புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, உ.பி., மாநிலம், ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தவிர, மசூதியை இடித்ததாக, அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது, லக்னோ கோர்ட்டில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.ரேபரேலி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட்டோர் நீக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. நேற்று நாரிமன் கோர்ட்டுக்கு வராததால், இந்த வழக்கு இன்று(மார்ச்,23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டது.இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை இரண்டு வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. மேலும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.Friday, 24 March 2017
பாபர் மசூதி வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு
புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, உ.பி., மாநிலம், ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தவிர, மசூதியை இடித்ததாக, அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது, லக்னோ கோர்ட்டில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.ரேபரேலி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட்டோர் நீக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. நேற்று நாரிமன் கோர்ட்டுக்கு வராததால், இந்த வழக்கு இன்று(மார்ச்,23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டது.இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை இரண்டு வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. மேலும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மேலநெம்மகோட்டையை சேர்ந்தவர் மணி(48). லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது, 7 வயது சிறுமிகளை வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் ஆலங்குடி பெண்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Wednesday, 22 March 2017
கமலுக்கு எதிரான வழக்கு: அறிக்கை தர கோர்ட் உத்தரவு
திருநெல்வேலி: கமலுக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வள்ளியூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.திருநெல்வேலி
மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள பழவூரை சேர்ந்தவர் ஆதிநாதசுந்தரம் 31.
இவர் அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்க தலைவராகவும் அங்குள்ள நாறும்பூநாதர் கோயில் பக்தர்கள் பேரவை செயலாளராகவும் உள்ளார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார்.
அதில் பெண்கள் குறித்து எழுந்த கேள்விக்கு, ‛மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடுவதை புத்தகமாக படித்துக்கொண்டிருக்கும் ஊரு இது..' எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பேச்சு இந்துக்களை அவமதிக்கும் செயலாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அபராதம் விதிக்கும்படியும் கேட்டு மனுசெய்தார். நடிகர் கமலஹாசனுக்கு எதிரான வழக்கு என்பதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் வள்ளியூர் நீதிமன்றம் புகாரை விசாரித்து அறிக்கை தர பழவூர் காவல் நிலையத்திற்கு வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்:நெல்லை தலைமையாசிரியர் கைது
திருநெல்வேலி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை அடுத்துள்ள சிங்காரத்தோப்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.அங்கு தலைமையாசிரியராக திருக்குறுங்குடி, மகிழடியை சேர்ந்த நம்பிராஜன் 49, பணிபுரிகிறார்.இவர் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொடுதலில் தவறாக நடந்துள்ளார்.இதுகுறித்து சிறுமிகள் தங்க
ள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து புகார் வந்தது. எனவே சமூகநலத்துறையின் குழந்தைகள் நல பணியாளர் ஜான்சிராணி இதுகுறித்து புகார் அளித்தார்.வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று(மார்ச்-21)மாலையில் தலைமையாசிரியர் நம்பிராஜனை கைது செய்தனர்.








