ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்திலுள்ள பி.டி.பி., கட்சியை சேர்ந்த அமைச்சர் பரூக் அந்த்ராபி வீட்டை குறி வைத்து பயங்கரவாதிகள் இரவில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீசார் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 4 ரைபில் துப்பாக்கியையும் திருடிச்சென்றனர். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தியின் நெருங்கிய உறவினரான அமைச்சர் பரூக் அந்த்ராபி, வீட்டில் இல்லாததால் தாக்குதலில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.Tuesday, 28 March 2017
ஜம்மு-காஷ்மீரில் அமைச்சர் வீட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்திலுள்ள பி.டி.பி., கட்சியை சேர்ந்த அமைச்சர் பரூக் அந்த்ராபி வீட்டை குறி வைத்து பயங்கரவாதிகள் இரவில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீசார் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 4 ரைபில் துப்பாக்கியையும் திருடிச்சென்றனர். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தியின் நெருங்கிய உறவினரான அமைச்சர் பரூக் அந்த்ராபி, வீட்டில் இல்லாததால் தாக்குதலில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.ரியல் எஸ்டேட் சட்ட விதிகள்: 42 பேர் கருத்து
நாடு முழுவதும் வீடு, மனை விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு, 2016ல் நிறைவேற்றியது. இதை அமல்படுத்த விதிகள் வகுக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டன.நீண்ட தாமதத்துக்கு பின், இதை அமலாக்கும் பணிகளை, தமிழக அரசு துவக்கியது. இதற்கான வரைவு விதிகளை, ஜன., 28ல் வெளியிட்ட அரசு, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, 21 நாட்கள் அவகாசம் வழங்கியது.
இது குறித்து, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வரைவு சட்ட விதிகள் குறித்து, ரியல் எஸ்டேட் அமைப்புகள், கட்டுமான நிறுவனங்கள், தொழில்முறை வல்லுனர்கள் உட்பட, 42 பேர் இ - மெயில் வாயிலாக கருத்துகளை தெரிவித்து இருந்தனர்.
இதன் மீது, நகரமைப்புத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் கருத்துரைகள் பெறப்பட்டன. இவை அனைத்தும் பட்டியலாக தொகுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு உயர் அதிகாரிகள் கூறினர்.
10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
ஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனின் வெற்றிக்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில், பலவித உத்திகளை கையாண்டு வருகின்றனர். பிரசாரத்தின் உச்ச கட்டத்தில், கடைசி அஸ்திரமாக, முதல்வர் பழனிசாமி அமைச்சரவையின் ஊழல் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நெடுஞ்சாலைத்துறை உட்பட பல துறைகளில், மாவட்ட வாரியாக பினாமிகள் பெயரில், அமைச்சர்கள் எடுத்த டெண்டர்கள்; மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு கொடுத்த கமிஷன் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மேலும், டாக்டர்கள், துணை வேந்தர்கள் நியமனங்களில் நடந்த முறைகேடு உட்பட, ௧௦ அமைச்சர்களின் துறைகளில் அரங்கேறியுள்ள ஊழல் விபரங்களை, பன்னீர்செல்வம் அணியினர் தயாரித்து வருகின்றனர். இவை, பட்டியலிடப்பட்டு, உச்ச கட்ட பிரசாரத்தின் போது, வெளியிடப்பட உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்?
'நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு, தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும்' என, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.ரயில்வே அமைச்சகத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் அனுப்பியுள்ள மனு:கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து, கன்னியாகுமரி வழியாக, எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த இரு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே, நாகர்கோவிலில் இருந்து, சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்திற்கு, இரவு நேர, புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு
புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தார். அப்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை, 2017, மார்ச் 31 வரை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஆனால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமே, செல்லாத ரூபாய் நோட்டுகளை, மார்ச் 31 வரை, வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என, பின், அறிவிக்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆர்.டி.ஐ., கீழ், ரிசர்வ் வங்கிக்கு, சமூக ஆர்வலர் ஒருவர் அனுப்பிய கேள்வியில், 'மார்ச் 31 வரை, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என, பிரதமர் முதலில் அறிவித்தார். இதன்பின், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே, மாற்றிக் கொள்ளலாம் என மாற்றப்பட்டது ஏன்' என, கேட்கப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கு பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. 'செல்லாத ரூபாய் நோட்டு குறித்த தகவல்களை வெளியிட்டால், நாட்டின் பொருளாதார நலனுக்கு விரோதமாக அமைந்துவிடும்; அதனால், தகவல்களை வெளியிட முடியாது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Monday, 27 March 2017
உக்ரைனில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து: 5 பேர் பலி
கீவ்:உக்ரைன் நாட்டு கிழக்கு பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள்.
உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான எம்ஐ-2 ஹெலிகாப்டர் கிரமாட்டோர்ஸ்க் அருகே செல்லும் போது, திடீரென் நொறுங்கி விழுந்தது. அதில் 3 பயணிகளும் 2 ஊழியர்களும் இருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.