Wednesday, 22 March 2017
Tuesday, 28 February 2017
சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சி: கே.பி.முனுசாமி தாக்கு
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் இருந்து சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சி செய்கிறார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் மீது தாக்கு :
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில், கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செங்கோட்டையன் துரோகம் செய்து விட்டார். சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சி செய்கிறார். சசிகலாவை காப்பாற்றுவதற்காக கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாக பொய் தகவல் சொல்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வரை அவரை பார்த்ததாக செங்கோட்டையன் ஏன் கூறவில்லை? உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதை செங்கோட்டையன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக யாரும் கூறவில்லை. அதிமுக.,விற்கு சம்பந்தம் இல்லாதவர் டி.டி.வி.தினகரன். அதனால் அவரைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஓ.பி.எஸ்.,ன் சுற்றுப் பயண தேதி அறிவிக்கப்படும் என்றார்.

Friday, 24 February 2017
து.பொ.செ., ஆனார் தினகரன்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அக்கா மகன் தினகரன் அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளராக, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.ஜெயலலிதாவால் கட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டவர் தினகரன். ஆனால், ஒரு கட்டத்தில் ஓரம் கட்டப்பட்டார். 2011ம் ஆண்டு இறுதியில், சசிகலா, தினகரன் உட்பட அவர்களின் குடும்பத்தை சேர்ந்த, 14 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு பிறகு சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு கட்சிக்குள், போயஸ் தோட்ட வீட்டுக்குள்ளும் சேர்க்கப்பட்டார்.
அந்த கடிதத்தில், ‛ என் குடும்பத்தினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, கூறியிருந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவே பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியை அவர் கைப்பற்ற முயற்சித்த போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனால், சிறைக்கு செல்லும் முன் தன் உறவினர்கள் தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேசை கட்சியில் சேர்த்தார். அடுத்த நாளே, துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் தினகரன் நியமிக்கப்பட்டார்.
இன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர், துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Monday, 6 February 2017
அ.தி.மு.க.வின் பொதுசெயலாளர் பதவி முதல் முதலமைச்சர் தேர்வு வரை... என்ன நடந்தது?
இன்று அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஒ.பன்னீர்செல்வம் தனது முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, சசிகலா முதலமைச்சர் பொறுப்பேற்று கொள்வதற்கும் முன்மொழிந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொது செயலாளருமான ஜெயலலிதா இறந்தார். அன்று இரவே அவசர அவசரமாக கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு தமிழகத்தின் முதல்வராக ஒ.பன்னீர்செல்வத்துக்கு, ஆளுநர் வித்யாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றக்கொண்ட பின்னர் தான் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையை விட்டு வெளியே வந்தது. இந்த நிலையில், 'சசிகலா தான் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் பலர் கூறி வந்தனர். இந்தச் சூழலில் டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஒரு மனதாக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியக்கப்பட்டார். அடுத்த நாள், மாலை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் வைத்துவிட்டு உறுதிமொழி எடுத்துகொண்டார் சசிகலா. அதன்பின்னர், 31-ம் தேதி நண்பகல், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக, அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் தமிழகத்தில் எந்த முதலமைச்சருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. அதாவது குடியரசு தினத்தில் தனது மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் கலந்துக்கொண்ட பன்னீர்செல்வம் தேசியக் கொடியேற்றினார். வழக்கமாக, குடியரசுத் தின விழாவில் கவர்னர்தான் கொடியேற்றுவார். தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநர் என்பதால், அவர் மகாராஷ்டிரா மாநில குடியரசுத் தின விழாவில் இருந்ததால் ஒ.பன்னீர் செல்வதுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கானச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம், தமிழக மக்களிடையே ஒருவித நன்மதிப்பைப் பெறத்தொடங்கினார் பன்னீர்செல்வம். இது சசிகலாவின் குடும்பத்துக்கு தாங்கிக் கொள்ளமுடியாத கோபத்தை உண்டாக்கியது. இதன் விளைவாக 27 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலா "அம்மாவின் பிறந்தநாளை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்றும் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தயங்காமல் சொல்லாலாம்" என்றும் கூறினார். மேலும், "அம்மா விட்டு சென்ற இந்தக் கழக பணிகளை நாம் சிறப்பான முறையில் வழிநடத்த வேண்டும்." என்றார். இது மறைமுகமாக பன்னீர்செல்வத்துக்கு வைக்கப்பட்ட 'செக்' என்று அ.தி.மு.க. அலுவலகத்தில் செய்திகள் பரவியது. இதற்கு அடுத்தபடியாக சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களுடனும், ஜோசியருடனும் கலந்து பேசினார். அது தன்னை முதலமைச்சராக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் என அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களிடம் இருந்து செய்திகள் வந்தன.
சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் (4-2-17) கூட்டம் நடத்தப் போவதாக அழைப்பு விடுக்கப்பட்டு கூட்டம் நடந்தது. அதற்கு 'சின்னம்மா தலைமையில் நாளை (5-2-17) நடக்கபோகும் கூட்டத்துக்கு அனைவரும் அவசியம் வரவேண்டும் என்றும் போயஸ் கார்டனிலிருந்து கட்சி அலுவலகம் வரை சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு நிர்வாகியும் ஆட்களை அழைத்து வரவேண்டும்' என்று உத்தரவு விடப்பட்டிருந்தது. மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் மீட்டிங்கில் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டும் என்பதோடு மற்றோர் அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. அதில் 'உங்கள் தொகுதிகளுக்கு என்னென்ன தேவையோ? அதையெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு எடுத்து வரவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதனால் அனைத்து மாவட்டங்களிருந்த எம்.எல்.ஏக்களும் எதற்காக இதெல்லாம் கேட்கிறார்கள் என்கிற குழப்பத்துடனே வந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (5-2-17) காலை எண்ணூர் கப்பல் விபத்து பகுதிகளை முதல்வர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது பேசிய பன்னீர்செல்வம், 'இன்னும் ஓரிரு தினங்களில் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்' என்று சொன்னார். அப்போது பத்திரிகையாளர்கள் சசிகலா முதல்வராக பதவி ஏற்க முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வருகிறதே என்று கேட்க. அதற்கு பன்னீர்செல்வம் புன்சிரிப்பை மட்டும் பதிலாக தந்து இடத்தை காலி செய்தார். அதன் பின், சுமார் மதியம் ஒரு மணியளவில், நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் அ.தி.மு.க வின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலாவை ஏக மனதாக ஏற்றுக்கொள்கிறோம் என்று பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து வாங்கப்பட்டது. சரியாக இரண்டரை மணியளவில் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி முடிக்கப்பட்டது. அதன்பின் மூன்று மணியளவில் பன்னீர்செல்வம், "தமிழக முதலமைச்சரான ஒ.பன்னீர்செல்வம் ஆகிய நான் சட்டமன்ற குழுத் தலைவராக சின்னம்மா பதவி ஏற்பதை வழிமொழிகிறேன். மேலும் தற்போது நான் வகித்துவரும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்றும் இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பிக்கபோவதாகவும்" கூறினார்.
உடனே கரவொலியில் அதிர்ந்த கட்சி அலுவலகம் இதை நாங்கள் ஒரு மனதாக வரவேற்கிறோம் என்று கூறினார்கள். இந்தச் செய்தியானது அப்பொழுதே போயஸ்கார்டனுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சில நிமிடங்களில் கட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார் சசிகலா. அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார் பன்னீர்செல்வம். பின் கூட்டத்தில் பேசிய சசிகலா "ஒரு மனதாக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா இறந்த உடனே பன்னீர்செல்வம் என்னை முதல்வராக பொறுப்பேற்று கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் அப்போதைய மனநிலையில் நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். அதன்பின் அனைவருமே என்னை முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று கூறினார்கள். அதனால்தான் தற்போது முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள முன்வந்தேன். மேலும் அம்மாவின் வழியை நாம் பின்பற்றி கட்சியினை வழிநடத்த வேண்டும். நாம் அனைவரும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் சசிகலா.
Sunday, 22 January 2017
தனித்தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு , ஆபாசவார்த்தை; திசைமாறும் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஹிப்ஹாப் ஆதி திடுக்
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம் தற்போது திசைமாறுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த போராட்டத்தில் பல தரப்பு நோக்கம் கொண்ட குழுக்கள் புகுந்துள்ளதாகவும் , தாம் இதில் இருந்து விலகுவதாகவும், பிரபல இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி திடுக் தகவல் வெளியிட்டுள்ளார். இவர் ஆரம்ப காலம் முதல் ஜல்லிக்கட்டுக்காக பேராடுவதில் இவருடைய முக்கிய பங்கும் இருந்தது என்பது குறிப்பிடத்க்கது. இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதியபபட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தில் நானும் பங்கேற்றேன். அடையாளம் தெரியாத கும்பல் சிலர் வருகின்றனர். ஆளுக்கு ஒரு கோஷங்கள் எழுப்புகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க சிலர் சதி செய்கின்றனர். போராட்டத்தை திசை திருப்ப சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. சிலர் தனித்தமிழ்நாடு பேனரை வைத்து போராட்டம் செய்கின்றனர். தொடர் போராட்டங்களில் முதல் இரண்டு நாட்கள் நான் அலங்காநல்லூர், சென்னை, கோவையிலெல்லாம் நான் இருந்தேன்.
தேசியக் கொடியை கீழே போட்டு.,
ஏனென்றால் இது அறப்போராட்டங்களாக நடந்தது. ஆனால் கோவையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மனம் வருந்தச் செய்தது. அங்கே சிலர் திடீரென வந்து எங்க பகுதியில் வந்து பேசுங்க என்றார்கள். என்ன என்று பார்த்தால் அங்கே தேசியக் கொடியை கீழே போட்டு அவமதித்து, இந்தியா என்று கேவலப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள்.தேசிய விரோத செயலுக்கு நான் ஒருபோதும் துணை போக மாட்டேன்.அதை அவர்களிடம் தெளிவா சொல்லி விட்டேன். உடனே, “ஹிப்ஹாப் தமிழா நீ உண்மையான தமிழனா இருந்தா இங்கே வந்து போராடு”ன்னு சொல்றாங்க. இன்னொருத்தர், “மத்திய அரசு ஹிந்துக்களுக்கே முன்னுரிமை தருகிறது. இஸ்லாமியர்களுக்கு தரவில்லை” என்றெல்லாம் பேசுகிறார்கள். இதெல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை. கடந்த ஒருவருடமாக நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பீட்டாவுடன் இணைத்து கெட்ட வார்த்தைகளைக் கொண்டு எழுத ஆரம்பித்தார்கள்.குடும்பப் பெண்கள் உள்ள இடத்தில் திடீரென சில கும்பல்கள் வந்து மோடி, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் பேசி கூடவே தகாத வார்த்தைகளைப் பேசினார்கள். மனம் வருந்தி நான் அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்து விட்டேன். அதன் பிறகு பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் இதே போல நடந்து கொண்டிருக்கிறது. “பெப்ஸி, கோக் தடை செய்யவில்லையென்றால் நான் செத்து விடுவேன்” என்கிறான். நீ ஏன் வாங்குற? எதற்காக போராடுகிறோம் என்று தெரியாமல் திசை திரும்பி விட்டது.
