Friday, 17 February 2017
எப்போதுமே செயல்படாத அதிமுக அரசு: கனிமொழி குற்றச்சாட்டு
சென்னை:தமழக அரசியல் சூழ்நிலை குறித்து தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில் திமுக தலையிடாது.சரியில்லை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. இது பற்றி பேசவில்லை. ஜெ.,ஆட்சியில் கூட பெரிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. அரசு செயல்படவில்லை. அரசு செயலிழந்த நிலையில் உள்ளது. அது பற்றி யாரும் பேசவில்லை. எப்போதும் அதிமுக அரசு செயல்படாத அரசு தான். நீட் தேர்வு பற்றி தமிழகத்தின் நிலை பற்றி என்னவென்றே தெரியவில்லை. ஸ்டாலின் மட்டும் தான் இதுபற்றி பேசி வருகிறார்.
மக்கள் தெளிவு:
மீண்டும் தேர்தல் வந்தால், யார் வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். யார் வந்தால் வாழ்க்கை மாறும் என தெளிவாக உள்ளனர். அது திமுக என்பதை புரிந்து கொண்டுள்ளார். மக்கள் திமுகவை ஆதரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக எம்எ.ல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 134 பேருக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி கொறடா ராஜேந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நாளை(18 ம் தேதி) சட்டசபைக்கு வர வேண்டும்.இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே இன்று (வெள்ளி) மதியம் 3 மணிக்கு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார்.
சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு: ஓ.பி.எஸ்., அணியினர் கோரிக்கை
சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுடன், ஓ.பி.எஸ்., அணியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இவர்களுடன் எம்.எல்.ஏ.,க்கள் சண்முகநாதன், மாணிக்கம், ஆகியோரும் சென்றனர்.ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் சந்தித்தனர்.அப்போது அவர்கள், நாளை ரகசிய நம்பிக்கை ஓட்டெடுப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்ததாக தெரிகிறது.
தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும்: முதல்வர் இடைப்பாடி
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற இடைப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.முயற்சி:
அந்த கடிதத்தில், ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ளும். மாநில மேம்பாட்டிற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து சசிகலா, இடப்பாடியை நீக்கினார் மதுசூதனன்
சென்னை: அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால் மதுசூதனனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அதிமுக பொது செயலர் சசிகலா அறிவித்திருந்தார். இதனால் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.சசிகலா நீக்கம்:
இந்நிலையில், அதிமுகவின் பொது செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் நீக்கப்படுகிறார். வெங்கடேஷ், தினகரன் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கபடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் தினகரனை அதிமுக துணை பொது செயலர் பதவியில் அவசர அவசரமாக நியமித்தார்.
அமைச்சர்கள் நீக்கம்:
தொடர்ந்து அதிமுகவிலிருந்து முதல்வர் இடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன, தளவாய் சுந்தரம், வளர்மதி, ஆர்.பி., உதயகுமார். சி.விசண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சசிதரப்பை சேர்ந்த வைகைசெல்வன், அதிகாரம் யாருக்கு உள்ளது என மதுசூதனன் தெரியாமல் உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சட்டசபை செயலருடன் சபாநாயகர் ஆலோசனை
சென்னை: நாளை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து சபாநாயகர் தனபால், சட்டசபை செயலர் ஜமாலுதீனுடன் ஆலோசனை நடத்தினார்.
English summary:
Chennai: tomorrow's assembly poll in the faith. The Speaker of the Assembly, Mr. Dhanapal events and law programs, the assembly held consultations with Secretary Jamaluddin.
English summary:
Chennai: tomorrow's assembly poll in the faith. The Speaker of the Assembly, Mr. Dhanapal events and law programs, the assembly held consultations with Secretary Jamaluddin.







