சென்னை:ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவுறுத்தி உள்ளார். வாக்காளர்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டவர் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும். முறைகேடுகளை தேர்தல் அலுவலரிடமே தெரிவிக்க வேண்டும். தேர்தல் அலுவலர் நடத்தும் கூட்டங்களில் வேட்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்க கூடாது. தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களில் வேட்பாளர்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறக்கூடாது. வேட்பாளர்கள் பெயர், சின்னம் குறித்த பூத் சிலிப் கட்சியினர் வழங்க கூடாது. இவ்வாறு வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவுறுத்தி உள்ளார்.
Tuesday 28 March 2017
Wednesday 8 March 2017
பினாமி ஆட்சி பேச்சை கேட்க வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் அறிவுரை
சென்னை: குற்றவாளியின் பினாமி ஆட்சி சொல்படி நடக்காமல், ஐகோர்ட் அறிவுரைப்படி மாநில தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை: ஐகோர்ட் அறிவித்த கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். குற்றவாளி பினாமி ஆட்சியின் சொல்படி நடக்காமல், ஐகோர்ட் அறிவுரைப்படி செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னா
ட்சி பெற்ற அரசியல் சட்டஅமைப்பாகும். மாநில தேர்தல் ஆணையம், பினாமி ஆட்சி சொல் கேட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த தொடர்ந்து தயங்கிவருகிறது. ஜனநாயக தீபத்தை ஏற்றி கிராம சபைகளை வலுவாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. பொறுப்புகளை உணர்ந்து கோர்ட் விதித்த கெடுவிற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: guilty, not the words of the proxy rule, the court must act on the advice of the State Election Commission DMK leader MK Stalin said act.

Saturday 4 March 2017
சசிகலா நியமனம்: தினகரன் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு
புதுடில்லி: தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, அ.தி.மு.க., வில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத தினகரன், சசிகலா நியமனம் தொடர்பாக அனுப்பிய விளக்க கடித்தத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு சசிகலா மார்ச் 10 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஓ.பி.எஸ்., அணி புகார்:
சசிகலா நியமனத்தை செல்லாது என அறிவிக்க கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‛அ.தி.மு.க., சட்ட விதிகளின் படி, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது. சசிகலாவுக்கு கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கவோ, புதிதாக நியமிக்கவோ எவ்வித அதிகாரமும் கிடையாது. சசிகலாவின் நியமனம் மற்றும் அவரின் அனைத்து நடவடிக்கையும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்' குறிப்பிடப்பட்டிருந்தது.
சசிக்கு ‛நோட்டீஸ்':
இந்த புகார் மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம் பொதுச்செயலர் நியமனம் குறித்து பிப்.,28 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சசிகலாவுக்கு ‛நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சிறையில் இருப்பதால் சிறை முகவரிக்கு ‛நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
முன்னதாக, சசிகலா அ.தி.மு.க.,வின் துணை பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தார். ஆனால், தினகரன் நியமனம் குறித்து அ.தி.மு.,க சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் அனுப்பப்படவில்லை.
தினகரன் கடிதம் ஏற்க மறுப்பு:
இந்நிலையில், சசிகலாவின் நோட்டீசுக்கு தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு விளக்க கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.
இதுகுறித்து, தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், ‛தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி, தினகரன் அ.தி.மு.க.,வில் எவ்வித பொறுப்பில் இல்லை. சசிகலா சார்பாக அவர் கடிதம் அனுப்பியது ஏற்க முடியாது. தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு மார்ச் -10 ம் தேதிக்குள் சசிகலா விளக்கம் அளிக்க வேண்டும். சசிகலாவின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளது.
English summary:
NEW DELHI: The Election Commission documents, Digg, News without any responsibility, to explain the letter sent to the Election Commission has rejected the appointment Shashikala. Moreover, the Election Commission notice to explain Shashikala ordered before March 10.

