சென்னை: தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள வாரிய உறுப்பினருக்கு வாரிய செயலாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கை வாபஸ் பெறும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.
அஞ்சலி சர்மா:
ஜல்லிக்கட்டு நடத்த கோரி, சென்னையில் மெரினா, மதுரையில் அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும், ஜன., 17 முதல், 23ம் தேதி வரை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய அரசின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. மேலும், சட்டசபையில் அந்த சட்டத்தை நிறைவேற்றியும் உள்ளது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில், அதன் உறுப்பினரும், வழக்கறிஞருமான அஞ்சலி சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.இதை கண்டித்து, அஞ்சலி சர்மாவுக்கு இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளரும், ஐ.எப்.எஸ்., அதிகாரியுமான ரவிக்குமார் அனுப்பியுள்ள கடிதம்:
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதுபோல், தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக, இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தால், அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
ஒப்புதல் தேவை:
இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில், சுப்ரீம் கோர்ட் அல்லது பிற நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு முன், வாரியத்தின் ஒப்புதல் பெற்று அல்லது முடிவை அறிந்த பிறகு வழக்கு தொடுக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. English summary: Chennai: The Tamil Nadu government has come up with for Jallikattu against the law, Animal Welfare Board of India, the Supreme Court on behalf of the Board Member of the Board Secretary, who filed the suit, said the strong opposition. He has ordered the withdrawal of the case.
பொதுமக்களை முதல்வர் நேரில் பார்த்திருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்து முட்டாள்தனமானது என சுப்பிரமணியன்சுவாமி கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு கமல் ட்விட்டரில், 'ஹாய் சாமி. நான் தமிழ் வாலா. முதல்வர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். காந்தியும், ஜூலியஸ் சீஸரும் கூட மக்களிடம் பணிவாகதான் இருந்தார்கள். அப்படியிருக்கையில் முதல்வர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?' என செம ரிப்ளை செய்துள்ளார்.
இந்நிலையில் மற்றொரு ட்வீட்டில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இனி பதில் சொல்ல விருப்பமில்லை என கமல் கூறியுள்ளார்.
Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.
சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்துக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்டோர் நேற்று மாணவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை முதலே மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.
"மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். தடியடி, வன்முறை என ஆயுதங்களைப் பிரயோகித்தும் பலன் இல்லாததால், 'யார் வந்து பேசினால், மாணவர்கள் கேட்பார்கள்' என ஆலோசித்து, அதற்கேற்ப தமிழ் உணர்வாளர்களை கடற்கரைக்கு வரவழைத்தனர். அதேநேரம், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் போலீஸார் 'திடீர்' தாக்குதலை நடத்தினர். பெண்கள், இளைஞர்கள் என ஒருவரும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இப்படியொரு தாக்குதலின் பின்னணியில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் உள்ளனர்" என அதிர்ச்சியோடு விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"ஜல்லிக்கட்டு தடையைப் போலவே, ரேக்ளா பந்தயத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வண்டியில் மாடுகளைப் பூட்டிக் கொண்டு நடத்தப்படும் ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் வெகுபிரசித்தம். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்காகத்தான் மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. வரலாறு காணாத மெரினா போராட்டத்தால், அதிர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லி சென்று ஒருநாள் தங்கியிருந்து அனுமதியைப் பெற்று வந்தார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் திறந்து வைக்க மகிழ்ச்சியோடு பயணமானார் ஓ.பி.எஸ். மாவட்ட அமைச்சர்களும் தங்கள் ஊரில் போட்டிகளைத் தொடங்கி வைக்க ஆர்வத்துடன் கிளம்பினர். 'வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளிக் குதித்து பாய்ந்தோடும்' என பேட்டியளித்த முதல்வரை, கிராமத்துக்குள்லேயே பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர் அமைச்சர்கள் சிலர். சேலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டார். இந்நிலையில், ரேக்ளா பந்தயத்தைத் தொடங்கி வைக்க சில அமைச்சர்கள் கிளம்பினர். 'காலையில் ஒன்பது மணிக்கு ரேக்ளா பந்தயங்கள் தொடங்கும்' என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், 11 மணி கடந்தும் போட்டிகளை நடத்த முடியவில்லை. காரணம். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதுதான். சொந்த ஊருக்குள்ளேயே தனக்கு எதிராகப் போராட்டம் நடந்ததை அமைச்சரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை முதலமைச்சரிடம் பேசிய அந்த அமைச்சர், 'இத்தனை வருஷமா எம்.எல்.ஏவாக இருக்கிறேன். என்னை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசியதில்லை. என்னையே இரண்டு மணி நேரம் சிறைவைத்துவிட்டார்கள். தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்தார்கள்.
அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? மாவட்டத்துக்குள் வலுவாக இருப்பதால்தான், இவ்வளவு வெற்றிகளை வாங்கித் தர முடிந்தது. இந்த அவமானத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கொந்தளிப்புடன் கேட்டார். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்த முதல்வர் அலுவலக அதிகாரி, 'மினிமம் ஃபோர்ஸ் யூஸ் பண்ணுங்க. தேவையற்ற கலவரத்துக்குக் காரணமாக இருந்துவிட வேண்டாம்' என அறிவுறுத்தினாராம். இதையடுத்து, மெரினாவில் நெருக்கடியைக் கொடுத்த காவல்துறை, மாவட்டங்களின் பல பகுதிகளில் தடியடி பிரயோகத்தை அரங்கேற்றியது. ரேக்ளா பந்தயத்தால் அவமானமடைந்த அமைச்சர் ஊரிலும், பெரும் தாக்குதல் நடந்தது. போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது" என்றார் விரிவாக.
