காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண்கள் வன்கொடுமை ஒழிப்பு நாள் வெள்ளிக்கிழமை (25.11.2016) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் பாதை இயக்கம், சிவகங்கை மாவட்ட ஒருங்கினைப்பாளர் கரோலின் தலைமையேற்றார். உமையாள் இராமநாதன் கலைக் கல்லூரி ஆங்கில பேராசிரியை வி. அழகுமீனாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கணித பட்டதாரி ஆசிரியர் எஸ்.விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். அழகப்பா கலைக் கல்லூரி மாணவி மு. ராகவி செல்லம் தனது உரையில் மாணவிகள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் தெரிவித்து பிரச்சனைகளில் இருந்து வெளி வரவேண்டும் என்றார்.
மேலும் அவர் மாணவிகள் தங்கள் முன் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மாணவிகள் இந்நிகழ்வின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அதற்கு உண்டான தீர்வுகள் குறித்த விழிப்புனர்வைப் பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பீட்டர் ராஜா செய்திருந்தார்.
English summary:
Karaikudi Ramanathan school was Organized for International Day for the Elimination of Violence against Women