Thursday 2 March 2017
ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு உத்தரவு
ஜன., 5ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
கடந்தாண்டு, அக்., 17, 19ல் இரு கட்டங்களாக, உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்தது. இதை எதிர்த்து, தி.மு.க., தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. தற்போது, 'மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜன., 5ல் மத்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட, இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் பெற்று, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடிகள்:
அடுத்த கட்டமாக, ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துதல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: புறநகர் பகுதியில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி, நகர் பகுதியில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் தயார்படுத்தப்படும். புதிதாக வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் என, இரண்டும் இருப்பதால், ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். வார்டு வாரியாக பட்டியல் தயாரித்து முடித்ததும், தேவையான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Saturday 4 February 2017
தவறான கணக்கு; ஆம் ஆத்மிக்கு ஆபத்து?
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி, நன்கொடை மூலம் பெற்ற வருமானம் குறித்து தாக்கல் செய்த கணக்கு அறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக, தேர்தல் கமிஷனிடம் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், அந்த கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வருமான வரித் தாக்கல்:
டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். அரசியல் கட்சிகள், தங்கள் வருமானம் மற்றும் அந்த வருமானம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை மூலம், 27 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அக்கட்சியின் வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான கணக்கு:
'கடந்த, 2013 - 14 மற்றும் 2014 - 15 ஆண்டுகளில், ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த நன்கொடை வருவாயும், அந்த கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையும் சரியாக பொருந்தவில்லை' என, வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு அறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகவும், முன்னுக்குப் பின் முரணான விபரங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் வருமான வரித்துறையினர், தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது; இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெற்றி உறுதி:
இதுகுறித்து கெஜ்ரிவால் தெரிவித்ததாவது: பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தல்களில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. அந்த பயத்தில் தான், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, எங்கள் கட்சியை முடக்க நினைக்கிறது. இது போன்ற கீழ்த்தர அரசியலில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. இத்தகைய நடவடிக்கைகளால், நாங்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: AAP, tabled by donating the income statement over the muddle that, to the income tax, according to the Election Commission. Thus, there is the risk of that party's approval will be canceled.

Thursday 2 February 2017
இலவச வாக்குறுதியை நிறுத்துங்கள்; விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்
February 02, 2017central government, delhi high court, election commission of india, India, New delhi, political parties
புதுடில்லி: தேர்தல் நேரத்தில் ,வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் வழங்கும் இலவச வாக்குறுதிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் டில்லி ஐகோர்ட் மத்தியஅரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
English Summary:
NEW DELHI: At election time, voters and political parties promised to ban free Central government Delhi High Court in the case, the Election Commission issued a notice seeking explanation.

மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
February 02, 2017election campaign, election commission of india, federal minister manohar parrikar, panaji
பானாஜி : தேர்தல் பிரசாரத்தின் போது, விதிகளை மீறி பேசியதாக மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விதியை மீறி பிரசாரம் :
கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 4 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஜனவரி 29 ம் தேதி அன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பிரசாரம் செய்துள்ளார். அப்போது மக்களிடம் பேசிய அவர், " தேர்தலின் போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுங்கள். மற்ற கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள் " என கூறி உள்ளார். மத்திய அமைச்சர் ஒருவரே மக்களை பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
பதிலளிக்க நோட்டீஸ் :
மனோகர் பாரிக்கரின் இந்த பேச்சு தேர்தல் விதிகளை மீறுவதாக உள்ளதாக கூறி, தேர்தல் கமிஷன் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிப்ரவரி 3 ம் தேதி பிற்பகலுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary:
Panaji: During the election campaign, the Federal Minister Manohar Parrikar had spoken of the breach notice is sent to the Election Commission

Saturday 28 January 2017
மோடி ரேடியோ நிகழ்ச்சிக்கு அனுமதி
புதுடில்லி: மாதம்தோறும் நடக்கும் ரேடியோ நிகழ்ச்சியான மன்கிபாத் வழக்கம்போல் நாளை நடக்கும் இதற்கான அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உ.பி., பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திரமோடியின் ரேடியோ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சில அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
சமூகவலை தளங்கள் மூலம் :
ஆனால் இது நாடு தழுவிய அரசின் நிகழ்ச்சி என்பதால் மன் கி பாத் நாளை வழக்கம் போல் நடக்கும். இதற்கு தடை ஏதுமில்லை என தேர்ல் கமிஷன் மூத்த அதிகாரி கூறினார். இறுதி வார ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பிரதமரிடம் சமூகவலை தளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் மூலம் கேள்வி கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
NEW DELHI: mankipat radio show will take place every month, as usual, which will take place tomorrow have been given permission by the Election Commission said its top official.