ஆபாச வார்த்தைகளில் திட்டுவதா ?
அடையாளம் தெரியாதவர்கள் வருகிறார்கள். பேசுகிறார்கள் அவர்கள் எங்கிருந்து வந்தனர். பெப்சி குறித்து பேசுகின்றனர். தேசிய கொடியை எரிக்க வேண்டும் என்றனர். யார் என தெரியவில்லை. சிலர் நீங்கள் கிளம்புங்கள் என கூறியதை அடுத்து நான் கிளம்பினேன். தேச விரோத செயல்களில் ஒரு போதும் ஈடுபட மாட்டேன். தேச தலைவர்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவது நல்ல நோக்கமாகாது. சமூக விரோத கும்பல்கள் போராட்டத்தில் ஊடுருவியுள்ளனர். தனித்தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு என போராட்டத்தை திசை திருப்பக்கூடாது. எனக்கூறினார்.

போராட்டம் போதும்: மாணவர்களுக்கு வேண்டுகோள்
சென்னை: ‛ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார். காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;
ஜல்லிக்கட்டு ஆர்வலர்களே, இறுதியில் மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரசால் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முதல் கட்ட நடவடிக்கையாக எடுத்து கொண்டு, சட்டரீதியாகவும், பார்லிமென்ட் மூலமாகவும் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் பணிகளை துவக்குவோம். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தவே, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரும் வாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
பிரதமர், முதல்வரை நம்புங்கள்:
சுமூகமான தீர்வை ஏற்படுத்த நமது பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களை நாம் நம்ப வேண்டும். நாளை, அலங்காநல்லூரில் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்புவோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவியுங்கள். புதிய பிரச்னைகள் ஏதும்வேண்டும். காளைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். ஒரு பிரச்னை ஏற்பட்டால், விலங்குகள் நல அமைப்புகள் அதை கோர்ட்டுக்கு எடுத்த செல்ல தயாராக உள்ளனர்.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நாம் அமைதியை கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு சட்ட ரீதியாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சிப்போம். இதற்காக, பிரதமர், மூன்று மத்திய அமைச்சர்கள், முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள்பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அளித்துள்ள வாக்குறுதியை நம்புவோம். மாணவர்களும், மக்களும் போராட முன்வராவிட்டால் இந்த வெற்றி கிடைத்து இருக்காது. இந்த சூழ்நிலையில் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும். அதன் பிறகு சிறிது ஓய்வு எடுத்து விட்டு, இது குறித்து சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் நெல்லையில் ஆலோசனை நடத்துவோம்.
மாணவர்களை வணங்குகிறேன்:
போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு குழுவின், கல்லூரியின் பிற அமைப்புகளின் தலைவர்களை அடையாளம் காணுங்கள். நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். அர்த்தமுள்ள தீர்வுகளை, அரசியல் சட்டப்படி தான் ஏற்படுத்த வேண்டும். இதற்கான போராட்டங்களும் அந்த வகையில் தான் இருக்க வேண்டும். இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட காரணமாக இருந்த மாணவர்களை வணங்குகிறேன். இந்த போராட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் கடந்த மாதம் மாற்றப்பட்டு விட்டார். விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்ற புதிய வாரியம் இன்னும் இரண்டு மாதங்களில் செயல்பட துவங்கும். மேலும், பீட்டா அமைப்பின் நிதி மோசடி குறித்து விசாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம். முறையான புகார்கள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்உறுதி அளித்துள்ளார். விரைவில் அந்த புகார் மனு வெளியிடப்படும். அதை அனைத்து தரப்பினரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.

English summary:
Chennai: 'Jallikattu staged for the students, the young people have to struggle to put an end to this, "he said karthikeya sivasenapathy, Kangeyam head of cattle research center. Fed Chairman karthikeya sivasenapathy, Kangayam cows research report on his Facebook page, are as follows;
Friday, 20 January 2017
''இந்திய சட்டப்படிதான் ஜல்லிக்கட்டுக்குத் தடை!''- பீட்டா தலைவர் குதர்க்கம்
January 20, 2017Ban PetaJallilkattu, marina jallikattu, MarinaProtest, Peta, tami nadu, weDoJallikattu
‛ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய சட்டப்படிதான் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என பீட்டா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா தெரிவித்துள்ளார்.
