சென்னை: ‛ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. நகரில் முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, டில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். வளமையான விவசாயம் என முழக்கமிட்ட பா.ஜ.,அரசும் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசு ஏற்கனவே கூறியிருக்கும் ரூ.62 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாகவழங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.Monday, 27 March 2017
பணம் கொடுப்பதில்தான் வியூகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: ‛ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. நகரில் முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, டில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். வளமையான விவசாயம் என முழக்கமிட்ட பா.ஜ.,அரசும் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசு ஏற்கனவே கூறியிருக்கும் ரூ.62 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாகவழங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.மன அழுத்த பாதிப்பு: பிரதமர் அறிவுரை
புதுடில்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், மன அழுத்தத்திலிருந்து அனைவரும் வெளி வரலாம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ வேண்டும். நமது எண்ணத்தை வெளிப்படுத்தி, மன அழுத்தத்தை தோற்கடியுங்கள். எப்போதும், உங்களது எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர்பே
சினார்.
உணவு வீணடிப்பு: பிரதமர் கவலை
புதுடில்லி: உணவு வீணாக்கப்படுவது கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.புகழாரம்:
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடும் வங்கதேசத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். அந்நாட்டு மக்களுடன் இந்தியா தோளோடு தோள்நிற்கும். பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் மரணத்தை கண்டுபயப்படவில்லை. அவர்கள் நாட்டுக்காக வாழ்ந்து மரணமடைந்தனர். சத்தியாகிரக போராட்டத்தின் 100வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். காந்தி போராட்டத்தில் இது முக்கியமானது ஆகும்
புது இந்தியா:
125 கோடி மக்கள் புது இந்தியாவை விரும்புகின்றனர். புது இந்தியாவை உருவாக்க அனைவரும் உதவ வேண்டும். உங்கள் கனவை நனவாக்கும் வகையில் புது இந்தியா அமையும் . புது இந்தியாவை உருவாக்க இணைந்து பணியாற்றுவோம்
போர் வீரனாக...:
ரூபாய் நோட்டு வாபசை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டிஜிட்டல் இந்தியா திட்டம் ஊழலை ஒழிக்க உதவும். 1.5 கோடி மக்கள் பீம் ஆப்பை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். இதனை நோக்கி மக்கள் வருகின்றனர். கறுப்பு பணம் மற்றும் ஊழலை மக்கள் நிராகரித்து விட்டனர். கறுப்பு பணத்திற்கு எதிராக ஒவ்வொரு மக்களும் வீரர் போல் செயல்பட வேண்டும்.
கவலை:
தூய்மைப்பணி ஒரு பழக்கவழக்கமாக மாறிவிட்டது. உணவு வீணாக்கப்படுவது எதிர்பாராதது. வீணாகும் உணவை, பலர் தொழில்நுட்பம் கொண்டு மற்றவர்களுக்கு வழங்கி உதவி வருகின்றனர். உணவு வீணடிக்கப்படுவது கவலையளிக்கிறது. இது சமூகத்திற்கு எதிரானது. மத்திய அரசு பணியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவ கால விடுமுறை 26 வாரங்கள் வழங்கப்படும். குழந்தைகளை பராமரிப்பதே இதன் நோக்கம் ஆகும். இதன் மூலம், குழந்தைகளுக்கு தாயின் முழு அன்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.,
சென்னை: ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. இதனால் உறுதியான வெற்றி பெறுவார். எங்களது சின்னம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
போராடுவோம்:
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டி:அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைக்க போராடுவோம். இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க எல்லா முயற்சியையும் எடுப்போம். தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனைகளை முன்னிறுத்துவோம். மதுசூதனன், இங்கு வளர்ச்சி நாயகனாக செயல்பட்டதை எடுத்து சொல்வோம். ஜெ., வீட்டை நினைவு இல்லமாக்க தேவையான முயற்சிகள் செய்வோம். நாளை முதல் ஓ.பி.எஸ்., பிரசாரம் மேற்கொள்கிறார். தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். நாளை( மார்ச் 27) காலை முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Friday, 24 March 2017
வீதி வீதியாக சென்று கமிஷனர் வரி வசூல்
திருச்சி : மணப்பாறை நகராட்சி பெண் கமிஷனர், வீடு வீடாக சென்று வரி வசூலித்து வருகிறார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி கமிஷனராக இருப்பவர், பாப்பம்மாள். நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், ஒரு மாதமாக, நிலுவை வரிகளை கட்டும்படி, மணப்பாறை நகரம் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது.அப்படியிருந்தும், சொத்து வரியில், 46 லட்சம் ரூபாய், தண்ணீர் வரியில், 57.60 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. தண்ணீர் வரியில் மொத்த தொகை, 1.05 கோடி ரூபாயில், 50 சதவீதத்துக்கும் மேல் பாக்கியுள்ளது, நகராட்சி வருவாயை பாதிக்கும் விஷயமாக உள்ளது.
இதையடுத்து, மாருதி ஆம்னி காரில், கமிஷனர் பாப்பம்மாள், நகராட்சி ஊழியர்களுடன் வீதி வீதியாக சென்று, நிலுவை வரிகளை வசூலித்து வருகிறார்.
பாப்பம்மாள் கூறியதாவது:குடிநீர் வரி கட்டுவதில், மக்கள் சுணக்கமாக உள்ளனர். அதனால், நானே நேரில் வசூலித்து வருகிறேன். குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவோமோ என்ற பயத்தில், வரியை கட்டுகின்றனர். இப்படியாவது, முழுத் தொகையையும் வசூலித்து விடலாம் என்ற ஆவலில் தான், வீதி வீதியாக சென்று வருகிறேன்.
வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க உள்ளோம். சொத்து வரி கட்டாதவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாப்பம்மாள், போலியோவால் கால் பாதிக்கப்பட்டு, மற்றவர் துணையின்றி நடக்க முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை; நிறுவனங்கள் தாராளமாக வழங்க அனுமதி
புதுடில்லி : கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கான வரம்பை ரத்து செய்யும், சட்டத்திருத்த நிதி மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.சட்ட திருத்தம்:
தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஈட்டிய, சராசரி நிகர லாபத்தில், 7.5 சதவீதம் வரை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த வரம்பு, புதிய சட்டத்திருத்த மசோதாவில் நீக்கப்பட்டு உள்ளது. இனி, கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கலாம். எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரத்தை, நிறுவனங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
வரம்பு தளர்வு:
அதே சமயம்,
ஒரு நிதியாண்டில், எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதை, நிறுவனங்கள், அவற்றின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். நன்கொடைக்கான வரம்பு தளர்த்தப்பட்டு உள்ளதால், அரசியல் கட்சிகளிடம், கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் புழங்குவது குறையும். நிறுவனங்கள், வெளிப்படையாக நன்கொடை விபரங்களை தெரிவிக்க முடியும். அரசியல் கட்சிகளுக்கு, கணக்கில் காட்டாத பணம் செல்வதை தடுக்கவே, நன்கொடைக்கான வரம்பை, அரசு தளர்த்தி உள்ளது.
தற்போது, அரசியல் கட்சிகள், ரொக்கத்தில் நன்கொடை பெறுவதற்கான வரம்பு, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது; வரம்பிற்கு மேற்பட்ட தொகையை பெற்றால், நன்கொடை அளித்தவரின் விபரங்களை, அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.