Sunday 22 January 2017
உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்., கூட்டணி உறுதியானது
January 22, 2017congress, election commission of india, New delhi, samajwadi party, sonia gandhi, UP chief minister Akhilesh, uttar pradesh
டெல்லி: உத்திரப்பிரதேச அரசியல் களத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 105 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டணி உறுதியானது. உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதியும் இதுவரை தேர்தலில் கூட்டணி வைத்ததில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக இவ்விரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் பிப்ரவரி 11-ல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் 11-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
English summary:
New Delhi: Samajwadi Party in Uttar Pradesh in the political arena - Congress is assured. Samajwadi Party joined the governing coalition 105 seats allocated to the Congress. SP leader Akhilesh Yadav and Congress President Sonia Gandhi held coalition talks after the firm

Monday 16 January 2017
சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னம் யாருக்கு? முலாயம், அகிலேஷ் தரப்பிடம் தேர்தல் ஆணையம் விசாரணை
January 16, 2017election commission of india, India, New delhi, samajwadi party, UP chief minister Akhilesh
புதுடெல்லி : சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் தரப்பிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் வரும் 20-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் தேர்வில் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கிற்கும் அவரது மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கட்சியில் பிளவு :
இதனால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இருதரப்பினரும் சைக்கிள் சின்னத்தை கோரி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். அதன்பேரில் இருதரப்பினரிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அகிலேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார். இதேபோல முலாயம் தரப்பிலும் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர். இருதரப்பினரும் சுமார் 4 மணி நேரம் வாதாடினர்.
தேர்தல் ஆணையத்தில் முலாயங் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் ஆஜராகினர். ஆனால் அகிலேஷ் யாதவ் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. அவரது பிரதிநிதியாக ராம்கோபால் யாதவ் எம்.பி. ஆஜரானார்.
20 தேதி முடிவு :
சைக்கிள் சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கவில்லை. வரும் 20-ம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘பெரும்பான்மை எம்.பி., எம்எல்ஏக்கள் முதல்வர் அகிலேஷுக்கு ஆதரவு அளிப்பதால் சைக்கிள் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்படும்’ என்று அகிலேஷின் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த சுமன் ராகவ் தெரிவித்துள்ளார்.
English Summary:
New Delhi: The Samajwadi's Mulayam Singh about the dismissal of those for whom cycling icon, Akhilesh Yadav camp Election Commission conducted an investigation. In this case, the results likely to be announced on October 20.

Sunday 15 January 2017
சசிகலாவை பொதுச் செயலராக ஏற்கக் கூடாது: தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார் சசிகலா புஷ்பா
அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் வைத்து, என் கணவரை அடித்து உதைத்து விட்டால், நியாயம் கேட்டு நான் போராட மாட்டேன் என நினைத்து விட்டனர்; அது நடக்காது. எனக்கு நியாயம் கிடைக்கும் கடைசி நிமிடம் வரை போராடுவேன் என, அடித்துச் சொல்லும் சசிகலா புஷ்பா எம்.பி., சசிகலாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமித்ததே செல்லாது. அதை தேர்தல் கமிஷன் ஏற்கக் கூடாது என, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இது குறித்து, சசிகலா புஷ்பா கூறியதாவது:ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை, உலகமே அறிந்து வைத்துள்ளது. கூடவே இருந்து ஜெயலலிதாவைப் பார்த்துக் கொண்டதாக கூறும் சசிகலாதான், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க வேண்டும். அது வரை, அவர் மீதான சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இறந்து போன நாள் வரையிலான 75 நாட்களும், சசிகலாதான் கூடவே இருந்திருக்கிறார். அவர்தான், கவர்னர் உள்ளிட்ட யாரையுமே, ஜெயலலிதாவை சந்திக்கவே விடாமல் தவிர்த்துள்ளார். ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவையும் கூட, அவர் மருத்துவமனைக்குள்ளேயே விடவில்லை.
இப்படியெல்லாம் செய்த சசிகலாவைத்தான், ஏற்கனவே துரோகி என கூறி, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார் ஜெயலலிதா. அதனால்தான், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும்; மத்திய அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்றும் கேட்டு, நியாயத்தை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஜெயலலிதாவாலேயே துரோகி என பட்டம் சூட்டி, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சசிகலாதான், இன்று, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு, பொதுக் குழுவால், தற்காலிகமாக அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், கட்சியின் அடிப்படையான விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.
அப்படி இருக்க, சசிகலாவை நிரந்தரப் பொதுச் செயலர் போல, பொதுக் குழு தீர்மானங்களையெல்லாம், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளனர். கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான பொன்னையனும், அதையே சொல்கிறார்.
ஆக, சசிகலா, பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டதே முறையானது அல்ல என்கிற போது, தேர்தல் கமிஷன், சசிகலாவின் தேர்வை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கக் கூடாது நிரந்தர ஏற்பாடாக, நியாயமான; நேர்மையான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். கட்சியின் அடிப்படை விதிகளின்படி, கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி, ஓட்டளித்து, பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அப்படி செய்யும் போது, சசிகலாவால், கட்டாயம், கட்சியின் பொதுச் செயலராக வர முடியாது. எதிர்த்து ஒரு மூத்த தலைவர் நின்றால், அவரே, கட்சியின் பொதுச் செயலராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார். இதை விட்டு விட்டு, புற வழியில், கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு விட்ட, சசிகலாவின் நியமனத்தை, எக்காரணம் கொண்டும் தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இதற்கான சட்ட ரீதியிலான போராட்டங்களை நான் தொடர்ந்து வருகிறேன். இப்படி பொதுச் செயலர் தேர்வுக்கு, தேர்தல் நடத்தினால், அதில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான், கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், என் கணவர் யோகேஸ்வர் திலகன், அ.தி.மு.க., தலைமை அலுவலத்துக்குச் சென்றார். அவரை, சுற்றிய சசிகலா ஆட்கள், அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அராஜகத்தின் மூலம், சசிகலா வெகு நாட்களுக்கு வெற்றி பெற்றுவிட முடியாது. நியாத்துக்கான கடைசி நிமிடம் வரையில் போராடுவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
English summary:
Digg, and put at the head, beaten and kicked my husband, if you will not fight with the thought that I had a fair hearing; It will not happen. I will fight until the last minute to get justice, Sasikala Pushpa MP's assertion, Sasikala, AIADMK general secretary nominated valid. It would not be acceptable to the Election Commission, has sent a letter to the Election Commission of India.

