முறைப்படி காங்கிரசில் இணைந்தார்.
வருகை பலம்:
இதுகுறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தில், ஆளும் அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவரும், ஒன்று சேர்ந்துள்ளோம். சித்துவின் வரவால், காங்., வலிமையடைந்துள்ளது. தேசிய சிந்தனையும், மனம் திறந்து பேசும் தன்மையும் உடைய சித்து, காங்., ஆட்சி மீண்டும் மலர பணியாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலில் போட்டி?
பஞ்சாபில், காங்., சார்பில், மூத்த தலைவர், அமரிந்தர் சிங், முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். தற்போது, அமிர்தசரஸ் தொகுதி, எம்.பி.,யாக இருக்கும் அவர், முதல்வரானால், காலியாகும் அந்த இடத்தில் போட்டியிட, சித்து விருப்பினார். ஆனால், அதற்கான வாக்குறுதியை, காங்., அளிக்கவில்லை. பஞ்சாபில், 117 சட்டசபை தொகுதிகளில், 100 இடங்களுக்கு, காங்., ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அமிர்தசரஸ் கிழக்கு உட்பட, 17 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனவே, சித்து, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary:
New Delhi : Cricketer-turned-BJP, former MP Navjot Singh Sidhu, 53, after a long tug, yesterday (Jan., 15), formally joined the Congress.

Thursday 12 January 2017
2090 ல் கூட காங்., ஆட்சிக்கு வர முடியாது : வெங்கையா தாக்கு
புதுடில்லி : ‛‛2019 ம் ஆண்டில் இல்லை, 2090 ம் ஆண்டு ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் இனி ஆட்சிக்கு வர முடியாது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டில்லியில், நேற்று நடந்த காங்., தேசிய மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், ‛2019 ம் ஆண்டு மத்தியில் மீண்டும் காங்., ஆட்சிக்கு வரும் போது தான் நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கும்' என்றார். ராகுலின் இந்த கருத்திற்கு மத்திய அமைச்சர் வெங்ககையா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா,‛‛, ராகுல் பகல் கனவு காண்கிறார். 2019 ம் ஆண்டு நல்ல காலம் பிறக்கும் என்ற ராகுலின் கருத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. காங்கிரசிற்கு இனி ஏது நல்ல காலம்? ஊழல், முறைகேடுகள், கொள்கை முடக்கம், செயல்பாடற்ற தன்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் காங்., ஆட்சி இழக்க காரணம். இதெல்லாம் நல்ல காலமா? 2019 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என காங்., பகல் கனவு காண்கிறது. 2019 அல்ல 2090 ம் ஆண்டு ஆனால் கூட காங்கிரசால் இனி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது,‛‛ என, தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: '' In the year 2019, not in 2090, but Congress can not come to power again, '', Union Minister Venkaiah Naidu said.

Wednesday 11 January 2017
காங்., நிர்வாகிகளுடன் ராகுல் தேர்தல் வியூகம்
புதுடில்லி: வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பிய, காங்., துணைத் தலைவர் ராகுல், பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வெளிநாட்டு பயணம்:
பஞ்சாப்பில், அகாலிதளத்தை சேர்ந்த, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம், மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்து, நாடு திரும்பிய, காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று, பஞ்சாப் மாநில காங்., தலைவர்களை சந்தித்தார். அப்போது, மாநில சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார். அதில், காங்., மூத்த தலைவர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காங்., கட்சியில் சித்து:
ஆலோசனைக்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சித்து, விரைவில் காங்கிரசில் இணையவுள்ளதாகவும், அவர் அல்லது அவரது மனைவிக்கு, தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
English Summary:
New Delhi, returned to finish off an overseas trip, Cong., Rahul, preparatory work with regard to the Punjab assembly elections, the party held consultations with key executives.