பீட்டா தலைவர் பூர்வா ஜோஷிபுரா
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், சேவாக், முகமது கைஃப், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் போன்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ‛ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றால் குத்துச்சண்டை போட்டிக்கும் தடை விதிப்பதுதான் நியாயமானதாக இருக்கும்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
‛டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது. அதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் தங்கையும், விலங்குகள் நல ஆர்வலருமான அம்பிகா சுக்லாவும் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது, அம்பிகா சுக்லாவை நோக்கி, 'முரட்டுக்காளை' படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலைப் பாடி கலாய்த்து எடுத்து விட்டார் ஸ்ரீகாந்த். அம்பிகா சுக்லாலோ தொடர்ந்து எதையோ ஒப்புக்கு பேசி சமாளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில்' தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க, தமிழ் கலாச்சாரம் வாழ்க' என ஸ்ரீகாந்த் பேசி முடித்தார். அம்பிகா சுக்லா வாயை மூடிக் கொண்டார்.
எப்போதும் அமைதியாகவே இருக்கும் தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டு நாடே வியக்கிறது. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும், சேலத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
இதற்கிடையே பீட்டா இந்தியா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா ஆங்கில இணையதளத்துக்கு ஒரு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, ''ஜல்லிக்கட்டுத் தடைக்கு நாங்கள் காரணம் இல்லை. எங்களைப் போலவே பல அமைப்புகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அதில் நாங்களும் ஒன்று. இந்திய சட்டப்படித்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உரிமையை, பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். தமிழகத்தில் 144 விவசாயிகள் இறந்து போனார்களே... அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள். நாட்டுக் காளைகளை காக்க பல்வேறு வழிகள் உள்ளன.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படும் நாட்டு மாடுகளை காக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களது அந்த முயற்சிக்கு நீங்களும் உதவ முன்வாருங்கள். அவைகளும் நாட்டு மாடுகள்தானே. இறைச்சிக்காகவும், தோல் போன்றத் தேவைகளுக்காகவும் அவைகள் கொல்லப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதால் நாட்டு மாடுகள் அழிவது குறைவுதான்.
இந்தியாவின் பிற மாநிலங்கள் நாட்டு மாடுகளை காப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்து ஆதாயங்கள் பெறுகின்றன. நமது அரசியல் அமைப்பு சட்டம், ஒவ்வொரு இந்திய குடிமகனும் விலங்குகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. சட்டத்தை மதிப்பது நமது கடமை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழ் கலாசாரம் உயர்ந்தது. இதற்கு மேல் எதுவும் கூறத் தேவையில்லை'' என தெரிவித்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் கெடு விதித்திருந்தனர். தற்போது கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் சங்கமும் நாளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. போராட்டக் களமும் சூடுபிடித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - போராட்டக்காரர்கள்!
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளதால், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு தற்காலிக தீர்வு தேவையில்லை. நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டத்தை கைவிட முடியாது. அதனால் எங்களது போராட்டம் தொடரும். நாட்டு மாடுகளை காப்பதற்கு நடவடிக்கை வேண்டும்' என தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று கடையடைப்பு!
ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், இன்று மாநிலத்தில் பெரும்பாலான வர்த்தகர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சில ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் இன்று ஆட்டோக்கள் இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெரும்பாலான கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில தனியார் பள்ளிகளுக்கும் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கமும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. இதில் அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு என்ற ஒருவார்த்தை, தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரியும் தீ போல பரவி விட்டது. இந்தத் தீயை ஜல்லிக்கட்டு நடத்தி மட்டுமே அணைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்: மெரினாவில் ஹீரோவான காவலர்
மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும்.
மேலும், தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கு, இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்து காவலர்களுக்குமே இதே போன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார்.
இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரை இளைஞர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். இதற்கிடையே அவர் பேசும் போது, சில காவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியழகை தொடர்ந்து பேச வைத்தனர்.
Thursday, 19 January 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம் எழுத்தாளர்: சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு
திருநெல்வேலி : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதில் கிடைக்காவிட்டால் தமக்கு சாகித்ய அகாடமி வழங்கிய யுவ புரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் திருப்பியளிக்க போவதாக லஷ்மி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். படைப்புலகத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக சாகித்யஅகாடமி ‛யுவபுரஸ்கார்' என்னும் இளையோர் விருதினை வழங்கிவருகிறது. தமிழில் 2016ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது, ‛கானகன்' நாவலை படைத்த லஷ்மி சரவணகுமாருக்கு வழங்கப்பட்டது. இது,பளியர்களின் வாழ்வியல் குறித்த படைப்பு. ‛தமிழகம் முழுவதும் நடந்துவரும் தமிழ்பண்பாட்டை காக்கும் போராட்டத்தின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும்' என கோரிக்கை வைத்துள்ள லஷ்மி சரவணகுமார், இன்று 19ம் தேதி மாலைக்குள் இதற்கு ஆதரவான பதிலை மத்திய அரசு அறிவிக்காவிட்டால் நாளை 20ம் தேதி சென்னையில் உள்ள சாகித்யஅகாடமி அலுவலகத்தில் தமது விருதினை திரும்ப அளிக்க உள்ளதாக முகநுாலில் தெரிவித்துள்ளார்.
