Monday, 20 February 2017
கச்சிதமாக முடித்த கவர்னர் ராவ்; வேலை முடிந்தது; மும்பை கிளம்பினார்
சென்னை: ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்ந்தது முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் பிரதமர் வரை தமிழகம் வந்து சென்றனர். ஜெ.,மறைவு , மர்மம் ஒரு பக்கம், அடுத்த முதல்வர் யார் என்ற செய்திகள் பரவிட கவர்னர் தமிழகத்தின் முழு பணியில் இறங்க வேண்டியதாயிற்று.
ஓ.பி.எஸ்., போர்க்கொடி :
தமிழக அரசியலில் அடுத்து சசி முதல்வராக வேண்டும் என காய் நகர்த்தி அவர் அதிமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் அப்போது மாநிலத்தில் இல்லை. அவர் வருவாரா, என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது கவர்னர் கடந்த 9ம் தேதி மும்பையிலிருந்து சென்னை வந்தார். சசி பொறுப்பேற்கவிருந்த நேரத்தில் ஓ.பி.எஸ்., சசிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் மேலும் பரபரப்பு தொற்றியது. அந்த நாள் முதல் கவர்னர் மாளிகை எப்போதும் பரபரப்பாகவும், பிஸியாகவும் இருந்தது. காலை, மாலை, மதியம் என ஓ.பி.எஸ்., ஸ்டாலின், சசிகலா, சுப்பிரமணிய சுவாமி, இடைப்பாடி பழனிசாமி, தலைமைசெயலர், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினர்.
கவர்னர் மாளிகை நோக்கி கவனம்:
தொடர்ந்து, அடுத்து யார் ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கவர்னர், சசி ஆட்சி அமைக்க உரிமை கோரியும் அவரை அழைக்கவில்லை. பொறுமையாக இருந்தார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் அனைவரது கவனமும் கவர்னர் மாளிகை நோக்கி திரும்பியது. சுப்ரமணியன்சாமி முதல் பலர் கவர்னரை விமர்சிக்க துவங்கினர். கவர்னர் எடுத்த முடிவு சரியானது என்றும், மறு தரப்பினர் தவறானது என்றும் கருத்து தெரிவித்தனர்.
சிறைக்கு சென்ற சசிகலா :
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியானதை அடுத்து கவர்னர் முடிவு சரியானது என பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து அவசர, அவசரமாக கூவத்தூரில் இடைப்பாடி பழனிசாமி சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 15 ம்தேதி சசி சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஆட்சி அமைக்க இடைப்பாடி உரிமை கோரினார். 16ம் தேதி தமிழக முதல்வராக இடைப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவர்னரின் உத்தரவுப்படி பழனிசாமி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து நேற்று ( 18 ம்தேதி) சட்டசபை சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் அமளி, ரகளைக்கு மத்தியில் பழனிசாமி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டாலின், சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சட்டை கிழிப்பு நடந்தது.
இதனையடுத்து இன்று (19 ம் தேதி ) காலை முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, திமுக மற்றும் ஓ.பி.எஸ்., தனித்தனியாக கவர்னரை சந்தித்து தங்கள் பக்கம் நியாயங்களை எடுத்து கூறினர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு, கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 1 மணிக்கு மும்பை கிளம்பி சென்றார்.
மீண்டும் எப்போது வருவார் ?