Wednesday 11 January 2017
மக்கள் தொகை உயர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து: பா.ஜ.க எம்.பி. சாக்ஷி மகராஜூக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி - மக்கள் தொகை உயர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பா.ஜனதா சாக்ஷி மகராஜூக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது.
சர்ச்சை கருத்து:
பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உன்னாவ் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான சாக்ஷி மகராஜ் மீரட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போவதற்கு இந்துக்கள் காரணம் அல்ல. 4 பெண்களை திருமணம் செய்யவும், 40 குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் அனுமதிப்பவர்கள்தான் காரணம். எனவே, நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான சட்டதிட்டங்களை வகுக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
அவருடைய இந்த பேச்சு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஒட்டுக் கேட்கக் கூடாது என்று உத்தரவை மீறுவதாக உள்ளது என்றும் எனவே அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் உத்தரபிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகிலேஷ் பிரதாப் சிங் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். சாக்ஷி மகராஜின் பேச்சுக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜ.க விளக்கம்:
சாக்ஷி மகராஜின் கருத்துகள், அவரது சொந்த கருத்துகள் என்று பாரதீய ஜனதா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், "சாக்ஷி மகராஜ் கருத்துக்கும், பாரதீய ஜனதாவுக்கும் சம்பந்தம் கிடையாது; அது அவருடைய சொந்தக் கருத்து' என்றார். சாக்ஷி மகராஜூம், தாம் பாரதீய ஜனதா கட்சியின் நிகழ்ச்சியில் இக்கருத்தை தெரிவிக்கவில்லையென்று விளக்கம் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு:
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சாக்ஷி மகராஜின் மீரட் பேச்சு குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது. இந்த அறிக்கை கிடைத்த பிறகே அவர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறினரா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக சாக்ஷி மகராஜூக்கு எதிராக மீரட் நகர போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:
இந்நிலையில் காங்கிரஸ் அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் சாக்ஷி மகராஜூக்கு நோட்டீஸ் விடுத்து உள்ளது. மத அடிப்படையில் இருதரப்பினர் இடையே எதிர்ப்பை உருவாக்க முயற்சிசெய்தல் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஜனவரி 11-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. பதிலளிக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
English Summary:
NEW DELHI - As the population increases, commenting on the controversial BJP makaraju Sakshi has issued notice to the Election Commission.

