சென்னை: சசிகலா புஷ்பா எம்.பி., நிர்வாணமாக இருந்து கொண்டு, மசாஜ் செய்ய சொன்னார். செய்யாததால் எங்களை அடித்து உதைத்தார். இதற்கு அவரது தாய் கவுரியும் உடந்தை. மேலும், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகனும், மகன் பிரதீப் ராஜாவும் எங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தினர் என்று கூறி, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அணைக்குடியைச் சேர்ந்த சகோதரிகள் பானுமதியும், ஜான்சிராணியும், கடந்த 8.8.16ல் புகார் அளித்தனர்.
அதையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவர் மீதும் வழக்குப் பதியப்பட்டது. உடனே, உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஜாமீன் வாங்கினார் சசிகலா புஷ்பா. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு; இதிலிருந்து நான் வெளியே வருவேன் என்றும், சசிகலா புஷ்பா சொல்லி வந்தார்.
திடீர் வாபஸ்:
இந்நிலையில், இந்த வழக்கிற்காக, நாங்கள் கொடுத்த புகார் பொய்யானது என்று சொல்லி, புகார் அளித்த சகோதரிகள் பானுமதியும், ஜான்சிராணியும், புகாரை வாபஸ் பெறுகிறோம் என்று, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
அதில், சிலருடைய தூண்டுதலின் பேரில், அரசியல் காரணங்களுக்காக புகார் கொடுக்கச் சொன்னதால், நாங்கள் பொய்யாக புகார் கொடுத்து விட்டோம். அதை, மேற்கொண்டு விசாரிக்க வேண்டாம் என்றும் பானுமதியும், ஜான்சிராணியும் கேட்டுள்ளனர். இதையடுத்து, மேற்கொண்டு, இந்த வழக்கை ரத்து செய்வது குறித்து, போலீசார் யோசித்து வருகின்றனர்.
இது குறித்து, சசிகலா புஷ்பா கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருப்பவர்கள் சிலருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தது. என்னை எப்படியாவது, கட்சியில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று, தொடர்ந்து திட்டம் போட்டு வந்தனர். அதனால்தான், திருச்சி சிவா மேட்டரை பெரிதாக்கி, என்னை சிக்கலுக்குள் ஆழ்த்தப் பார்த்தனர். அந்த பிரச்னை பெரிதாகவில்லை என்றதும், என் மீது பொய்யாக வழக்குப் போட்டு, என்னை அரசியல் செய்ய விடாமல் முடக்கி விடலாம் என கணக்குப் போட்டு செயல்படத் துவங்கினர். அப்படியொரு வழக்குத்தான், என் வீட்டில் வேலைபார்த்த பெண்களை வைத்து, பொய் புகார் கொடுக்க வைத்தனர். அதை நான், சட்டரீதியாகவே அணுகினேன்.
சிலர் நினைத்தபடி, எதுவுமே நடக்கவில்லை. சட்ட உதவி கொண்டு, நான், அவர்களை எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சூழலில், என் மீது பொய் புகார் கொடுத்த அந்த பெண்கள், புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். சிலரது தூண்டுதலின் பேரிலேயே, பொய்யாக புகார் கொடுத்ததாகவும், அவர்கள், தங்கள் புதிய மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நான் தர்மத்தை நம்பி பயணிக்கிறேன். அதனால், இந்த மாதிரி புனைவுகளுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். அன்றைக்கு சொன்னதுதான்… தர்மம் என்றைக்கும் ஜெயிக்கத்தான் செய்யும். என் மீது பொய் வழக்குப் போட வைத்தவர்கள், நிஜ வழக்கில் ஜெயிலுக்குப் போய் உள்ளனர். அதுதான், இறைவன் திருவிளையாடல்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: Sasikala Pushpa MP, while nude, told to massage. If they do not beat us. The complicity of her mother Gauri. Moreover, Tilak Lingeshwara Sasikala Pushpa's husband, son Pradeep sexually pestered us, saying that the king, Thoothukudi District, Pudukkottai all-women police station, the sisters Bhanumathi, jancyrani, had complained in the past 8.8.16.