எது எப்படியோ ஒரு வாரத்தில் தமிழகத்தின் தலைவிதி, பதட்டம் என எல்லாமே கவர்னர் பக்கமே அதிக பொறுப்பு இருந்தது என்பதை காட்டுகிறது. கவர்னர் ராவ் உள்துறை இணை அமைச்சராக இருந்து பல்வேறு அநுபவங்களை கண்டவர் என்பதால் தமிழக அரசியல் சூழலில் நல்ல முடிவை எடுத்து பிரச்சனைகளை இப்போதைக்கு சுமுகமாக முடித்து வைத்துள்ளார். அவர் மீண்டும் எப்போது வருவாரோ என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த அரசு நீடிக்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை:‛‛ தமிழகத்தில் இந்த அரசு நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்,'' என, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தி.மு.க.,வுக்கு கண்டனம்:
கோவில்பட்டியில், இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபையில், சபாநாயகர் தெரிவித்த கருத்துக்கள் தேவையில்லாதது. அதேபோல், தி.மு.க., உறுப்பினர்களின் செயல்களையும் ஏற்க முடியாது. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசு ஒத்துழைப்பு தரும். ‛நீட்' தேர்வு குறித்து, கடந்த ஒரு ஆண்டில் சட்டசபையில் என்ன பேசி உள்ளனர் என்று கூற முடியுமா. தேர்வு நடக்கும் போது மட்டும் அதுபற்றி பேச கூடாது. மாணவர்களுக்கு நல்ல கல்வி தராமல் கடந்த, 50 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. ஒரு அரசு பள்ளி மூடப்பட்டால், 100 மாணவர்கள் இலவச கல்வி இழப்பர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்
22ம் தேதி திமுக உண்ணாவிரதம்: ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் தாக்கப்பட்டது குறித்தும், வெளியேற்றப்பட்டது குறித்தும், தனது சட்டை கிழிக்கப்பட்டது குறித்தும் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து, வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஜனாதிபதியை சந்திக்க திட்டம்:
சென்னை: பத்திரிகையாளர்களிடம் பேசிய தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: திருச்சியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். காஞ்சிபுரத்தில் துரைமுருகன் பங்கேற்க உள்ளார். எம்.பி.,க்கள் கவர்னரை சந்தித்து புகார் அளித்துள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க திட்டம் உள்ளது; நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் எனக்கூறினார்.
English summary:
Chennai: The Assembly was attacked, knocked out of his shirt was torn in the Anna office DMK MLAs consulting with Stalin, MLAs, some in the crowd The main conclusions were drawn.
ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க கவர்னரிடம் தி.மு.க., கோரிக்கை
சென்னை: தி.மு.க., எம்.பி.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். நேற்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, நடந்த பிரச்னை தொடர்பாக கவர்னரிடம் எம்.பி.,க்கள் புகார் அளித்தனர்.கடிதம்:
இந்த சந்திப்பை தொடர்ந்து திருச்சி சிவா பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்; சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி இல்லாமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது முரண்பாடாக உள்ளது. போலீசார், சட்டசபை அவைகாவலர்கள் போல் வேடமணிந்து உள்ளே வந்தனர். இது தொடர்பான ஆதாரத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளோம். சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். அதனை கவர்னரிடம் வழங்கியுள்ளோம். கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கவர்னர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
DMK MPs met Governor Vidyasagar Rao. Trichy Siva, tikees. Mr.R.S barathi met with the governor. During the last assembly poll in the faith, to the governor on the issue of MPs had complained.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி எதிரொலி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னருடன் சந்திப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக கவர்னரை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் வெற்றிபெற்றதற்கான வீடியோ ஆதாரங்கள்,மற்றும் அறிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.அதிமுக அரசு வெற்றி :
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் அமைச்சர்கள் சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்த விபரங்களை வீடியோ ஆதாரங்களாகவும் அறிக்கையாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னரிடம் வழங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அமைச்சர்கள் :
இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் உடன் சென்றிருந்தனர். கவர்னருடன் சுமார் 30 நிமிட நேரம் சந்தித்து பேசிய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கவர்னர் புறப்பட்டார்:
இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆர். எஸ். பாரதி, டி.கே. எஸ். இளங்கோவன் ஆகியோர் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும் , சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் கவர்னரிடம் மு.க. ஸ்டாலின் சார்பாக நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களுடம் கவர்னரைச் சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார். தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதால் காலையிலேயே அரசியல் தலைவர்களை சந்தித்து பேசிய பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றுமாலை மும்பை புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டசபையில் கடும் அமளி: சபாநாயகரை முற்றுகையிட்டு தி.மு.கவினர் கோஷம்
சென்னை : தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உத்தரவுப்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைகோரும் தீர்மானம் நேற்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட நிலையில், தி.மு.க.வினர் சபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷமிட்ட தி.மு.க.வினர், அவரது இருக்கையை உடைத்ததோடு, காகிதங்களை கிழித்தெறிந்தனர். சபாநாயகரை பேசவிடாமல், மைக்கின் மின் இணைப்பையும் துண்டித்தனர். அவரது சட்டையை பிடித்து இழுத்தனர். சபாநாயகர் இருக்கையில் தி.மு.க எம்.எல்.ஏ. கு.க. செல்வம், ரெங்கநாதன் ஆகியோர் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது நிலைமை விபரீதமாகவே, சபைக் காவலர்கள் சபாநாயகரை பாதுகாப்பாக அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர்.சிறப்புக் கூட்டம்:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழக சட்டசபையில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைகோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்காக நேற்று காலை 11 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு:
பேரவைக் கூட்டம் தி.மு.க.வினரின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே தொடங்கியது. அவர்கள் தெரிவித்த புகாரைக் கேட்டுக்கொண்ட சபாநாயகர் தனபால், உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தனது பொறுப்பு என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அனைத்து சூழலையும் கருத்தில் கொண்டே வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும், சட்டப்பேரவை விதியின்படியே தாம் செயல்படுவதாகவும், அனைவரும் சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
கோரிக்கை நிராகரிப்பு:
இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியினர், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்து கோரிக்கை விடுத்தனர். இதேபோல தி.மு.கவினரும் கோரிக்கை வைத்தனர். மேலும் வாக்கெடுப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் வற்புறுத்தினர். ஆனால் சபாநாயகர் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
தி.மு.க.வினர் பெரும் ரகளை:
இந்த சூழ்நிலையில், வாக்கெடுப்பு குறித்து சர்ச்சையை எழுப்பிய தி.மு.க. உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை உடைக்கப்பட்டதோடு, அவரின் மைக்கின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேஜையை தள்ளி, தி.மு.க.வினர் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, சட்டமன்ற செயலாளரின் மேஜையில் இருந்த தாள்களை கிழித்து, சபாநாயகரை நோக்கி எறிந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் வேதனை:
தொடர்ந்து தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இந்த நிலைமை சுமார் 2 மணிநேரம் நீடித்தது. ஆனால் சபாநாயகரால் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து சபைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, சபாநாயகர் பாதுகாப்பாக அவருடைய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக மதியம் 1 மணி வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் சபையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை யாரிடம் சொல்வது. அதை எப்படி சொல்வது என்று சபாநாயகர் வேதனையோடு தெரிவித்தார்.
தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்:
பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் அதே நிலை நீடித்தது. இதையடுத்து தி.மு.க வினரை சபையைவிட்டு வெளியேற்றுமாறு அவைகாவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் தி.மு.க வினரை காவலர்களால் வெளியேற்ற முடியவில்லை, அவர்கள் உள்ளேயே இருந்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதையடுத்து சபை மீண்டும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைபட்ட நேரத்தில் சபையில் மைக் சரிசெய்யப்பட்டு, அவையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அதே நேரத்தில் அதிரடிப்படை போலீசார் சபைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு சபை கூடியபோது அப்போதும் தி.மு.க வினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உட்பட் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அரசுக்கு ஆதரவாக 122 வாக்குகள்:
அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 122 வாக்குகளும், அரசுக்கு எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. அதாவது இந்த 11 வாக்குகளையும் பன்னீர்செல்வம் அணியினர் பதிவு செய்தனர். எண்ணிக்கை அடிப்படையில் நடந்த இந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.