விஜயவாடா: ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற 174 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். கடப்பா மாவட்டம் காஜூப்பேட்டையில் 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் லங்கமல்லா என்ற இடத்தில் 156 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 டன் செம்மரம், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Friday, 10 March 2017
Wednesday, 1 March 2017
ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி, 30 பேர் காயம்
விஜயவாடா: ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்ததில் பலியானார்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து, ஆந்திராவின் விஜயவாடாவுக்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. விஜயவாடா அருகே வந்த போது, பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். காயமடைந்த 30 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானார்கள். டிரைவரின் அலட்சியமே பணி விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பஸ்சில் சிக்கியவர்களை காஸ் கட்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English summary:
Vijayawada: river increased to 11 the number killed in a bus accident.
From Bhubaneswar, Orissa, Andhra Pradesh and the private bus was going to Vijayawada. When it came near Vijayawada, the bus fell into the river. 8 people were killed in this incident. 30 injured were admitted to a government hospital. 10 as and the situation is getting worse. 3 died undergoing treatment.

Friday, 3 February 2017
பெண்ணை தாக்கிய ஊராட்சி தலைவர்; ஆந்திராவில் பரபரப்பு
விஜயவாடா: மேல்நிலை தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை ஊராட்சி தலைவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டம் ஜல்லிப்பள்ளி கிராம ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகராஜ். இவர் 2 பேருடன் சேர்ந்து கணவனை இழந்த பெண் ஒருவரை கடுமையாக தாக்கியும், காலால் மித்தும் தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக கெருடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையில், தாக்கப்பட்ட பெண்ணின் பெயர் சுதா எனவும், தனது வீட்டின் முன்பு மேல்நிலை தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary:
Vijayawada: woman panchayat leader opposed to the overhead tank struck an incident has caused a stir.

Wednesday, 21 December 2016
மத்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு
விஜயவாடா : ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில், மக்கள் படும் கஷ்டத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கவனம் தேவை:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமாகிய சந்திரபாபு நாயுடு பேசியதாவது: செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியாகி, 40 நாட்கள் கடந்து விட்டது; பிரச்னை தீரவில்லை. வங்கிகளில், மக்கள் மணிக்கணக்கில் காத்து இருக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனை மாற்றத்திற்கு வங்கிகள் தயாராகவில்லை. மக்கள் கஷ்டத்தை, மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிருப்தி :
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து தினமும் 2 மணி நேரம் சிந்தித்தும், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பை வெளியிட்ட போது, தெலுங்கு தேசக் கட்சி பெரிதும் வரவேற்றது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது அதிருப்தியை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Vijayawada: In the case of the withdrawal bill, the federal government should take note that the pain the people of Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu said

Thursday, 24 November 2016
சுஷ்மாவுக்கு சிறுநீரகம்; உ.பி., முன்னாள் அமைச்சரின் மனைவி தயார்
விஜயவாடா; சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, உ.பி., மாநில முன்னாள் அமைச்சரின் மனைவி முன்வந்துள்ளார்.
மருத்துவமனையில் சுஷ்மா:
வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், 64, சிறுநீரக கோளாறு காரணாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாற்று சிறுநீரகங்கள் பொறுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. சுஷ்மாவுக்கு சிறுநீரகம் வழங்க பலரும் முன்வந்துள்ளனர்.
தானம் வழங்க தயார்:
இந்நிலையில், அவருக்கு, தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, உ.பி., மாநில முன்னாள் அமைச்சர் ரவி காந்த் கார்கின் மனைவி, மீரா கர்க் முன்வந்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது: சுஷ்மாவின் நேர்மை, அர்ப்பணிப்பு, மக்கள் நலனில் காட்டும் அக்கறை ஆகியவை நாட்டுக்கு மிகச்சிறந்த உதாரணம். சுஷ்மாவுக்கு எனது சிறு நீரகத்தை தானமாக அளிக்க எனக்கு சம்மதம். எனது சிறுநீரகம் அவருக்குப் பொருந்துமானால், மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
Who are suffering from kidney failure, to the Foreign Minister Sushma Swaraj, her offer to donate a kidney, UP, the state has offered the former minister's wife.