English summary:
Tirunelveli: Jallikattu available to them in support of the response provided by the Sahitya Academi Award for Yuva Puraskaar Saravanakumar Lakshmi said that it would repay the government.

Wednesday, 18 January 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், தன்னார்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் சேவக், முகமது கைப் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமைதியாக...
இது தொடர்பாக சேவக் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அமைதியாக போராட்டம் நடப்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. இந்த போராட்டம் அமைதியாக தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கேறேன். அமைதியாக நடக்கும் போராட்டம் அனைவருக்கும் பாடமாக அமையும் எனக்கூறியுள்ளார்.
உரிமை:
மற்றொரு வீரர் முகமது கைப் கூறுகையில், தங்களுக்கு விருப்பமானதற்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. போராட்டம் அமைதியாக நடக்க வேண்டிக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்டில், ஜல்லிக்கட்டு கலாசாரம் தொடர்பானது என நண்பர்கள் கூறியுள்ளதை அறிந்துள்ளேன். இதனால் அதற்கு ஆதரவு அளிக்கிறேன். தமிழகத்தின் உணர்வை மதிப்பதாக கூறியிருந்தார்.
தமிழர் வீரம்:
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ கூறியதாவது: தமிழக மக்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக்கூறியுள்ளார். மற்றொரு செய்தியில், தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும்,கடந்த 1963 - 65ல் அலகாபாத் பல்கலையில் பி.ஏ., படித்த போது தமிழ் படித்துள்ளேன். அப்போது, தமிழர் வீரம் பற்றி முதலில் படித்தேன். தமிழக மக்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக்கூறியுள்ளார்.
English Summary:
Chennai: Jallikattu in support of the students, volunteers, have been demonstrating. Support the struggle is intensifying. In this case, the struggle cricketers Virender Sehwag and Mohammad Kaif supported.

தோல்வியில் முடிந்த போலீஸ் முயற்சி
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி,சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 24 மணி நேரத்தை கடந்து போராட்டம் நீடிக்கிறது. நேற்று இரவு, 2:00 மணிக்கு அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
போலீஸ் பேச்சுவார்த்தை:
இன்று காலை முதல், அப்பகுதியில் கூட்டம் அதிகரித்து வருகிறது. மதியம், 12:15 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மாணவர்களிடம் பேசியதாவது:
நான், சில ஆண்டுகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி.,யாக பணியாற்றி உள்ளேன். அப்போது மூன்று முறை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை நடத்தி உள்ளேன். அந்த வகையில் தான்உங்களுடன் பேச வந்துள்ளேன். இங்குள்ள போராட்டகாரர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்; மதுரை அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை நடத்த, பிராணிகள் நல சட்டத்தின் 27 வது பிரிவை திருத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பேசவும், பிரச்னைக்கு தீர்வு காணவும் உங்களின் பிரதிநிதிகள் சிலர் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
ஆனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனால், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஏமாற்றத்துடன் சென்றார்.

Chennai Marina Beach police told students and young people who have accumulated in the negotiations ended in failure. Demand to hold jallikattu, Chennai Marina beach yesterday morning, have been demonstrating for the first students and youth. The struggle to pass the time and lasts 24 hours. Last night, at 2:00 pm, they held talks with the ministers ended in failure.
ஜெயலலிதா மேனரிசம்: தீபாவும் முயற்சி
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா எப்படி தன்னை, ஜெயலலிதாவாக மாற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறாரோ, அதே போலவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தன்னை, அச்சு அசலாக ஜெயலலிதா போலவே மாற்றிக் கொள்ளும் தீவிரத்தில் இறங்கி உள்ளார். அதற்காக, கடந்த ஒரு வார காலமாக, அவரது தி.நகர் வீட்டில், பல்வேறுவிதமான பயிற்சிகள் நடந்துள்ளன.
ஜெ., மேனரிசம்:
இது குறித்து, அ.தி.மு.க., மற்றும் தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரைப் போலவே உடையணிவது, பொட்டு வைப்பது, இரட்டை விரலை உயர்த்திக் காட்டுவது, அவர் பயன்படுத்திய காரை பயன்படுத்துவது, நாற்காலியைப் பயன்படுத்துவது என, சசிகலா தன்னை, அச்சு அசலான ஜெயலலிதாவாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கி, அதை பின்பற்றியும் வருகிறார். ஆனால், தோற்றத்தில் கடுமையான வேறுபாடுகள் இருப்பதால், சசிகலாவுக்கு அது முழுமையாகப் பொருந்தவில்லை. இருந்தாலும், அவர், தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு, அதை செய்து வருகிறார். இதற்காக, தனியாக மேக்கப் பெண்களை நியமித்துக் கொண்டிருக்கும் சசிகலா, தினந்தோறும் அவர்களை வைத்து, மேக்கப் போட்டுக் கொண்ட பின்பே, கட்சி அலுவலகம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்கிறார். போயஸ் தோட்டத்தில் இருந்து, கட்சியினரை சந்திக்க வேண்டும் என்றாலும், ஜெயலலிதா போலவே போடப்பட்ட மேக்கப்களிலேயே வருகிறார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உருவத்தை ஒத்து இருக்கும், அவரது அண்ணன் மகள் தீபாவும், இதே பாணியை செயல்படுத்தத் துவங்கி இருக்கிறார். இதற்காக, ஒரு வார காலமாக, சென்னை, தி.நகர் இல்லத்தில், ஜெயலலிதாவாக தீபாவை மாற்றும் தீவிரத்தில் மேக்கப் பெண்கள் களம் இறங்கினர். ஜெயலலிதா போலவே சேலை, ஜாக்கெட், கொண்டை அணிந்த தீபா, அவரைப் போலவே கையை உயர்த்தி இரட்டை இலையை காண்பிக்கும் மேனரிஷத்தை எல்லாம், ஜெயலலிதாவின் பழைய வீடியோ தொகுப்புகளைப் போட்டுப் பார்த்து, அதைப் போலவே கண்ணாடி முன் நின்று, செய்து பார்த்தார். அதை, அருகில் இருந்த பெண்கள் சரிப்படுத்தினர்.
