மதுரை: ''எம்.எல்.ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பது தமிழகத்திற்கு கேவலம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
கவர்னரின் பொறுமை:
இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போது எழுந்துள்ள பிரச்னையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுமையாக செயல்பட்டார்; இதை விட வேறு யாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தமிழகத்தை ஆட்சி செய்து அழித்து விட்டன. புதிய தேடலில் மக்கள் உள்ளனர்.
கேவலம்:
அ.தி.மு.க.,வில், முதல்வராக யார் வருவார் என தெரியாது. யார் வந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து அது தான். எம்.எல்.ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்து வைத்தது தமிழகத்திற்கு கேவலம். சட்டத்தை இயற்றக்கூடிய, எம்.எல்.ஏ.,க்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் என்ன அர்த்தம்? தமிழகத்தில் மீதமுள்ள நான்கரை ஆண்டு காலமும் ஆட்சி தொடர வேண்டும். அந்த கட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற போட்டி நடக்கிறது. மக்கள், அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Madurai: '' MLA pals locked in place and the State disgusting, '', Union Minister of State, said the punishment pon.