Tuesday 10 January 2017
தேர்தலில் செல்லாத நோட்டு பிரச்னை எதிரொலிக்கும் : மன்மோகன் சிங் ஆரூடம்
புதுடில்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ''செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்,'' எனக் கூறினார்.
பஞ்சாப், உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ள, பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை, காங்., நேற்று வெளியிட்டது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: பஞ்சாப் தேர்தலில், பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்படும். அதே நேரத்தில், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., அரசின் செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
போதை பொருளுக்கு எதிரான கடும் நடவடிக்கை, அதன் விற்பனையாளர்கள் சொத்து பறிமுதல்; விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி; ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை, தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இன்று சேருகிறார் சித்து :
பா.ஜ.,வின், எம்.பி., பதவியில் இருந்து விலகிய, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, தனிக் கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளில் ஏதாவது ஒன்றில் அவர் இணைவார் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரசில், அவர் இன்று முறைப்படி இணைகிறார்.
English summary:
NEW DELHI: Punjab assembly elections, the Congress's election statement, the former prime minister, Manmohan Singh, '' Invalid currency note issue, including the state assembly elections in Punjab, will be the biggest problem, '' he said.

Thursday 5 January 2017
யாருக்கு பெரும்பான்மை உள்ளது? நிரூபிக்க அகிலேஷ், முலாயமுக்கு உத்தரவு
January 05, 2017election commission of india, India, mulayam singh yadav, samajwadi party, UP chief minister Akhilesh
புதுடில்லி: சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பான்மை யாருக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என முலாயம்சிங் மற்றும் அவரது மகன் அகிலேசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மோதல்:
உ.பி.,யில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. கட்சியின் நிறுவன தலைவர் முலாயமிற்கும், அவரது மகன் அகிலேசுக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. அகிலேசும், அவரது சித்தப்பா ராம்கோபால் யாதவும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டினர். இதில் அகிலேஷ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து முலாயம் சிங் டில்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் சென்று சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என முறையிட்டார். இதற்கு அடுத்த நாளே, அகிலேஷ் தரப்பில், ராம்கோபால் யாதவ் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பதால், சைக்கிள் சி
ன்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கடிதம்:
இந்நிலையில், இரு தரப்பினரையும் தங்களுக்கு உள்ள பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக இரு தரப்பிற்கும் எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கட்சியில் உள்ள குழுக்கள், எம்.எல்.ஏ.,க்கள் , எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை கையெழுத்துடன் கூடிய அபிடவிட் மூலம் நிரூபிக்க வேண்டும். இரு தரப்பினரும் தங்களது பிரதிநிதியை அனுப்பி விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 9 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: Samajwadi's iconic bicycle logo will be reserved for those who, in order to prove that there is a majority to whom Mulayam Singh Yadav and his son akilec ordered the Election Commission.

பிப்.,1 ல் பட்ஜெட் தாக்கல் : எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்
புதுடில்லி : உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 4 ம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் நேற்று (ஜனவரி 04) அறிவித்தது. இந்நிலையில் தேர்தலுக்கு முன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தவும், பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தேர்தலும் பட்ஜெட் தாக்கலும் :
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மற்றும் ஜனாதிபதியின் பரிந்துரையை ஏற்று, பட்ஜெட் தாக்கல் தேதியை வழக்கமான பிப்ரவரி இறுதி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 1 ம் தேதிக்கு மத்திய அரசு மாற்றியது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி துவங்கும் எனவும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ம் தேதி தாக்கலாகும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் உ.பி., பஞ்சாப், கோவா, உத்திரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி, மார்ச் 8 வரை நடக்கும் எனவும், மார்ச் 11 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் போர்க்கொடி :
பிப்ரவரி 4 ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாநில தேர்தலுக்கு முன் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது எனவும், தேர்தல் முடிந்த பிறகே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. பிப்ரவரி 4 ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என கருத்து தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக இன்று (ஜனவரி 05) காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளன.
English Summary:
NEW DELHI: Uttar Pradesh and Punjab states, including 5 in the first assembly elections will be held on February 4, the Election Commission yesterday (January 04) announced. The elections to be held before the federal budget, the budget and to file the opposition parties have protested on February 1.

தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள்; இறுதிப் பட்டியல் நாளை வெளியீடு
சென்னை: வாக்காளர் சிறப்பு திருத்தத்தை அடுத்து தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடபடுகிறது.
இதுகுறித்து, தேர்தல் ஆணையம் கூறியருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2017-ன் இறுதிப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. 2016-ம் ஆண்டை காட்டிலும் 2017-ல் 10.22 லட்சம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி பேர் , பெண் வாக்காளர்கள் 2.99 கோடி பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,040 பேர். மொத்த வாக்காளர்கள் 5.92 கோடி பேர்.
அடையாள அட்டை:
ஓட்டுசாவடி அலுவலர்கள் மூலம் பிப்.,10-ம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலை http// elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் காணலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சோழிங்கநல்லுார் முதலிடம்:
அதிகபட்சமாக, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் குறைந்த பட்சமாக, கீழவேளூர் தொகுதியில் 1.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
English summary:
Chennai: Tamil Nadu 5.92 crore voters in the special amendment to the voters, according to the Election Commission. The final electoral list tomorrow release.