சிறப்பு போட்டோ ஷூட்:
தொடர்ந்து, சசிகலாவைப் போலவே, சிறப்பு போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. போஸ்டர்கள்; பேனர்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும், தன்னுடைய படங்களாக, தான் வெளியிடும் படங்களையே பயன்படுத்துமாறு தொண்டர்களிடம் தீபா கேட்டுக் கொள்ளவிருக்கிறார். புதிதாக கட்சி ஆரம்பிப்பதற்குள், தன்னை, இன்னொரு ஜெயலலிதாவாக, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில், தீபா உறுதியாக இருக்கிறார். அதற்காகவே, இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றன. இதை, தீபா, முன் கூட்டியே செய்திருக்க வேண்டும். சசிகலாவைப் பார்த்து, தீபா காப்பியடித்தது போல இருக்கிறது. ஆனாலும், ஜெயலலிதாவை ஒத்து இருப்பது தீபாதான் என்பதால், காஸ்டியூம்; மேனரிஷங்களிலும், மக்களின் ஈர்ப்பை, தீபாவே பெறுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Chennai: After her death, how Shashikala herself, she tired to convert, as well as Jayalalithaa's niece Deepa, herself, just as her original print is to get down to change intensity. To that end, the last one-week period, his T Nagar home, there have been a number of different exercises.

Tuesday, 17 January 2017
விடிய விடிய நடந்த போராட்டம் கைதில் முடிந்தது
மதுரை : தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி அலங்காநல்லூரில் 21 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
வாடிவாசல் முன்பு போராட்டம்
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று (திங்கள்கிழமை) காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மதுரை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்ட இளைஞர்கள் வாடிவாசல் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர், ஊர்வலமாக சென்றனர். கடுங்குளிரின் நடுவிலும் விடிய விடிய நடந்த அவர்களின் போராட்டத்திற்கு, உள்ளூர் மக்களும் ஆதரவு தந்து கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் கைது:
இந்நிலையில் இன்று காலை போராட்டக்காரர்களிடம் 10 நிமிடத்தில் கலைந்து செல்லுமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை இழுத்து செல்வதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட போதும், ‛பீட்டா'வுக்கு எதிராக கோஷமிட்டபடியே போலீஸ் வேனில் ஏறினர்.
அனுமதி அளிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் நடத்தியதால் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவித்த போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்தனர். முடிவதாக 21 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்து போராட்டம் கைதில் முடிந்தது.
English Summary:
Madurai : Tamil traditional sport of the demanding gravel Alanganallur who ran the youth in the struggle for more than 21 hours, police arrested and forcibly removed.

பீட்டாவுக்கு தடை; ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை : தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஓ நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் போலீஸ்ராஜ் :
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் திரண்டதுடன், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டு மத்திய, மாநில அரசுகளுக்குத் தங்கள் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
'ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வோம்', என்று வாக்குறுதி அளித்த மத்திய பா.ஜ. அரசின் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தன்னுடைய இயலாமையை ஏற்று, வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதியில்லை' என்பதைத் தெரிவித்து விட்டார். 'இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்' என உறுதியளித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசோ, தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்காகக் குழுமிய இளைஞர்கள் மீது காவல்துறையை ஏவி, கண்மூடித்தனமானத் தடியடித் தாக்குதலை நடத்தி, தமிழகத்தில் நடப்பது 'போலிஸ்ராஜ்' என்பதை நிரூபித்துள்ளது.
அதன் உச்சகட்டமாக, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குப் பெயர் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை இன்று (16.1-17) தனித்தீவாக்கி கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டுள்ளதற்கு தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையானக் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
தனி அமைப்பு வேணும் :
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளை மத்திய - மாநில அரசுகள் இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு தனது கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தின் தற்போதைய அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியமுறையில் அதனை அமைத்து, அதில் தமிழகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.
அப்போது தான், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் 'விலங்குகளை வதை செய்பவையல்ல' என்பதும் அவை மனிதருக்கும், விலங்குகளுக்கும் காலங்காலமாக உள்ள வாழ்வியல் அடிப்படையிலான உறவை வெளிப்படுத்துபவை என்பதை உணர முடியும்.
