புதுடில்லி: சிறைக்கைதியின் பினாமிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வீடு முன் தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கட்ஜூ கூறியுள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட செய்தி:
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் நாட்டையே தமிழக இளைஞர்கள் வியக்க வைத்தீர்கள். தற்போது, மீண்டுமொரு போராட்டத்தை இளைஞர்கள் நடத்த வேண்டும் என தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் விரும்புகிறது.
ஊழல்வழக்கில் சிறையில் உள்ள கைதியின் பினாமிக்கு, வெட்கமில்லாமல் ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.,க்கள் வீடு மற்றும் அலுவலகம் முன் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும்
எம்.எல்.ஏ.,க்கள் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அவர்களுக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அவர்களை சமூகத்தில் புறக்கணிக்க செய்வதுடன், எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்படக்கூடாது.
சோழர்களின் வழிவந்த தமிழக மக்களின் கோபத்தை எம்.எல்.ஏ.,க்கள் உணர செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
NEW DELHI: Supported by a prisoner to the proxy AIADMK MLAs in front of the house of former Supreme Court Chief Justice Katju said that young people will have to deal.