மேலூர்: மேலூரில் கல்லூரி மாணவரிடம் மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் , மோதிரத்தை பறித்த சென்றனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருபவர் சிவமுருகன். இவர் சம்பவத்தன்று மேலூர் சந்தைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது இரண்டு டூ வீலர்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாணவர் சிவமுருகனிடம் இருந்த செல்போன், பணம் , வெள்ளி மோதிரம் போன்றவற்றை பறித்து சென்றனர்.
Monday, 27 March 2017
மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை தேவை எனவும், 133 படகுகளையும் இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியருக்கு உதவிய அமெரிக்கருக்கு பரிசு
ஹூஸ்டன்: இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்தியருக்கு உதவிய நபருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.அழைப்பு:
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அமெரிக்காவின் இயன் கிர்ல்லாட் என்பவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இயன் கிர்ல்லாட்டிற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்திருந்தார். கிர்ல்லாட் இந்தியா வர வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
செக்:
இந்நிலையில்,கிர்ல்லாட்டை கவுரவிக்கும் வகையில், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சார்பில் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கான செக் வழங்கப்பட்டது. இந்த செக்கை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா வழங்கினார்.
பெருமை:
இந்த விழாவில் கிர்ல்லாட் பேசுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்காவிட்டாலோ அல்லது அதற்கான முயற்சியில் நான் இறங்காமல்இருந்திருந்தால், நான் உயிரோடு இருப்பேனா என சொல்ல முடியாது. மக்கள் அதிகாரம் அளிக்க நாம் உதவ வேண்டும். நம்பிக்கை மற்றும் அன்பை பரப்ப வேண்டும். இங்கு நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விமான நிறுவனங்கள் மீது வழக்கு: ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி., மிரட்டல்
மும்பை: ஏர் இந்தியா ஊழியரை சிவசேனா எம்.பி., ரவிந்திர கெயிக்வாட் செருப்பால் அடித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் விமானத்தில் பயணம் செய்ய ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் தடை விதித்தன. இண்டிகோ விமானம் அவரது டிக்கெட்டை ரத்து செய்தது.இது தொடர்பாக ரவீந்திர கெயிக்வாட் கூறுகையில், எனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா
திருவனந்தபுரம்: பெண்ணுடன் போனில் ஆபாச பேச்சு பேசியதை தொடர்ந்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே. சசிந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள மாநில போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் ஏ.கே. சசிந்திரன். இவர் 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண் ஒருவருடன் மொபைல் போனில் மிகவும் ஆபாசமாக பேசியதாக தனியார் டிவி செய்தி வெளியிட்டது. அவரது பேச்சு அடங்கிய ஆடியோவையும் ஒளிபரப்பியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால் தன் மீதான புகாரை அமைச்சர் மறுத்தார்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சசிந்திரன், பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியல் நாகரிகம் கருதி பதவி விலகுகிறேன். பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநில போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் ஏ.கே. சசிந்திரன். இவர் 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண் ஒருவருடன் மொபைல் போனில் மிகவும் ஆபாசமாக பேசியதாக தனியார் டிவி செய்தி வெளியிட்டது. அவரது பேச்சு அடங்கிய ஆடியோவையும் ஒளிபரப்பியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால் தன் மீதான புகாரை அமைச்சர் மறுத்தார்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சசிந்திரன், பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியல் நாகரிகம் கருதி பதவி விலகுகிறேன். பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.246 கோடி டிபாசிட்: திருச்செங்கோடு நபரிடம் விசாரணை
சென்னை: ரூபாய் நோட்டு வாபசை தொடர்ந்து, ரூ.246 கோடி டிபாசிட் செய்த திருச்செங்கோட்டை சேர்ந்த நபர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிராமப்புறங்களில்..:
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை, புதுச்சேரியில் மட்டும் தனியார் நிறுவனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தனி நபர்கள் வஙகிகளில் ரூ.600 கோடிக்கும் மேல் டிபாசிட் செய்தனர். இதில் பெரும்பாலான பணம் கிராமப்புறங்களில் டிபாசிட் செய்யப்பட்டது. சென்னையில் கொஞ்சம் பணமும், புறநகர் பகுதிகள், நகரங்கள் ஒட்டிய பகுதிகளிலும் பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பிடி இறுகும்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவர், அரசு வங்கி கிளையில் ரூ.246 கோடி டிபாசிட் செய்துள்ளார். அவரை தொடர்ந்து 15 நாளுக்கு மேல் கண்காணித்தோம். அதில், அவர் கிராமப்புறத்தில் உள்ள வங்கி கிளையில் பணம் டிபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பணம் டிபாசிட் செய்ததை மறைக்க முயற்சி செய்தார். தொடர்ந்து விசாரணையில், பணம் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், பிரதமரின் கரீப் கல்யான் யோஜனா(பிஎம்ஜிகேஓய்) திட்டத்தில் இணையவும், டிபாசிட் செய்த பணத்தில் 45 சதவீதம் அபராதமாக கட்டவும் ஒப்புக்கொண்டார். அவர் பழைய ரூபாய் நோட்டுகளில் டிபாசிட் செய்துள்ளார். இதேபோல் கணக்கில் வராத பணத்தை டிபாசிட் செய்தவர்கள் பிஎம்ஜிகேஓய் திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டனர். இந்த திட்டத்திற்கு இறுதி நாளான மார்ச் 31 க்குள் இந்த திட்டத்தில் இணைய ஏராளமானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கணக்கில் வராத பணம் ரூ. ஆயிரம் கோடியை தாண்டும் என நம்புகிறோம். கணக்கில் வராத பணத்தை காட்டாதவர்கள் மீதான பிடி ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இறுகும்.
பதிலில்லை:
நாடு முழுவதும் 85 லட்சம் வங்கிக்கணக்குகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும்28 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இமெயில் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலர் பதிலளித்த விட்டனர். இன்னும் சிலமுறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. அவர்கள் அரசின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டால் 45 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 25 சதவீதம் அரசிடம் வட்டியில் இல்லாமல் குறி்ப்பிட்ட ஆண்டுகளுக்கு இருக்கும். கணக்கில்வராத பணத்தை நாங்கள் கண்டுபிடித்தால் 83.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.








