புதுடில்லி:ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு மகன் லோகேஷ் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Monday, 27 March 2017
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது: மோடி
புதுடில்லி: பயங்கரவாதம் மனித குலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.தெலுங்குவருட பிறப்பான உகாதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது மனிதகுலத்திற்கு பெரும் சாவாலாக உள்ளது. நமது நாட்டில் பல்வேறு மொழிகள் , கலாச்சாரங்கள் உள்ளன. மாநில மக்கள் இடையே கலாச்சார பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும்.
பிரதிபலிப்பு:
அரியானா மற்றும் தெலுங்கானா இடையே கலாச்சார பரிமாற்றம் தொடர்பாக ஒப்பந்தம் உருவாகி உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் வலிமை மற்றும் அடையாளம் ஆகும். திருவிழாக்கள் பருவ கால மாற்றங்களின் பிரதிபலிப்பு. அது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என கூறினார்.
விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
சென்னை: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
விவசாயம் பாதிப்பு அபாயம்:
தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடக அரசு தர மறுப்பது ஏற்புடையதல்ல. கர்நாடகாவின் அறிவிப்பால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால்விவசாயிகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். என வலியுறுத்தி உள்ளார்.
மக்களின் ஆதரவு இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது:பொன்.ராதாகிருஷ்ணன்
மக்களின் ஆதரவு இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
குழப்பம் வேண்டாம்:
ஹைட்ரோ கார்பன் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குழப்பம் அடைய வேண்டாம் நெடுவாசல் போராட்ட குழுவினரிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கி உள்ளார்.ஏற்கனவே தேர்வான நிறுவனங்களுடன் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என டுவிட்டரில் அவர்பதிவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு :சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் மோதல்: 7 பேர் காயம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 6 சிறுவர்களும் மோதலை தடுக்க முயன்ற பள்ளி காப்பாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.காயம் அடைந்தவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை ஊழலை குறைக்கும் : மோடி
புதுடில்லி: டிஜிட்டல் பரிவர்த்தனை ஊழலை குறைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கடவுளை வழிபாடு செய்வதற்கு வெவ்வேறு வடிவங்கள் இருக்கலாம் . இந்தியா எப்போதும், கடவுள் ஒருவரே என வலியுறுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஊழல் குறைக்க வழிவகை செய்ய
லாம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.