Wednesday 4 January 2017
5 மாநில தேர்தலால் முன்கூட்டியே தாக்கலாகுமா மத்திய பட்ஜெட்?
புதுடில்லி : உ.பி., கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. இதனால் தேர்தல் துவங்குவதற்கு முன்னதாகவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
குழப்பத்தில் எதிர்க்கட்சிகள் :
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி மார்ச் 8 ம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட உள்ளது. 5 மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் மார்ச் 11 ம் தேதி எண்ணப்பட உள்ளன. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31 முதல் நடத்தவும், பிப்ரவரி 1 ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சலுகைகள், வரி விதிப்புக்கள் போன்றவை ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருவது வழக்கம். இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் சட்டசபை தேர்தல்களின் முடிவை பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டன. இதனால் ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் மத்திய அரசும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை பிப்ரவரி இறுதி நாளுக்கு பதிலாக, பிப்ரவரி 1 ம் தேதிக்கு மாற்றியது. இப்போது முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.
முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் :
ஆனால் தற்போது பிப்ரவரி 4 ம் தேதி, 5 மாநில தேர்தல் துவங்கும் எனவும், இதற்கான நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் தற்போது முடிவு செய்துள்ள பிப்ரவரி 1 ம் தேதிக்கு முன்னதாகவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது பட்ஜெட் உடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் ஜனவரி 31ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் தேதியும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
English summary:
NEW DELHI: Uttar Pradesh, Goa, including 5 of the Election Commission today announced the schedule for the state assembly elections. Before the commencement of the election are expected to be filed in the federal budget.

Monday 2 January 2017
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிப்பு
சென்னை: உள்ளாட்சி அமைப்பை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த அக்.,24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவர்கள் பதவி காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தி புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்தல் ரத்து:
அதற்காக, அக்.,17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபடவில்லை என கூறி சென்னை ஐகோர்ட் தேர்தலை ரத்து செய்தது. மேலும், டிச.,31 ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
பதவி காலம் நீட்டிப்பு:
இதற்கிடையே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக தனி அதிகாரிகளை நியமினம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அவர்களின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
English summary:
Chennai: Local system managed by separate authorities extended his term until June.
By the end of his term, they held elections to elect new local representatives to the Election Commission.

Thursday 29 December 2016
5 மாநில அரசுகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்
புதுடில்லி: உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களும், மத்திய அரசும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த தயாராக இருக்கும்படி, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல்:
உ.பி., - உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சக செயலருக்கும், இம்மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கும், தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடித விபரம்: ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை, தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த, மாநில அரசுகளும், மத்திய அரசும், தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நடத்தை விதிகள் :
பொது இடங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; அரசு வாகனங்களை, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது. அரசு இணையதளங்களில், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட வேண்டும். கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு, அரசு நிதியை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
English summary:
UP, the five states, including the Federal Government, with the announcement of assembly elections, to prepare to implement the election code of conduct, the Election Commission is advised.

Saturday 24 December 2016
ரூபாய் நோட்டு வாபஸ்: முன்னரே மத்திய அரசுக்கு பரிந்துரை- ரிசர்வ் வங்கி
December 24, 2016central government, election commission of india, India, New delhi, Reserve bank of india
புதுடில்லி:ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக, கடந்த 8 ம் தேதி பிரதமர் அறிவிப்பதற்கு முன்னர் மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
எதிர்க்கட்சிகள் புகார்:
கடந்த நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி, கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த திட்டம் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு கலந்து ஆலோசனை செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்த திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நீண்டநாட்கள் நன்கு ஆலோசனை செய்யப்பட்ட பிறகே, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி அளித்த தகவல்:
இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த தகவல்: கடந்த நவம்பர் 8 ம் தேதி ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநர் கூட்டத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 10 உறுப்பினர்களில் 8 பேர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், பிரதமர் மோடி அறிவிப்பிற்கு சற்று முன்னர் தான் இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.
English summary:
NEW DELHI: The rupee note in relation to the withdrawal, before announcing last 8 th Prime Minister, had been recommended to the federal government, the Reserve Bank said.