Tuesday 10 January 2017
அதிகார மையமாக இருந்தாரா சோனியா?: காங்., மறுப்பு
புதுடில்லி : பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது அவரை இயக்கும் அதிகார மையமாக சோனியா விளங்கினார் என்ற குற்றச்சாட்டை காங்., மறுத்துள்ளது.
முக்கியத்துவம்:
தேசிய ஆலோசனைக் குழுவின் 710 கோப்புகளை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. இதில் காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த சோனியாவின் பரிந்துரைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தார் என்பது தெரியவந்தது. இதன் மூலம் பிரதமரை மறைமுகமாக இயக்கும் அதிகார மையமாக சோனியா இருந்தார் எனக் கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டை காங்., மறுத்துள்ளது.
மறுப்பு:
இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு 2006 முதல் 2010ம் ஆண்டு வரையிலான கோப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. அக்காலகட்டத்தில் தேசிய ஆலோசனைக் குழுவில் சோனியா இடம்பெறவில்லை. ஆகவே பிரதமர் மன்மோகன் சிங்கை இயக்கும் சக்தியாக சோனியா இருந்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறு.
தொலைநோக்கு சிந்தனை:
மேலும், தேசிய ஆலோசனைக்குழுவுக்கு சோனியா தலைவராக இருந்தபோதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் வனப் பாதுகாப்பு சட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. குழு அளித்த ஆலோசனைகளை, தனது தொலை நோக்கு சிந்தனையில் ஆராய்ந்த மன்மோகன் சிங், அதன்மேல் நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
New Delhi: Prime Minister Manmohan Singh, Sonia was the power center of the accusations directed at him Cong., Refused.

தேர்தலில் செல்லாத நோட்டு பிரச்னை எதிரொலிக்கும் : மன்மோகன் சிங் ஆரூடம்
புதுடில்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ''செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்,'' எனக் கூறினார்.
பஞ்சாப், உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ள, பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை, காங்., நேற்று வெளியிட்டது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: பஞ்சாப் தேர்தலில், பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்படும். அதே நேரத்தில், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., அரசின் செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
போதை பொருளுக்கு எதிரான கடும் நடவடிக்கை, அதன் விற்பனையாளர்கள் சொத்து பறிமுதல்; விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி; ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை, தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இன்று சேருகிறார் சித்து :
பா.ஜ.,வின், எம்.பி., பதவியில் இருந்து விலகிய, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, தனிக் கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளில் ஏதாவது ஒன்றில் அவர் இணைவார் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரசில், அவர் இன்று முறைப்படி இணைகிறார்.
English summary:
NEW DELHI: Punjab assembly elections, the Congress's election statement, the former prime minister, Manmohan Singh, '' Invalid currency note issue, including the state assembly elections in Punjab, will be the biggest problem, '' he said.

Monday 9 January 2017
அரசுக்கும் வங்கிகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை : ராபர்ட் வதேரா
புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், திட்டமிடப்படாமல், அரசு கொண்டு வந்துள்ள இந்த பயனற்ற திட்டத்தால் ஆரம்பத்திலேயே மத்திய அரசு மக்களின் அதிருப்தியையும், வெறுப்பையும் பெற்றுள்ளது. கிரெடிட் கார்டு அல்லத டெபிட் கார்டுகளை பயன்படுத்த மக்களை பழக்கயிருக்க வேண்டும். பணமில்லா பரிவர்த்தனையையும் பழக்கி இருக்க வேண்டும்.
அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே சரியான அளவில் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். இவர்களின் கடுமையான நடவடிக்கைகளை ஏற்ற வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை வற்புறுத்தும் வகையிலேயே இவர்களின் கொள்கைகள் உள்ளது. கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் போடுபவர்களுக்கு 0.75 சதவீதம் சலுகை அளிப்பது ஏன்? வங்கிகள், பெட்ரோல் பங்குகளிடம் இருந்து எம்டிஆர் (merchant discount rate) ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
English summary:
NEW DELHI: The bill was withdrawn in the case of a lack of coordination between the central government and the banks, Congress president Sonia Gandhi's son-in is accusing Robert Vadra.