"தொடக்கத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை மென்மையான போக்கிலேயே கையாண்டார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். மெரினாவில் கூட்டத்தைக் கூட அனுமதித்து, கடைசியாக மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைப் போராடி பெற்றது போன்ற, ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசு இறங்கியது. 'ஆந்திர முதல்வரிடம் 2.5 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத் தந்தது; ஜல்லிக்கட்டுக்காக போராடி அவசரச் சட்டம் கொண்டு வந்தது' என ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முயற்சித்தார் முதலமைச்சர். ஆனால், போராட்டத்தை முடித்து வைக்க கையாண்ட விதமே விமர்சனங்களை உருவாக்கிவிட்டது. இது மாநில அரசின் உளவுத்துறைக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழா ஒத்திகைக்காக மெரினா கூட்டத்தைக் கலைத்தாலும், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவசரச் சட்டத்தால் நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால், மாணவர்கள் மீண்டும் வீதிகளில் அமர்வார்கள். நேற்று திருவல்லிக்கேணி வீதிகளில் போலீஸார் நடத்திய கோரத் தாண்டவத்தை மாணவர்கள் மறந்துவிடவில்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.
'அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே, மாணவர்கள் போராட்டத்தின் நகர்வு தெரியவரும்' என்கின்றனர் போராட்டக் குழுவினர்.
சென்னை: மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, விழுப்புரத்தில் இன்று மதியம் நிருபர்களிடம் பேசியபோது, பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1ம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர். அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.
சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நேற்று மாநில அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை அடிப்படையாக கொண்டு, தமிழக கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை அரசாணையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துறையின் இயக்குனரான ககன் தீப் சிங் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி கடந்த ஒரு வாரமாக தொடர் தன்னெழுச்சி போராட்டம் நடக்கிறது. இதன் காரணமாக மத்திய அரசின் துணையுடன் நேற்று தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதாக அரசு அறிவித்தது. விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் - 1960ல் திருத்தம் ஏற்படுத்தி, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. விலங்குககள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு - 3,துணை பிரிவு(2)ன்படி, தமிழக கவர்னர் சில விதிமுறைகளை உருவாக்கி உள்ளார். அவை பின்வருமாறு:
* விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 2, உட்பிரிவு( டிடி)ன் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர் அல்லது அமைப்பினர் மாவட்ட கலெக்டருக்கு எழுத்து பூர்வமாகதகவல் தெரிவிக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மனிதர்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இத்தகவல்களை கலெக்டர் பதிவு செய்ய வேண்டும்.
* ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும கலெக்டர், ஜல்லிக்கட்டு நடக்க உள்ள இடத்தை பார்வையிட வேண்டும்.
* வருவாய், கால்நடை, போலீஸ் மற்றும் சுகாதார துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்ற ஒரு ஜல்லிக்கட்டு குழுவை கலெக்டர் ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளின்படி நடக்கிறது என்பதை அந்த குழுவினர் மேற்பார்வையிடுவர்.
* கால்நடை துறையினரால், காளைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை போட்டி நடத்துபவர்கள் உறுதி செய்ய வேண்டும். போதை பொருள் உள்ளிட்ட உணர்வுகளை துண்டும் பொருட்கள், காளைகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள், நோயால் பாதிக்கப்படவில்லை; போதை பொருட்களுக்கு ஆட்படவில்லை என்பதை, கால்துறை நிபுணர்களின் உதவியுடன் கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும்.
* போட்டி நடத்துபவர்கள், திறந்வெளி மைதானத்தில் கீழ்கண்ட வசதிகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.
நிபந்தனைகள்:
போட்டி துவங்குவதற்கு முன் காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில், ஒவ்வொரு காளையும் சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் போதிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். முன்னதாக மைதானத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், காளைகளுக்கு, 20 நிமிட ஓய்வு அளிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர அடி இடம் தர வேணடும். அவற்றுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் தந்து, அவை சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் வசதி ஏற்படுத்தவேண்டும். காளையின் மன நல பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் உரிமையாளர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையையும், கால்நடை துறையின் டாக்டர்கள் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
.
காயம் இருக்கும் காளையை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும். காளை உடலின் மேற்பகுதியில் காயங்கள் ஏதும் உள்ளதா, காது அருகே காயம் உள்ளதா, வால் பகுதியில் காயம் உள்ளதா என்பதை கால்நடைதுறை டாக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். காளைகளின் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லாதஅளவுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும்.காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் ஷாமியானா போட்டு இருக்க வேண்டும். மழை மற்றும் சூரிய ஒளியில் இருந்து காளைகளை பாதுகாக்க வேண்டும். மருத்துவர் ஆய்வு கட்டாயம்:
காளைகளை, கால்நடைதுறையின் தகுதி வாய்ந்த கால்நடை டாக்டர்களின் ஆய்வுக்கு உட்படுத்துவது கட்டாயம். காளைகளின் பொதுவான உடல்நலம் ஆய்வு செய்ய வேண்டும், பரிசோதனை கூட ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும். சோர்வு, நீர்போக்கு பாதிப்பு, உடல் நல பாதிப்புள்ள காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. போதை பாதிப்புக்கு உள்ளான காளையை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. மேலும் தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.
வாடிவாசல் பகுதிக்கு காளையை கொண்டு சென்று, அதன் மூக்கணாங்கயிற்றை அதன் உரிமையாளர் தான் அகற்றி, மைதானத்திற்குள் அனுப்ப வேண்டும். காளைகளை பரிசோதனை செய்யும் இடம், பந்தல் வசதியுடன் இருக்க வேண்டும். போட்டி நடக்கும் மைதானம் குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர் இட வசதி கொண்டதாக இருக்க வேண்டும். 50 சதுர மீட்டர் பகுதிக்குள் தான், காளைகளை போட்டியில் பங்கேற்பவர்கள் ஏறுதழுவ வேண்டும்.
