காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடந்து முடிந்த தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதியான அமேதி தொகுதியிலும், வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில், வயநாட்டில் மட்டுமே வெற்றிபெற்றார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு தொகுதி எம்.பி-யாக இருந்தார் ராகுல் காந்தி. இந்த தேர்தலில் அவர் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், நேரு குடும்பத்துக்கு நெருக்கமான ரேபரேலி தொகுதியில் எம்.பி-யாக நீடிப்பாரா, அல்லது கடந்த முறை கைகொடுத்த வயநாட்டில் எம்.பி-யாக நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.வயநாடு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி
இதற்கிடையே கடந்த 12-ம் தேதி வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``எந்த தொகுதியில் எம்.பி-யாக நீடிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” எனக்கூறியிருந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், 'ராகுல் காந்தி வயநாட்டை விட்டு செல்வது வருத்தமாக உள்ளது' என கூறியிருந்தார். எனவே ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு அதிகம் என தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவரின் சகோதரி பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்கும் திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கேரளா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு ஓடுகிறது. மக்களவைத் தேர்தலிலே பிரியங்கா காந்தி அமேதி தொகுதியில் களமிறங்குவார் என பேச்சுகள் கிளம்பியது. ஆனால் அவர் அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு செய்ய வேண்டி இருப்பதால், போட்டியிட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வயநாட்டில் அவர் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி எந்த தொகுதியின் எம்.பி பதவியை ராஜிநாமா செய்வார் என்பதன் இறுதி முடிவு இன்று (ஜூன் 15) காலையில் தெரியவரும் என காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T8JPhN