பீட்டாவுக்கு தடை வேண்டும் :
இதற்கு ஏற்ற வகையில், மத்திய அரசு உடனடியாக செயல்படுவதுடன், தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஓ நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியா எனும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் பண்பாட்டுக்கூறுகளையும், அவற்றின் தொன்மை அடிப்படைக் கருத்தியலையும் உணராத வெளிநாட்டு அமைப்புகள் வேறு உள்நோக்கங்களுடன் இந்த மண்ணில் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கடைசியில் அதனைத் தகர்க்கும் போக்கினை மத்திய - மாநில அரசுகள் இனியும் கடைப்பிடிக்காமல், உச்சநீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான அனுமதியுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு இனியேனும் அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுப்பதற்காக தீரத்தோடும், உறுதியோடும் போராடி வரும் இளைஞர்கள் தங்களுடைய பண்பாட்டுப் பாதுகாப்புப் போரில் வெற்றி பெறும் நாள் விரைந்து வரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
Chennai: In the name of charity, culture and against the anti-national force and the operation of our company, the beta of the central government and foreign NGO ban immediately the DMK leader MK Stalin has urged action.

Monday, 16 January 2017
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... முதல்வர் ராகத்தோடு பாடிய பாடல்
சென்னை : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று ராகம் போட்டு பாட்டு பாடினார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்
தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கில் முதன்முதலாக நடைபெற்ற அரசு விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.
அப்போது அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்றும் நலம் தானா நலம் தானா என்ற இரு பாடல்களையும் ராகத்தோடு பாடினார்,. முதல்வர் பன்னீர்ச்செல்வம்.
விழாவின்போது அவர் பேசியதாவது:
இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கவிஞர் கண்ணதாசன். இவர் கவிஞர் மட்டுமல்ல,அரசியலிலும் பயணித்தவர். ஒரு முறை இவர் காங்கிரஸ் கட்சியில் சேர நினைக்கிறார். காமராஜரின் அனுமதிக்காக காத்திருக்கிறார். அதை ஒரு சினிமாப் பாடலில், அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, வேறுஎவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி"" என்று பல்லவியாக்கினார்.கவிஞர் கண்ணதாசன். காங்கிரசில் சேர்ந்த பிறகு, அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, ""நலம் தானா? நலம் தானா? உடலும்உள்ளமும் நலம் தானா? என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல் நலத்தை விசாரித்தாராம். இவ்வாறு அந்த விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்பேசினார்.
English Summary:
Chennai: The message to the loved son taunted and sang songs with melodies that opannircelvam CM

Sunday, 15 January 2017
பன்னீரை இறக்கி விட்டு தினகரனை நியமிக்கலாம்; முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கும் சசிகலா உறவுகள்
அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வத்தை, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, தன்னை முதல்வராக்கிக் கொள்ள வேண்டும் என, துடித்தார். இதற்காக, தனது உறவுகள் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி தொடர்ந்து செயல்பட்டு வந்தார். ஆனால், அந்தத் திட்டங்கள், எதிர்பார்ப்புக்கு மாறாக செல்ல, தனது நடவடிக்கையில், வேகத்தைக் குறைத்தார் சசிகலா. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, தனது செயல்பாட்டு வேகத்தைக் கூட்டினார் முதல்வர் பன்னீர்செல்வம்.
கூடவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின், அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளிலும் வேகம் இருக்க, சசிகலா தரப்பு கொஞ்சம் ஆடிப் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பொங்கல் நாளில், சசிகலா தன் உறவினர்களுடன் கூடி, அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஒரு சிலர், நீங்களே முதல்வராவதை தவிர்த்து விட்டு, டி.டி.வி.தினகரனை முதல்வராக்கலாம். அப்படி செய்தால், அதை பன்னீர்செல்வமே கூட எதிர்க்காமல் இருந்து விடலாம் என கூறியுள்ளனர். ஆனால், அதை சசிகலா உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், போயஸ் தோட்டத்து நடவடிக்கைகள் குறித்து நன் கு அறிந்தவர்கள் மூலம் தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.
இது குறித்து, போயஸ் தோட்டத்து நடவடிக்கைகளை முழுமையாக அறிந்தவர்கள் சிலர் கூறியதாவது:
முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்ற சசிகலாவின் தீராத வேட்கை, அவ்வளவு எளிதாக இலக்கை அடையும் எனத் தெரியவில்லை. எந்தப் பக்கம் போனாலும், அது சசிகலாவுக்கு இடைஞ்சலாகவே நிற்கிறது. அதனால், தன்னுடைய முதல்வர் ஆசையை, சிறிது காலம் ஒத்தி வைக்க சசிகலாவே முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.
இருந்தாலும், முதல்வர் பதவியில் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து இருக்க விடுவதில், சசிகலாவுக்கு விருப்பம் இல்லை. அதனால், அந்தப் பதவியில், தன் உறவுக்காரர்களில் இருந்து யாராவது ஒருவரை நியமித்துவிட வேண்டும் என நினைக்கிறார். இதை தன் உறவினர்கள் சிலரிடம் அவர் லேசுபாசாகச் சொல்ல, பொங்கல் நாளில் கூடிய உறவினர்கள், அது குறித்து பேசியுள்ளனர்.