வாடிவாசலை மறித்து கொண்டு போட்டியாளர்கள் நிற்க கூடாது. அதே போல் காளைகள் வெளியேறும் பகுதியையும் அவர்கள் மறிக்க கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15.மீட்டர் அல்லது 30 வினாடிகள் அளவுக்கு அல்லது காளையின் மூன்று துள்ளல்கள் வரை போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும். போட்டியாளர்கள் காளையின் வால், கொம்பு மற்றும்வாலை பிடித்து அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த கூடாது. இந்த விதிகளை மீறும் போட்டியாளர்கள், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுவார்கள். போட்டியாளர்கள் ஏறு தழுவும் முயற்சி மேற்கொள்ளும், 15 மீட்டர் இடம், மிருதுவான பகுதியாக மாற்றப்பட வேண்டும். அப்போது தான், காளைகளுக்கோ, போட்டியாளர்களுக்கோ காயம் ஏற்படாது.
ஏறு தழுவும் இடத்தில் இருந்து காளை சென்று சேரும் இடம் வரையான பகுதி காளை ஓடும் பகுதி எனப்படும். அப்பகுதி, பார்வையாளர் மாடத்தில் இருந்து, தள்ளி இருக்கும் வகையில்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். காளைகள் அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் தூரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் பார்வையாளர்கள் எழுப்பும் சத்தம், காளைகளை மிரள செய்யாது. போட்டி முடியும் இடத்தில், காளையின் உரிமையாளர் அல்லது அவரது பிரதி நிதி மட்டுமே இருக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர மீட்டர் இடம் அளிக்க வேண்டும். அங்கு உணவு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். அங்கு, 20 நிமிடங்கள் காளைகள் ஓய்வு எடுத்த பிறகு வீட்டுக்க அழைத்து செல்லலாம்.
பார்வையாளர் மாடம், குறைந்தபட்சம், 8 அடி உயரத்தில், இரட்டை தடுப்பு வசதியுடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும். பார்வையாளர் மாடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்பதை பொதுப்பணித்துறையினரின் வழிமுறைகளின்படி கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்கள்மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள், கால்நடை டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். அவசர காலவெளியேறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மதுரை: முதல்வர் பன்னீர்செல்வம் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்' என, பிரதமர் உறுதியளித்தார். பிரதமரின் உறுதியை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் வாடிவாசல் திறக்கப்பட்டு முதல் கட்டமாக அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லுாரில் மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். ஜல்லிக்கட்டை இனி யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Jallikattu accept the Prime Minister's determination was issued ordinance. The emergency law, sustainable law with the State Government
மதுரை: அலங்காநல்லுாரில் மழை பெய்து வருவதாலும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, மது
ரை கலெக்டர் வீரராகவ ராவ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்கள் விரும்பும் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தயாராக இருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்தின் விதிகளின் படி நடத்தப்படும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, தேவையான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு செய்து வருகிறோம்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கிராம மக்களும் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தான்.
ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்ததால் போட்டி நடத்த முடியாமல் இருந்தது. தற்போது, தமிழக அரசின் நடவடிக்கையால் தடை நீங்கி உள்ளது. அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் நிரந்தரமானது. இதனால், போராட்டத்தில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தற்போது மழை பெய்து வருகிறது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English summary: Madurai : alankanalluar despite the rain, protesters have been chipped in the preparations for the holding of the upcoming jallikattu competition.
சென்னை : ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்த ஆலோசனையை கருத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டுக்காக, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு
வருமானால், அந்த சட்டத்துக்கு தடை விதிக்கவோ அல்லது அந்த சட்டம் ரத்தாகவோ வாய்ப்பில்லை என்கின்றனர், சட்ட நிபுணர்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில், மாநில அளவில் திருத்தம் செய்யும் வகையில், தமிழக அரசு, அவசர சட்டம் கொண்டு வர உள்ளது. பிராணிகள் வதை தடுப்பு என்ற அம்சம், பொது பட்டியலில் வருகிறது. இது குறித்து, மத்திய அரசும், மாநில அரசும், சட்டம் இயற்றி கொள்ளலாம்.ஏற்கனவே, 2009ல், தி.மு.க., ஆட்சியின் போது, ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டது. 'இந்த சட்டம் செல்லாது' என, 2014ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சட்டத்துக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவில்லை என்பது முக்கியமான விஷயம்.
தற்போது கொண்டு வரப்படும் புதிய அவசர சட்டத்தில், காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சரத்துக்கள் சேர்க்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படும் போது, அதற்கு தடை விதிக்க வாய்ப்பில்லை என்பது, சட்ட நிபுணர்களின் கணிப்பு.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், கே.சக்திவேல் கூறியதாவது: மாநில அரசு கொண்டு வரும் சட்டம், மத்திய அரசு சட்டத்துடன் முரண்பட்டாலும் கூட, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டால் செல்லுபடியாகும். மேலும், காளைகளுக்கு துன்பம் விளைவித்தால் தண்டனை மற்றும் அபராதம் என, பாதுகாப்பு அம்சங்களையும், சட்டத்தில் சேர்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ள ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை, உறுதி செய்யும் வகையில், அவசர சட்டம் இருக்க வேண்டும்.
ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாததால் தான், 2009ல், தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ரத்தானது. தற்போது கொண்டு வரப்படும் அவசர சட்டத்தில், இத்தகைய குறைபாடுகள் இருக்காது என்பதால், இந்த சட்டம் செல்லும்.எந்த சட்டம் ஆனாலும், அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது தான். அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்.
அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய வழிமுறைகளை பின்பற்றி கொண்டு வரப்படும் சட்டம், ரத்தாக வாய்ப்பில்லை. காளைகளை, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்குவதற்கு, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தமோ, அவசர சட்டமோ கொண்டு வர வேண்டுமானால், பிராணிகள் நல வாரியத்தின் ஆலோசனையை பெற வேண்டும். ஏற்கனவே, இந்த வாரியத்தின் ஆலோசனைப்படி தான், 2011ல், பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது.
மத்திய அரசுக்கு இந்த சிக்கல் இருந்ததால் தான், அவசர சட்டம் கொண்டு வரவோ, சட்டத் திருத்தம் கொண்டு வரவோ, நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு கூறினார்.
English Summary: Chennai: after approval of the president, in consultation with the Supreme Court said, Jallikattu, the government comes up with the emergency law, the law prohibits the Law ban or unlikely, say legal experts.
புது டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானம் போராட்டங்களுக்கு என்றே புகழ்பெற்றது. அந்தளவுக்கு அதில் பல நாட்கள் நீடித்த போராட்டங்கள் பலவும் நடைபெற்றுள்ளன.
அப்போது, இரவு நேரங்களில் குழுக்களாக இணைந்து உரையாடுவதும், குளிர் காய்வதும் நடக்கும். சென்னை மெரினாவும் அதுபோல ஆகிவிட்டதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டிருப்போர் எண்ணுகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கூடிய இளைஞர்கள் கடுங்குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, குழுக்களாக சேர்ந்து தீ மூட்டி குளிர்காய்தனர். பல குழுக்கள் இதேபோல செய்யும் காட்சி, குளிரோ, வெயிலோ எதுவந்தாலும் போராட்டத்தை அவை பாதிக்காது என்பதைக் காட்டும் விதத்தில் இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், கல்லூரிகளை மூடி விட்டால் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி இரவு முழுவரும் கொட்டும் பனியிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அழைத்துப் பேசிய தமிழக அமைச்சர்கள், மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்த போதிலும், போராட்டம் நீடித்தது.
வீரத்தமிழ் சொல்லும் ஜல்லிக்கட்டு பாடல்!
அலங்காநல்லூர் போராட்டகளத்தில் மாணவர்கள் சோர்வை தவிர்க்க, அவர்களுக்கு வீர உணர்ச்சி ஊட்டும் வகையில் அங்குள்ள பெண்கள் வீரத்தமிழ் சொல்லும் ஜல்லிக்கட்டு பாடல்களை பாடினர். வீடியோ: இ.ஜே.நந்தகுமார்
பீட்டாவை சட்டரீதியில் தடை செய்ய முயற்சி- சசிகலா
நாளை அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது பற்றி கோரிக்கை வைக்க உள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா, பீட்டாவை தடை செய்ய சட்டரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம். பீட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது. பீட்டாவை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்டரீதியாக மேற்கொள்வோம்.' என்று கூறியுள்ளார்.
#Jallikattu லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கம்: வீடியோ: மோ.கிஷோர் குமார்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, நெல்லை, கோவை, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல நகரங்களுக்கும் இந்த போராட்டம் பரவத் தொடங்கி உள்ளது.
தமுக்கம் எதிரேயுள்ள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மாணவர் ஒருவர் கூறி வருகிறார். அவரை சமாதானப்படுத்தி சக மாணவர்கள் கீழே இறக்க முயற்சித்து வருகிறார்கள்.
அலங்காநல்லூரில் மக்கள்முன்பு இயக்குனர் கௌதமன் ஆவேச பேச்சு.
மதுரை கோரிப்பாளையம் சிகனல் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் மைதானம்வரையிலும் மாணவர்கள் நிரம்பியுள்ளார்கள். பல தன்னார்வலர்கள் உணவு, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் வழங்குகிறார்கள். கீழே சிதறி கிடக்கும் குப்பைகளை மாணவர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு போராட்டத்தை கண்ணியமாக நடத்தி வருகிறார்கள்.
எங்கள் மீது போலீஸ் கை வைத்தால் பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும்:சு.ப.உதயகுமார் எச்சரிக்கை
நாகர்கோவில் மாணவர் போராட்டத்துக்கு வந்த அதிமுகவினரை மாணவர்கள் விரட்டி விட்டனர்.
இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்து அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் கடந்த 3-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்ததால் போராட்டம் வலுத்தது.
இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்து அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் அமைதி பேரணி
ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தங்களை இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக போராட்டம் நடந்துவரும் நிலையில் தற்போது ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தங்களை இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் ஐ.டி ஊழியர்களும் சேர்ந்தது, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு வலு சேர்த்துள்ளது.
அலங்காநல்லூர் போராட்டத்திற்கு டிராக்டர் மூலம் கிராம மக்கள் வர ஆரம்பித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் மாணவர்கள் போராட்டம்.
கரூர் குமாரசாமி கல்லூரியில் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.
மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட திடீர் உத்தரவு!
அலங்காநல்லூர் பகுதியில் தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது.
புதுச்சேரி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகள் வரும் 20-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் விஜய் வசந்த் மெரினாவில் அமைதி பேரணி.
மதுரை கோரிப்பாளையத்தில் 20 ஆயிரம் மாணவர்கள், பொதுமக்கள் களத்தில் உள்ளனர்.
அலங்காநல்லூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், போராட்டம் செய்யும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் மோர், சர்பத் என குளிர்ச்சியான பொருட்கள் கிராம பொதுமக்கள் சார்பாக வழங்கப்படுகிறது.
அலங்காநல்லூர் மக்களின் போராட்டத்தில் பியூஸ் மனுஷ் கலந்து கொண்டிருக்கிறார்.
