Friday, 24 February 2017
குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம்: முதல்வர் அறிவிப்பு

மார்ச் முதல்:
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்படும். இத்திட்டம் மூலம் 30 மாவட்டங்களில் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கி, நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். 2017-18ம் ஆண்டில் ரூ.300 கோடி செலவில் மாநிலம் முழுவதும் மக்கள் இயக்கமாக செயல்படும். மார்ச் மாதம் முதல்வாரத்தில் இப்பணிகள் துவங்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடி நன்றி

முதல்வர் பட்னாவிஸ் கூறியதாவது: இந்த வெற்றி பிரதமர் மோடியின் திறமையான நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி. என தெரிவித்துள்ளார்.
உ.பி., 4-ம் கட்ட தேர்தல்: 61 சதவீதம் ஓட்டுப்பதிவு

61% ஓட்டுப்பதிவு:
உ.பி.,யில் சட்டசபை
தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று(23ம் தேதி) 12 மாவட்டங்களில் 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீதம் அளவிற்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் வரையில் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 கட்டங்களாக..
உ.பி.,யில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், ஆட்சியை பிடிக்க பா.ஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முட்டி மோதுகின்றன. அடுத்த கட்ட ஓட்டுப்பதிவுகள் பிப்.,27, மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்: டில்லியில் ஸ்டாலின் பேட்டி

மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு:
பின்னர் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்தினோம். ஆட்சியாளர்களுக்கு சாதகமாக சபாநாயகர் தனபால் நடந்து கொண்டார். எதிர்கட்சி உறுப்பினர்களான எங்களை வேண்டுமென்றே வெளியேற்றிவிட்டார். உ.பி. ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரகசிய ஓட்டெடுப்பு நடந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி தமிழக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் கோரிக்கை ஜனாதிபதி பரிசீலிப்பார் என நம்புகிறோம். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தி.மு.க., தலையிடாது. விரைவில் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மலரும் என்றார்.
இன்று(பிப்.,24) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல் கையெழுத்து:
தமிழக முதல்வராக பிப்., 16ல், இடைப்பாடி பழனிசாமி, பதவியேற்றார். 18ல், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தார். தொடர்ந்து ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பும் ஒன்று. இந்நிலையில் இன்று(பிப்.,24) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மேலும் அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு மாற்றுப்பணி:
மூடப்படும் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் உபரி ஊழியர்களுக்கு, டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக மூடப்படும் கடைகள் விவரம்:
சென்னை மண்டலம்: 105 டாஸ்மாக் கடைகளும், 63 பார்களும் மூடப்படுகின்றன.
கோவை மண்டலம்: 44 டாஸ்மாக் கடைகளும், 20 பார்களும் மூடப்படுகின்றன.
திருச்சி மண்டலம்: 119 டாஸ்மாக் கடைகளும், 23 பார்களும் மூடப்படுகின்றன.
மதுரை மண்டலம்: 99 டாஸ்மாக் கடைகளும், 37 பார்களும் மூடப்படுகின்றன.
சேலம் மண்டலம்: 133 டாஸ்மாக் கடைகளும், 26 பார்களும் மூடப்படுகின்றன.
ஓ.பி.எஸ்., அதிமுகவிற்கு திரும்ப வேண்டும்: தீபக்