அப்போது, டி.டி.வி.தினகரனை, புதிய முதவராக்கி விடலாம்; வரும் 27ல் அவரை பதவியேற்க வைக்கலாம் என்றெல்லாம் சிலர் ஆலோசனையாக கூறியுள்ளனர். சசிகலா முதல்வராவதை விட, இது சிறப்பானதாக இருக்கும் என்றும், கட்சிக்காரர்களும் இதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வர் என்றும் கூறியுள்ளனர். ஒருசிலர், நடராஜன் பெயரை, முதல்வர் பதவிக்கு உச்சரித்துள்ளனர். அதை சசிகலாவே ஏற்கவில்லை.
தினகரன் குறித்து, தானும் நிறைய யோசிப்பதாகக் கூறியுள்ள சசிகலா, இது குறித்து மேற்கொண்டும் சிலரிடம் தீவிரமாக ஆலோசித்துவிட்டு, தெளிவாக முடிவெடுக்கலாம் என கூறியுள்ளார். இது, தினகரன் தரப்பை உற்சாகப்படுத்தி இருந்தாலும், முதல்வர் பதவியில் அமர்வது குறித்து, தினகரன் குடும்பத்தினர் நிறைய யோசிக்கின்றனராம். அடுத்தடுத்த கட்ட விவாதங்களுக்குப் பின், இந்த விஷயம் மேற்கொண்டு செல்லுமா அல்லது, வேறு திசை நோக்கிப் பயணிக்குமா என்பது தெரியும்.
ஒருவேளை, தினகரன் முதல்வர் என முடிவெடுக்கப்பட்டால், பன்னீர்செல்வம், வழக்கம்போல நிதியமைச்சராகவே தொடருவார்; அவருக்கு, கட்சியில் அவைத் தலைவர் பதவி கொடுக்கப்படலாம். தினகரன், கட்சியின் பொருளாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார்.
English summary:
AIADMK general secretary appointed Sasikala, Chief Paneerselvam, removing the charge from the left, and that would be chief minister himself, could not bear to. For this purpose, and also gave her relations had continued according to plan. But the plans go against expectations, in its action, slowing Shashikala. Using this opportunity, convened by Chief Minister Panneerselvam its operational speed.

ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ: மோடி புகழாராம்
சென்னை: ‛நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ' என்று பிரதமர் மோடி புகழாராம் சூட்டினார்.
துக்ளக் இதழின் 47 வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை ஆற்றினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
பன்முகத் தன்மை கொண்டவர்:
துக்ளக் ஆசிரியராக இருந்த சோவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கும் சோவுக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் பல ஆண்டுகள் நட்பு உண்டு. என் வாழ்வில் நான் சந்தித்த பன்முகத் தன்மை கொண்ட சிலரில் சோவும் ஒருவர். பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர், கதாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகள் கொண்டவர். பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் துக்ளக் ஆசிரியர் என்ற பொறுப்பு அவருக்கான மணி மகுடமாகும்.
ஊழலற்ற அரசியலுக்காக போராடியவர்:
நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் விமர்ச்சித்தவர். விமர்ச்சிக்க கடினமான விசயங்களையும் ஒரே வரி, கருத்து சித்திரம் மூலம் எளிதாக புரிய வைத்தவர். விமர்ச்சிக்கப்பட்டவர்கள் கூட விரும்பும் தன்மை கொண்டவர். சோவின் விமர்சனத்தை தவிர்த்துவிட்டு இந்திய அரசியல் வரலாற்றை எழுத முடியாது. நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காகவே போராடியவர்.
சோவின் மறைவு துக்ளக் பத்திரிக்கைக்கு மிகப்பெரும் இழப்பு. சோ காட்டிய பாதையில் துக்ளக் ஆசிரியராக குருமூர்த்தி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குருமூர்த்திக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தன் உரையை துவக்கினார்.
English summary:
Chennai: "honest, corruption-free politics Cho fought for principles that praised Modi.
Tughlaq magazine's 47th anniversary was held in Chennai today. Prime Minister Narendra Modi's speech delivered at the ceremony by video conferencing.

Friday, 13 January 2017
பன்னீர் பயணம் வெற்றி: தமிழக ‛தாகம் தீர்க்க' ஆந்திரா முடிவு
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்திற்கு 2. 5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது வரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல் முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்., நடத்திய பேச்சுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) காலை மூத்த அமைச்சர்களுடன் சென்றார் . அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசினார் .
எம்.ஜி.ஆர்., - என்.டி.ராமராவ்:
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.400 கோடி தமிழகம் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர்., - என்.டி.ராமராவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது.இன்று நடத்திய பேச்சில் , தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா சம்மதம் தெரிவித்தது. இது தொடர்பாக அடுத்த வாரம் திருப்பதியில் உயர் அதிகாரிகள் கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. திட்டம் தொடர்பாக பராமரிப்பு செலவு ரூ. 433 கோடியை வழங்குவது தொடர்பாக பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வந்திருக்கும் முடிவால் சென்னை குடி நீர் பிரச்சனையை தீர்க்க முடியும். தமிழகத்தின் தரப்பில் 4 டி.எம்.சி., தண்ணீர் கேட்டாலும் , ஆந்திரா அரசு 2. 5 டி.எம்.சி தண்ணீராவது தர ஆந்திரா சம்மதித்திருப்பது நல்ல தகவலாக சென்னை மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
English summary:
Chennai: Tamil Nadu Chief Minister opannerselvam , Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu talks with nearly 2. 5 tmc, water quality, AP informed consent.