அலங்காநல்லூருக்கு பக்கத்து கிராம பெண்கள் தொடர்ந்து படையெடுத்து வந்துகொண்டே இருக்கின்றனர். அலங்காநல்லூரில் கைதான 21 நபர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என குற்றச்சாட்டு.
அலங்காநல்லூர் பகுதியில் போராடும் மாணவர்களுக்காக புதுப்பட்டி கிராமத்தில் இருந்து உணவு தயார் செய்யப்படுகிறது .
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் 3 நாட்கள் நீதிமன்றத்தை புறகணிக்க வழக்கறிஞர்கள் முடிவு.
சாயல்குடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அருப்புக்கோட்டை சாலையில் நடந்த இந்த தர்ணாவில் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
கார்கில் போரில் விமான படையில் வேலை செய்த சேலம், கொங்கனாபுரம் செல்வராமலிங்கம் என்பவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதக்கத்தை திருப்பி கொடுக்க சேலம் கலெக்டர் அலுவலம் வந்தார்.
படம்: விஜயகுமார்
திருப்பூரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுக்கு சில அமைப்புகள் வாட்டர் பாக்கெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர். குப்பைகூடைகளில் பீட்டா என்று எழுதி போராட்டத்தில் விழும் குப்பைகளை அதில் சேகரித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காமராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை எதிர்த்தும் பேரணியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதால் சேலம் ஸ்தம்பித்தது.
7000 மாணவர்களுக்கும் அதிகமானோர் கோவை வ.உ.சி மைதானத்தில் கூடியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் 20-ம் தேதி பந்த்: போராளிகள் இயக்கம் அறிவிப்பு
தேனி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று காலை நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். காளையுடன் வந்த மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைகளில் பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பீட்டா அமைப்புக்கு எதிராகவும், தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தையொட்டி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 600 மாணவர்கள் தற்போது போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தடையை நீக்கும் வரை போராட்டமானது தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலங்காநல்லூார் போராட்டத்தில் குவிந்துள்ள பெண்கள்.
இமான் அண்ணாச்சி அலங்காநல்லூாரில் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், மாணவர்களின் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான், ஜல்லிக்கட்டு இல்லை என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக புதிய சட்டம் கொண்டு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும் என்று கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி.ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் உடல் நிலை பாதிப்பிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்றுள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் போராட்டம் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று காலை மெரினாவிற்கு வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகானும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றும், பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை ஜே ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியில் மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இதனால் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டி.எஸ்.பி.மங்களேஸ்வரன் வாகனம் தாக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லை மாவட்டம் தென்காசியில் நடக்கும் ஆர்ப்பாட்டம்..
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள்ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் 1000த்திற்கும் மேற்பட்டோா் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாணவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வருகின்றனர்
மதுரை யாதவா கல்லூரி மாணவர்கள் திருப்பாலையில் உள்ள அவர்களது கல்லூரியில் இருந்து 5 கி.மீ தூரம் நடந்து சென்று தமுக்கம் மைதானத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற மாணவர்களுடன் கைகோர்க்கின்றனர். வீடியோ: வெ.வித்யா காயத்ரி.
திருப்பூரில் மாணவர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கான கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது... பல்வேறு அமைப்புகளும், பெண்கள் பள்ளி மாணவர்கள் என திரண்டிருக்கிறார்கள்
தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம், எதிரேயுள்ள எஸ்.ஏ.வி. விளையாட்டு மைதானத்தின் முன்பு இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்களின் ஜல்லுக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடந்து வருகிறது...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் 1500க்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டு க்கு ஆதரவாக போராட்டம். ராமநாதபுரத்திற்கு நடை பயணம் செல்ல முயன்ற மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு தற்போது கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறுமி கோஷம் எழுப்பும் வீடியோ காட்சியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பலர் இச்சிறுமியின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! வீடியோ: க.பாலாஜி
திருப்பூர் இணைந்தது... தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர் மாந கராட்சி முன்பு மாணவர்கள் திரள துவங்கியுள்ளனர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி மாணவ ,மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ஏப்டி மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
#Jallikattu மதுரை தமுக்கம் மைதானம் முன் உள்ள தமிழ் அன்னை சிலை முன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்வீடியோ: க.விக்னேஷ்வரன்
2-வது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ஏப்டி மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஊர்வலமாக வந்தனர் :
நெல்லை மாவட்டம் தென்காசியில் போராட்டம் நடப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சூழலில், வள்ளியூரிலும் போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டம் நொடிக்கு நொடி தீவிரடைந்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், போலீசார் என அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும், பிடியை கொஞ்சமும் தளர்த்தாமல், இளைஞர்கள் போராட்ட களத்தில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
உச்சத்தை எட்டும் மாணவர் போராட்டம் :
அலங்காநல்லூரில், 3வது நாளாகவும், சென்னை மெரீனா, நெல்லை, கோவையில் 2வது நாளாகவும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இருந்தும் அவர்கள் கொஞ்சமும் சோர்வடையாமல் உற்சாகமாக தங்களின் போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும், பீட்டாவுக்கு தடையும் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாகவும், அதுவரை, தங்களின் போராட்டம் ஓயாது எனவும் உறுதியாக உள்ளனர். இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்தால் கலவரம் தான் வெடிக்கும் என்ற கூற்றை பொய்யாக்கி, இதுவரை எங்கும், எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அமைதி வழியில் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருவது பலரையும் மிரம்மிக்க வைத்துள்ளது.
