ரேபரேலி: உ.பி.,க்கு சொந்த மகன்கள் உள்ள நிலையில் தத்தெடுத்த பிள்ளைகள் வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா கூறினார்
ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: தன்னை மகனாக உ.பி., தத்தெடுத்து கொண்டதாக மோடி கூறுகிறார். ஆனால், வளர்ச்சிக்காக உ.பி.,யை யாராவது தத்தெடுக்க வேண்டுமா? உ.பி.,க்கு சொந்த மகன்கள் (ராகுல், அகிலேஷ்) உள்ள போது, தத்தெடுத்த மகன்கள் தேவையா? உங்களுக்காக உழைப்பவர்களுக்காக ஓட்டு போடுங்கள். தவறான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு வேண்டாம். வளர்ச்சி பற்றி அமேதி மக்களிடம் கேட்க வேண்டும். உ.பி., இளைஞர்கள் தலைவராகவும், அமைச்சர்களாகவும், மாநில வளர்ச்சிக்காகவும் உழைக்கும் திறன் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வெற்று வாக்குறுதி:
முன்னதாக இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: உ.பி.,யில் மின்சார கட்டணம் பாதியாக குறைக்க வேண்டும். விவசாய கடன்தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்களுக்கு உரியவிலை கிடைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மோடி நினைத்தால், 15 நிமிடத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய அவர் மறுப்பது ஏன்? மோடி வெற்று வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கிறார். ஆனால் எதையும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளின் ரூ.70 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பீஹாருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என மோடி கூறினார். ஆனால் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு மோடி எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
Rae Bareli, UP, to the children's own sons have not adopted the state Congress chief Sonia Gandhi's daughter Priyanka Gandhi told