Wednesday, 22 March 2017
கமல் மீது வழக்கு : விசாரித்து அறிக்கை தர கோர்ட் உத்தரவு
திருநெல்வேலி: மகாபாரதம் குறித்து இழிவாக பேசியதாக நடிகர் கமல் மீது தொடரப்ட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தர போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கமல், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசிய கமல் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பழவூர் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி : எஸ்.பி.ஐ., அச்சம்
புதுடில்லி: உ.பி.,யில் விவசாயிகள் கடனை ரத்து செய்தால் அரசுக்கு ரூ.27,429 கோடி இழப்பு ஏற்படும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.வாக்குறுதி:
உ.பி., சட்டசபை தேர்தலின் போது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பா.ஜ., அறிவித்தது. தொடர்ந்து, அக்கட்சி சட்டசபை தேர்தலி்ல அமோக வெற்றி பெற்று, முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆய்வறிக்கை:
இந்நிலையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து எஸ்.பி.ஐ., ஆய்வு நடத்தியது.
அதில், கடந்த 2016ல் உத்தர பிரதேசத்தில் விவசாயிகளுக்கு சராசரியாக ஒரு விவசாயிக்கு ரூ.1.34 லட்சம் என்ற அளவில் மொத்தம் ரூ.86,241. 20 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவாக வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு 31 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டும் ரூ.27,419.70 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி என மாநில அரசு அறிவித்தால், இத்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக மாநில அரசு அத்தொகையை வங்கிகளுக்கு திருப்ப செலுத்த வேண்டியிருக்கும். 2016-17 நிதியாண்டில் உ.பி., அரசின் வருமானம் ரூ.3,40,255.24 கோடியாகும். ரூ.27,419.70 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் போது, மாநிலத்தின் வருவாயில் இது 8 சதவீதமாகும். இதனால், மாநில அரசிற்கு சில நெருக்கடிகள் ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: Uttar Pradesh government Rs .27,429 crore farmers debt cancellation, if the bank has a loss.
Friday, 10 March 2017
கடனை செலுத்த வங்கிகளுடன் பேச தயார்: மல்லையா
லண்டன்: வங்கியில் வாங்கிய கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்துவது தொடர்பாக வங்கிகளுடன் பேச தயாராக உள்ளதாக லண்டனில் உள்ள விஜய் மல்லையா கூறியுள்ளார்.ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய பின் அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் வசித்து வரும் மல்லையா டுவிட்டரில் வெளியிட்ட செய்தி:
ஒரே தவணையில் கடனை திருப்பி செலுத்தும் கொள்கை பொதுத்துறை வங்கிகளிடம் உள்ளன. இதன்படி கடன் வாங்கிய நூற்றுக்கணக்கானோர் திருப்பி செலுத்தியுள்ளனர். ஆனால், எங்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் கூறிய கோரிக்கைகளை ஆலோசனை செய்யாமல் வங்கிகள் நிராகரித்து விட்டன. நேர்மையான முறையில் கடனை திருப்பி செலுத்த வங்கிகளுடன் பேச தயாராக உள்ளேன். சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வங்கி நிர்வாகம் எங்களுடன் பேச உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் போட்டி: ஞாயிறன்று முடிவு- மாபா.,
சென்னை: வீனஸ் காலனியில் உள்ள ஓ.பி.எஸ்., வீட்டில் மாபா.பாண்டியராஜன் கூறியதாவது: உண்மையான அதிமுக என்பது ஓ.பி.எஸ்., தலைமையில் இயங்கும் இயக்கமேயாகும். சசிகலா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். சட்டசபையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் 26 விதிமீறல்கள் நடந்துள்ளது. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து ஞயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள்
சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக தமிழக மருத்துவ கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்: போலி டாக்டரை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். தற்போது போலி டாக்டர்களுக்கு உள்ள 6 மாத சிறை தண்டனைக்கு பதில் கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: Tamil Nadu has 35 thousand fake doctors said the State Medical Council's executive member brightness. And he said: Fake doctor have come up with to alleviate the harsh law. Currently, the 6-month jail sentence for fake doctors have come up with the answer to harsh punishment. He said.
ஜெயலலிதா மரண விவகாரம்: பெண் எம்.பி.,யை கண்டித்த குரியன்
புதுடில்லி: ராஜ்யசபாவில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த எம்.பி., மைத்ரேயன் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காக, அதிமுக பெண் எம்.பி.,விஜிலாவுக்கு அவை துணைத்தலைவர் குரியன் கண்டனம் தெரிவித்தார்.கோரிக்கை:
ராஜ்யசபாவில் ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மைத்ரேயன் பேசியதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணம் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக முரண்பட்ட அறிக்கை வருகிறது. இதனால் சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விஜிலாவுக்கு குரியன் கண்டனம் :
மைத்ரேயன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜிலா எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார். ராஜ்யசபா துணைத்தலைவர் குரியன், விஜிலாவிடம் அமரும்படி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டார். ஆனால், விஜிலா அதை கேட்காமல், தொடர்ந்து சத்தம்போட்டு பேசிக்கொண்டேயிருந்தார். இதனால் கோபமடைந்த குரியன், விஜிலாவுக்கு கண்டனம் தெரிவித்தார். ஒரு உறுப்பினர் பேசும்போது நான் கவனித்தால் தான், அவர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியும். இப்படி இடையூறு செய்தால் நான் எப்படி அவர் பேசுவதை கவனிக்க முடியும்.நான் எழுந்து நின்று கூறியபிறகும், நீங்கள் அமர மறுக்கிறீர்கள். தொடர்ந்து அநாகரீகமாக நடக்கிறீர்கள். அவை மரபுக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது. ஒரு பெண் என்பதால், கண்டிப்பதோடு நான் விடுகிறேன். இதையே, ஓர் ஆண் உறுப்பினர் செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன். நீங்கள் என் சகோதரி போன்றவர். இப்படி செய்யக்கூடாது. தயவு செய்து அமருங்கள். இவ்வாறு குரியன் பேசினார்.