உலகை திரும்பி பார்க்க வைத்த போராட்டம் :
யாரும் போராட்டத்திற்கு அழைக்காமல், தாங்களாகவே சமூக வலைதளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து முன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தர முன்வந்தும், அத்தனையை புறந்தள்ளி, எழுச்சியுடன் இளைஞர்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் உலக நாடுகளையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மாணர்கள் களமிறங்கிய எந்த ஒரு போராட்டமும் இதுவரை தோல்வி அடைந்ததில்லை என்ற வரலாறு சான்றுகள் உள்ளதால், ஜல்லிக்கட்டுக்காக தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டமும் வெற்றி அடையும், இந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற நம்பிக்கை பலரின் மனதில் எழுந்து வருகிறது. மாணவர்கள் அமைதியான முறையிலேயே போராட்டத்தை தொடர்ந்து வருவதால் போலீசாரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எந்த தடையும் விதிக்காமல், மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். English Summary: Chennai: Jallikattu in favor of students, youth expressing Mbps per second across a struggle. Ministers, officials, police and conducting talks on the succession, hold no hesitate, have continued to fight in the battle of youth.
சென்னை : இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் வயது வேறுபாடின்றி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய அனைவரின் ஒருமித்த குரலாகவும், எதிர்ப்பு குரலாகவும் ஒலிக்கும் ஒரே வாசகம் 'பீட்டாவை தடை செய்' என்பது தான். பீட்டாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு :
ஜல்லிக்கட்டு எந்த அளவுக்கு ஆதரவு பெருகி வரு
கிறதோ, அதே அளவிற்கு பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு குரலும் வலுவாக ஒலித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பீட்டாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்களில் பீட்டா குறித்து பரப்பப்பட்டுள்ள தகவல்கள் ஆகும்.
சமூக வலைதளங்களால் இணைந்த இளைஞர்களாலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த போராட்டம் இந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பீட்டா குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீட்டாவை தடை செய்தே தீர வேண்டும் என தமிழக இளைஞர்கள் முழுமூச்சுடன் போராட்டத்தில் இறங்கி வரும் நிலையில், கடையடைப்பு போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவசர சட்டம் கொண்டு வரவும் அலங்காநல்லூர் கிராம மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு இன்று மாலை வரை கெடு விதித்துள்ளனர்.
பீட்டாவுக்கு எதிராக மட்டுமின்றி, பீட்டாவை ஆதரிப்போருக்கு எதிராகவும் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
English summary: Chennai: youth, college students and the general public, as traders took to the road in support of all parties, regardless of age, have been fighting Jallikattu. Jallikattu everyone's voice in support of the landings, and the sound of the voice of opposition to the single phrase: 'clog beta' is that.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி,சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 24 மணி நேரத்தை கடந்து போராட்டம் நீடிக்கிறது. நேற்று இரவு, 2:00 மணிக்கு அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
போலீஸ் பேச்சுவார்த்தை:
இன்று காலை முதல், அப்பகுதியில் கூட்டம் அதிகரித்து வருகிறது. மதியம், 12:15 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மாணவர்களிடம் பேசியதாவது:
நான், சில ஆண்டுகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி.,யாக பணியாற்றி உள்ளேன். அப்போது மூன்று முறை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை நடத்தி உள்ளேன். அந்த வகையில் தான்உங்களுடன் பேச வந்துள்ளேன். இங்குள்ள போராட்டகாரர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்; மதுரை அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை நடத்த, பிராணிகள் நல சட்டத்தின் 27 வது பிரிவை திருத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பேசவும், பிரச்னைக்கு தீர்வு காணவும் உங்களின் பிரதிநிதிகள் சிலர் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
ஆனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனால், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஏமாற்றத்துடன் சென்றார்.
English summary:
Chennai Marina Beach police told students and young people who have accumulated in the negotiations ended in failure. Demand to hold jallikattu, Chennai Marina beach yesterday morning, have been demonstrating for the first students and youth. The struggle to pass the time and lasts 24 hours. Last night, at 2:00 pm, they held talks with the ministers ended in failure.
சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பொது இடங்களிலும், கல்லூரி வாயில்களிலும் வகுப்புக்களை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒன்றிணையும் மாணவர்கள் :
சென்னை மெரீனாவிலும், மதுரை தமுக்க மைதானத்திலும், கோவை வ.உ.சி., மைதானத்திலும் சுமார் 5000 மாணவர்கள் திரண்டு, நேரம் செல்ல செல்ல போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இது தவிர சென்னை, விருத்தாச்சலம், சிதம்பரம், தேனி, மேலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவம், சட்டம், கலை கல்லூரிகளில் வாயில் முன் அமர்ந்தும், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல பகுதிகளில் கால்நடையாகவும், இருசக்கர வாகனங்களிலும் பேரணியாக சென்று வருகின்றனர். ராமநாதபுரத்தில் மனிதசங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதியிலும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களும் ஒரே குரலாக, ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் ஓயாது என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம் ஓயாது :
மாணவர்கள் இரவு, பகலாக பனி, வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் போன் டவர் மீது ஏறி சில மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அலங்காரநல்லூர், மதுரை - பரவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை - பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுடன் இணைந்து கிராம மக்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மற்றும் சென்னையில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
English Summary: Chennai: Tamil Nadu Jallikattu in favor of college students from around the 3rd day of the ongoing struggle is intensifying. Public places, college students boycotted classes and have been agitating for the exits
சிவகங்கை: சிவகங்கையில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டத்தால் சிவகங்கை திணறியது.
உறுதி:
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் எனக்கூறி தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கல்லூரியிலிருந்து முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்றனர். அரண்மனையை தாண்டி பேரணியாக சென்ற மாணவர்கள், பஸ் ஸ்டாண்ட் அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர். அங்கு பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷம் எழுப்பி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சென்னையில் மாணவர்கள் போராட்டத்திற்கு முடிவு கி டைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
தடையை மீறி...
சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டி என்ற இடத்தில் தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட காளைகள் இந்த போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால், ஆத்தரிமடைந்த அங்கிருந்த மக்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பசுக்காரன்பட்டி மற்றும் காக்கிவீரன்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. பசுக்காரன்பட்டியில் செல்லம்கருப்பசாமி கோயிலில் வழிபாடு நடத்தி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விட்டனர். இதேபோல், காக்கிவீரன்பட்டியில் சிறுபட்டி முத்தையா கோயிலில் வழிபாடு நடத்திய பின் காளைகளை விட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
அதேபோல், ஆத்தூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது.
கூலமேடு, தம்மம்பட்டி, மல்லியக்கரை, காட்டுக்கோட்டை, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் வ.வு.சி., பூங்காவில் பல கல்லூரிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கூடியுள்ளனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் எனவும் கூறினர். அவர்கள் பேரணி செல்ல முயற்சி செய்து வருகின்றனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு இயக்குநர் சீமான் வந்தார். அங்கிருந்த நேரு பீடத்தின் மீது அவர் ஏறி நின்றார். அப்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. தண்ணீர் பாட்டீல்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
English Summary: Sivaganga: Jallikattu in Sivaganga Sivaganga struggled to fight for the students.
சிகாகோ: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி, தமிழகம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் தமிழர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் வகையில் அமெரிக்காவில் உள்ள ரிச்மாண்ட் என்ற இடத்தில், மலைசாமி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பதாகைகளை தாங்கி, வலியுறுத்தினர். சிகாகோவில் அறம் அமைப்பின் சார்பில் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கள் ஆதரவை பதிவு செய்தனர். உலக மக்கள் ஆதரவு :
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, ஹாங்காங், துபாய், இங்கிலாந்து, மெக்சிகோ, அயர்லாந்து, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், உக்ரைன், தென்னாப்பிரிக்கா, சீனா, உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வழக்கமான பொங்கல் கொண்டாட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தங்களின் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
பீட்டாவுக்கு தடை வேண்டும் :
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்றக் கோரியும், இப்பிரச்னைக்கு காரணமான பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரியும் பதாகைகளுடன் அவர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை போலவே, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வரை இப்போராட்டத்தை தொடர போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டங்களில் பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் போராட்டம் :
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் வகையில் அமெரிக்காவில் உள்ள ரிச்மாண்ட் என்ற இடத்தில், மலைசாமி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பதாகைகளை தாங்கி, வலியுறுத்தினர். இது குறித்து மலைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தின் ரிச்மாண்டில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கூறி, ஜல்லிக்கட்டிற்கு தங்கள் ஆதரவைப் பதிவு செய்தார்கள். தமிழர்களின் உணர்வுகளுக்கும் பண்பாட்டிற்கும் மதிப்பளித்தும், தமிழ்நாட்டின் உள்ளூர் மாட்டினங்களை அழிவில் இருந்து தடுப்பதற்காகவும் ஜல்லிக்கட்டை வரைமுறைப் படுத்தி நடத்துமாறு கூறி கூடினார்கள். இந்தக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தடையினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும், இதில் விளையாடிக்கொண்டிருக்கும் பெரும் அரசியலையும் ஆதரவாளர்கள் கூட்டத்தினருக்கு விளக்கினார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
Chicago: Jallikattu calling for the lifting of the ban, are fighting the Tamils in Tamil Nadu but also internationally. Jallikattu Richmond in favor of the United States, where hundreds of people carrying banners malaisamy leadership, stressed. Ethics in Chicago with his family for their support on behalf of a number of those registered.
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆதரவு பெருகிற வருகிறது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து பள்ளி மாணவர்களும் களம் இறங்கி வருகின்றனர்.
இளைஞர்கள் உறுதி :
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை- அலங்காநல்லூரில் 3வது நாளாகவும், சென்னை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் 2வது நாளாகவும் கல்லூரி மாணவர்களும், சமூக வலைதளங்கள் மூலம் இணைந்த இளைஞர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டை இந்த ஆண்டே நடத்த வேண்டும், பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கும் வரை கல்லூரிக்கு செல்ல மாட்டோம் என கல்லூரி மாணவர்கள் கூறி வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை பள்ளிக்கு செல்ல மாட்டோம் என கூறி வருகின்றனர்.
அமைச்சர்கள் வாக்குறுதி :
சென்னை மெரீனாவில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் அழைத்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். அவசர சட்டம் கொண்டு வருவதற்கு பிரதமர், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்போம். பார்லி., கூட்டத்தொடருக்கு முன்பு சட்டப்பிரிவு 27 ல் காளைகளை சேர்க்கவும் அழுத்தம் தருவோம். அவசர சட்டம் கொண்டு வராததற்கு மத்திய அரசு கூறும் காரணங்களில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. இளைஞர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது தான் ஒரே வழி என்றால் அதற்கும் தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவித்தனர். அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட இளைஞர்கள், முதல்வரின் அறிக்கையை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும். இருப்பினும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
பெருகும் ஆதரவு :
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் ஆதரவு பெருகி வருகிறது. சென்னை, மதுரை, புதுச்சேரி, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தின் மீது ஏறி நின்று, இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழகர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வலுக்கிறது போராட்டம் :
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள், இன்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி 20ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். பல இடங்களில் இளைஞர்களுடன் பொது மக்கள், பெண்கள் ஆகியோரும் சாலைமறியல் நடத்தி வருகின்றனர். தொடர் சாலை மறியல் போராட்டத்தால் அலங்காநல்லூரைச் சுற்றிய 50 கிராமங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கூறி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை அருகேயுள்ள பரவை கிராமத்தில் பொது மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., டவரில் ஏறி 2 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திருத்தணி மற்றும் தஞ்சாவர் மாவட்டம் கும்பகோணத்தில் மாணவர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்களும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவிக கல்லூரி மாணவர்களும், திருவண்ணாமலை, ஆரணியில் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். English Summary: Chennai, Tamil Nadu and Pondicherry jallikattu struggle is increasing support. Field school students and college students descend on the struggle continues.
