சென்னை: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3 - 0 என தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் 759 ரன்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து, 86 ரன்கள் பின்தங்கி இருந்தது. கருண் நாயர் (71), முரளி விஜய் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா ரன் குவிப்பு;
இன்று நான்காவது நாள் ஆட்ட
ம் நடக்கிறது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கருண் நாயர், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் விளாசினார். அடுத்த சில நிமிடத்தில் முரளி விஜய் (29) அவுட்டானார். அடுத்து வந்த அஷ்வின், மொயீன் பந்தை சிக்சருக்கு அனுப்ப, இந்திய அணி முன்னிலை பெற்றது.
தவிர, 500 ரன்களையும் கடந்தது. அஷ்வின் அரைசதம் அடித்தார். தேநீர் இடைவேளைக்குப் பின் கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் அஷ்வின் 67 ரன்னுக்கு அவுட்டானார். ரவீந்திர ஜடேஜா, 51 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் எடுத்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது.
லாரா, சேவக் வழியில் கருண் நாயர் 300 ரன்கள் கடந்து முத்திரை
டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் முச்சதம் அடித்த இந்தியர்கள் பட்டியலில் சேவக்கிற்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்தார் கருண் நாயர். சர்வதேச அளவில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 27வது இடம் பெற்றார். டெஸ்ட் அரங்கில் 303 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்தவர்கள்.
வீரர் ஸ்கோர் எதிரணி இடம் ஆண்டு
லாரா(வெ.இ.,) 400* இங்கி., ஆன்டிகுவா 2004
ஹைடன்(ஆஸி.,) 380 ஜிம்ப்., பெர்த் 2003
லாரா (வெ.இ.,) 375 இங்கி., ஆன்டிகுவா 1994
ஜெயவர்தனா(இலங்கை) 374 தெ.ஆ., கொழும்பு 2006
சோபர்ஸ்(வெ.இ.,) 365* பாக்., கிங்ஸ்டன் 1958
ஹட்டன்(இங்கி.,) 364 ஆஸி., ஓவல் 1938
ஜெயசூர்யா(இலங்கை)) 340 இந்தியா கொழும்பு 1997
ஹனிப்(பாக்.,) 337 வெ.இ., பிரிட்ஜ்டவுன் 1958
ஹாமணட்(இங்கி) 336* நியூசி., ஆக்லாந்துr 1933
மார்க் டெய்லர்(ஆஸி.,) 334* பாக்., பெஷாவர் 1998
பிராட்மேன்(ஆஸி.,) 334 இங்கி., லீட்ஸ் 1930
கூச்(இங்கி.,) 333 இந்தியா லார்ட்ஸ் 1990
கெய்ல்(வெ.இ.,) 333 இலங்கை காலே 2010
கிளார்க்(ஆஸி.,) 329* இந்தியா சிட்னி 2012
இன்சமாம் (பாக்.,) 329 நியூசி., லாகூர் 2002
சந்தாம்(இங்கி.,.)325 வெ.இ., கிங்ஸ்டன் 1930
சேவக்(இந்தியா) 319 தெ.ஆ., சென்னை 2008
சங்ககரா(இலங்கை) 319 வங்கம் சிட்டகாங் 2014
கெய்ல்(வெ.இ.,) 317 தெ.ஆ., ஆ ஆன்டிகுவா 2005
யூனிஸ்(பாக்.,) 313 இலங்கை கராச்சி 2009
ஆம்லா(தெ.ஆ.,) 311* இங்கி., ஓவல் 2012
சிம்ப்சன்(ஆஸி.,) 311 இங்கி., மான்செஸ்டர் 1964
எட்ரிச்(இங்கி.,) 310* நியூசி., லீட்ஸ் l 1965
சேவக்(இந்தியா) 309 பாக்., முல்தான் 2004
கவ்பர்(ஆஸி.,) 307 இங்கி., மெல்போர்ன் 1966
பிராட்மேன்(ஆஸி.,) 304 இங்கி., லீட்ஸ் 1934
கருண் நாயர்(இந்தியா) 303* இங்கி., சென்னை 2016
English Summary:
Chennai, India, which has been active in the England squad for the Test series. At the end of the first four matches, the Indian team 3 - 0, won the series. Indian team record 759 runs in the Test arena.