புதுடில்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ''செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்,'' எனக் கூறினார்.
பஞ்சாப், உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ள, பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை, காங்., நேற்று வெளியிட்டது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: பஞ்சாப் தேர்தலில், பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்படும். அதே நேரத்தில், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., அரசின் செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
போதை பொருளுக்கு எதிரான கடும் நடவடிக்கை, அதன் விற்பனையாளர்கள் சொத்து பறிமுதல்; விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி; ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை, தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இன்று சேருகிறார் சித்து :
பா.ஜ.,வின், எம்.பி., பதவியில் இருந்து விலகிய, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, தனிக் கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளில் ஏதாவது ஒன்றில் அவர் இணைவார் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரசில், அவர் இன்று முறைப்படி இணைகிறார்.
English summary:
NEW DELHI: Punjab assembly elections, the Congress's election statement, the former prime minister, Manmohan Singh, '' Invalid currency note issue, including the state assembly elections in Punjab, will be the biggest problem, '' he said.