சென்னை: ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டகுழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அவசர சட்டம் கொண்டு வர ஜனாதிபதி, பிரதமருக்கு அழுத்தம் தரப்படும் எனவும் இதுகுறித்து முதல்வர் இன்று(ஜன.,18) அறிக்கை வெளியிடுவார் எனவும் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாநில மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை நடத்த அவரது இல்லத்திற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளாக 10 பேர் கொண்டு குழுவை அழைத்து சென்றனர். அவர்களை அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவசர சட்டத்திற்கு அழுத்தம் தரப்படும்:
அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது: போராட்டக் குழு பிரதிநிதிகளின் கோரிக்கைகளை முதல்வரிடம் தொலைபேசியில் தெரிவித்தோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்போம். அதிமுக கட்சி எம்.பி.,க்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து அவரச சட்டம் கொண்டு வர வலியுறுத்துவார்கள். முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்துமுதல்வர் 24 மணி நேரத்தில் அறிக்கையை வெளியிடுவார். இளைஞர்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
ஜல்லிகட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும்:
போராட்ட குழு பிரதிநிதிகள் கூறியதாவது: "ஜல்லிக்கட்டை நடத்திய ஆக வேண்டும். காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரியம் குறித்து எதுவும் தெரியாத வெளிநாட்டு அமைப்பான பீட்டா அமைப்பை குறைந்தபட்சமாக தமிழகத்திலாவது தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு விசயத்தில் முதல்வர் ஆதரவு தர வேண்டும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எந்தவித வழக்கு பதிவும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். அமைச்சர்கள் முதல்வரிடம் பேசினார்கள். முதல்வர் இன்று அறிக்கை வெளியிடுவார். அந்த அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிப்பார்கள், ஜல்லிகட்டு நடக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்." என்றார்கள்.
தொடர்ந்து போராட்ட குழு பிரதிநிதிகள் போராட்டகாரர்களிடம் சென்று இது குறித்து தெரிவித்தபோது முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை அளித்தால் மட்டும் போதாது போராட்டகளத்திற்கு நேரில் வந்து ஜல்லிகட்டு நிச்சயம் நடக்கும் என்ற உறுதியை அளிக்க வேண்டும். என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் போராட்டகாரர்களை கலைந்து செல்ல வலியுறத்தியும் போராட்டகாரர்கள் கலைய மறுத்து விட்டனர். தொடர்நது போலீசாரும் அமைதியான போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தொடரும் என தெரிவித்துள்ளனர்.
English Summary: Chennai: jallikattu ministers to continue the struggle until the talks, representatives of the militiamen said. Emergency law to the President, the Prime Minister about this today would be pressure on (Mat., 18) the announcement by the Ministers mahpa Pandia and Jayakumar said
சென்னை: மெரினா கடற்கரையில் கடும் குளிரிலும் இளைஞர்களின் அனல் தகிக்கும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
தமிழகத்தில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னையில் நேற்று காலை சுமார் 7 மணிக்கு வெறும் 50 பேருடன் துவங்கிய போராட்டம் 18 மணி நேரத்ததை தாண்டி நள்ளிரவு தீவிரம் குறையாமல் உள்ளது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடியதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரியும் போராட்டம் நடந்தது. முதலில் சிறியதாக துவங்கிய போராட்டம் நேரம் செல்ல செல்ல ஆதரவு பெருகியது. இத்தகவலை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சென்னை மெரினாவை நோக்கி படையெடுக்க துவஙக்கினர். சுமார் 50 பேருடன் துவங்கிய போராட்டத்தில் தற்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர்.
நள்ளிரவிலும் போராட்டம்:..
அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் தற்போது சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. நள்ளிரவிலும் போராட்டம் வலுகுறையாமல் நடந்து வருகிறது. சென்னை மெரினாவில் பெரும் அளவில் போராட்டம் நடைபெற்றாலும் அப்பகுதியில் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. போராட்டகாரர்களும் சாலை மறியல் முயற்சியோ அல்லது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்த முயற்சிக்கவும் இல்லை. மேலும் இரவு நேரம் என்பதால் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டகாரர்கள் பேராராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் பெரும் ஆதரவு:
ஜல்லிகட்டு ஆண்களுக்கான விளையாட்டு என்றாலும் அதன் மீதான தடை நீக்க பெண்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் நள்ளிரவில் நடக்கும் போராட்டங்களுக்கு பெண்களும் பெரும் ஆதரவும் அளித்து வருகின்றனர். பலர் குடும்பத்துடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்,
நாளையும் போராட்டம்:
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த பலர் ஒருங்கிணைப்புகளை நடத்தி வருகின்றனர். நாளை கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறுக்கணித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் அழைப்புகளை விடுத்து வருகின்றனர். சமூக வலைதளம்:
ஜல்லிகட்டிற்கு தமிழகம் முழவதும் நடந்து வரும் இந்த போராட்டம் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமே ஒன்றிணைக்கப்படுகிறது. சமீப காலத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு பங்கேடுத்து வரும் நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த போராட்டம் பலரை திருப்பி பார்க்க வைத்துள்ளது. English Summary: Chennai: Marina Beach extinguished the severe cold and heat of the struggle of youth is intensifying.