Tuesday, 28 March 2017
விமானத்தில் எம்.பி.,க்கு தடை : லோக்சபாவில் காரசாரம்
புதுடில்லி : விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.,க்கு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. இது தொடர்பாக, இன்று லோக்சபாவில் காரசார விவாதம் நடந்தது.எம்.பி.,க்கு வந்த சிக்கல் :
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சில நாட்களுக்கு முன் விமான பயணம் செய்தார். அவருக்கு இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக விமான நிறுவன ஊழியருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த எம்.பி., விமான ஊழியரை செருப்பால் அடித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய ஏர்இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
விமான நிறுவனம் செய்தது சரியே :
இது தொடர்பாக லோக்சபாவில் சிவசேனா எம்.பி.,க்கள் இன்று குரல் எழுப்பினர். சிவசேனாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியினரும், எம்.பி., பயணத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் விமான நிறுவனத்திற்கு இல்லை என பேசினர். அப்போது பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, சிறந்த பாதுகாப்பு விதிமுறைகளை விமான அமைச்சகம் செய்துள்ளது. விமான நிறுவனம் நடந்து கொண்ட விதம் சரியானதே. இது போன்ற பிரச்னையில் எம்.பி.,ஒருவர் சிக்கியது தான் துரதிஷ்டவசமானது என்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா எம்.பி.,க்களும் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ரகசிய இடத்தில் எம்.பி., :
இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பார்லிக்கு வந்த அக்கட்சி எம்.பி.,க்களிடம் கேட்டதற்கு, அவர் மாயமான விவகாரம் தொடர்பா
ஆர்.கே.நகர் தேர்தல் : நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 27) வெளியிடப்பட உள்ளது. மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.களத்தில் இருப்பது யார் யார்? :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிடோர் போட்டியிடுகின்றனர்.
நேற்று கடைசி நாள் :
தற்போது 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள இன்று கடைசி நாள் ஆகும். பிற்பகல் 3 மணிக்குள், மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து மாலை 5 மணிக்கு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஜெட்லியுடன் வைகோ சந்திப்பு
புதுடில்லி : டில்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று காலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது வீட்டிற்கு சென்று வைகோ சந்தித்துள்ளார். அப்போது, 13 வது நாளாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தமிழக வறட்சி நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைகோ வலியுறுத்தி உள்ளார்.பஞ்சாப்பிற்குள் ஊடுருவ முயற்சி : ஒருவர் சுட்டுக்கொலை
சண்டிகர் : பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.ஊடுருவல் முயற்சி :
பஞ்சாப்பின் குர்ட்சாபூர் எல்லையில், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர் எல்லை பாதுகாப்பு வேலி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக பஞ்சாப் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுப்ரமணியன் சாமி
பாட்னா: ‛நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை உடையவர்' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்தார்.பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை கொண்டவராக இருந்தார். காங்., தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ராமாயணம் தொடரை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப ராஜீவ் அனுமதி அளித்தார். இந்துக்களின் எழுச்சியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்வாறு அவர் தெ
ரிவித்தார்.
‛டைம்' பட்டியலில் மீண்டும் மோடி?
புதுடில்லி: அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர் பட்டியலில் மீண்டும் பிரதமர் மோடி இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க பத்திரிகையான ‛டைம்', ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் மோடி இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டைம் வெளியிட்டுள்ள இணையதள ஓட்டெடுப்பில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, சீன அதிபர் ஜீ ஜின்பின், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சத்யநாதெள்ளா மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.






