திருநெல்வேலி: கமலுக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வள்ளியூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி
மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள பழவூரை சேர்ந்தவர் ஆதிநாதசுந்தரம் 31.
இவர் அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்க தலைவராகவும் அங்குள்ள நாறும்பூநாதர் கோயில் பக்தர்கள் பேரவை செயலாளராகவும் உள்ளார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார்.
அதில் பெண்கள் குறித்து எழுந்த கேள்விக்கு, ‛மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடுவதை புத்தகமாக படித்துக்கொண்டிருக்கும் ஊரு இது..' எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பேச்சு இந்துக்களை அவமதிக்கும் செயலாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அபராதம் விதிக்கும்படியும் கேட்டு மனுசெய்தார். நடிகர் கமலஹாசனுக்கு எதிரான வழக்கு என்பதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் வள்ளியூர் நீதிமன்றம் புகாரை விசாரித்து அறிக்கை தர பழவூர் காவல் நிலையத்திற்கு வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.