லண்டன்: ‛கிங்பிஷர் விமான நிறுவனம் மூடப்பட்டதற்கு மோசமான விமான இன்ஜின்களே காரணம்' என அந்நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
தலைமறைவு:
வங்கிகளில் வாங்கிய பல கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல், 'கிஷ்பிஷர்' குழும தலைவர் விஜய் மல்லையா, பிரிட்டனில், தலைமறைவாக இருந்து வருகிறார். அமலாக்கப்பிரிவு மற்றும், சி.பி.ஐ., சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
காரணம் என்ன?
இந்நிலையில், மல்லையா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: 'கிங்பிஷர்' விமான நிறுவனம், நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்த சேவை வழங்கியது. எங்கள் நிறுவன விமானங்களில், மோசமான இன்ஜின்கள் பொருத்தப்பட்டதாலேயே, 'கிங்பிஷர்' நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. சிறப்பாக இயங்கிய ஒரு நிறுவனம் திடீரென ஏன் வீழ்ச்சியை சந்தித்தது என்பதை சிந்திக்க வேண்டும். என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English summary:
London: Kingfisher Airline's closure due to bad air engineer "said the company's owner Vijay Mallya.