சென்னை: பணப்பட்டுவாடா தொடர்பாக தினகரன் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பன்னீர் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
பணப்பட்டுவாடா:
இதுதொடர்பாக பன்னீர் அணியை சேர்ந்த மைத்ரேயன் தெரிவிக்கையில், ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் பணப்பட்டுவாடா செய்கிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். டில்லியில் இன்று (மார்ச்,28) மதியம் 12 மணி அளவில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல்:
ஏப்ரல் 12 ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சசிகலா அணியிலிருந்து, அ.தி.மு.க., அம்மா கட்சி சார்பில் டி.டி.வி.தினகரனும், பன்னீர் அணியிலிருந்து அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.