Thursday, 5 September 2024
Wednesday, 4 September 2024
`சுரண்டப்படும் நதி' கூவம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட கார்த்தி சிதம்பரம்; மேயர் பிரியா சொல்வதென்ன?
``கூவம் நதி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்!" என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு, அதை பொதுவெளியில் வெளியிட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், அந்தப் பதிவில் சென்னை மாநகராட்சி, மேயர் பிரியாவின் அக்கவுன்ட்களையும் டேக் செய்திருக்கிறார்.கார்த்தி சிதம்பரம்
அந்தக் கடிதத்தில், ``கூவம் நதி பத்தாண்டுகளுக்கும் மேலாகவே மாசுபட்டுக் கிடக்கிறது. கடந்தகால அறிக்கைகள் கூவம் நதியின் பரிதாபமான நிலையை வெளிக்காட்டுகின்றன. இந்த நிலையில், கூவம் நதியை மறுசீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதில், ஏற்கெனவே ரூ.529 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மண்டலக் குழு தலைவருக்கு நீங்கள் அளித்த பதிலில், அமெரிக்க அதிகாரிகளிடம் தொழில்நுட்ப உதவிகள், நிதிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனாலும், அந்த பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. எனவே, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில், கூவம் நதி மறுசீரமைப்புக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்கள் குறித்தும் விரிவான பதிலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
அதில் அனைத்து மறுசீரமைப்பு திட்டங்களின் சுருக்கம் (A summary of all restoration schemes), தற்போதைய நிலை மற்றும் சவால்கள் (Current Status and Challenges), செலவழிக்கப்பட்ட நிதிகளின் மதிப்பீடு (Assessment of Funds Utilized), எதிர்காலத் திட்டம் மற்றும் அர்ப்பணிப்பு (Future Plan and commitment), பொதுமக்கள் ஈடுபாடு மற்றும் கருத்துக்கேட்பு முறை (Public Engagement and feedback Mechanism) என அனைத்து விவரங்களையும் `வெள்ளை அறிக்கை'யாக வெளியிட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
`நதிகள் சுரண்டப்படுகின்றன!' - கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் கடிதம்
மேலும், ``தற்போதைய நிலையில் 30 சதவிகித சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நாள்தோறும் கூவம் ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. அதில், தமிழ்நாடு அரசின் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கழிவுநீரும் அடங்கியிருக்கிறது. அதேபோல, பக்கிங்காம் கால்வாயில் 60 சதவிகிதம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கிறது. மற்றவை அடையாறில் கலக்கிறது. இப்படியாக சென்னை மாநகரத்தின் கழிவுநீர் கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இப்படியாக நதிகள் சுரண்டப்படுகின்றன. எனவே நான் இந்த நதிகள் தொடர்பான மறுசீரமைப்புத் திட்டங்களை தெரிந்துகொள்வதற்காக ஆர்வமுடன் இருக்கிறேன்.கார்த்தி சிதம்பரம் கடிதம்
அதற்காக, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (58 ஏக்கர்) (Eco-Restoration of Adyar Creek), அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரத்தின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (300 ஏக்கர்) (Eco-Restoration of Adyar Creek And Estuary), ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டம் (Integrated Cooum River Eco Restoration Plan)ஆகியவற்றின் தற்போதைய நிலையையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்!" என கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியில் இருக்கும் தி.மு.க-வின் சென்னை மாநகராட்சி மேயருக்கு, மாநகராட்சி மேற்கொண்டுவரும் திட்டம் குறித்து சந்தேகம் தெரிவித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன்னிச்சையாக கடிதம் எழுதி கேட்டிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வின் ஐ.டி விங்கைச் சேர்ந்த பலரும் கார்த்தி சிதம்பரத்தின் கருத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேயர் பிரியா
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் கடிதம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ``கார்த்தி சிதம்பரத்தின் ட்வீட்டைப் பார்த்துதான் அவர் கடிதம் எழுதியிருப்பதை நான் தெரிந்துகொண்டேன். கூவம் நதியின் மறுசீரமைப்பு பணிகளைப் பொறுத்தவரையில், பல்வேறு துறைகளுடன் இணைந்துதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, மெட்ரோ வாட்டர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட துறைகள் இணைந்து மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் இதற்கான பதிலை நான் தருவேன்!" என்றிருக்கிறார்.`மேல்தட்டு மக்களுக்காக ஃபார்முலா கார் பந்தயம்; அதில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரம்' - சீமான்
http://dlvr.it/TCq2vg

`மேல்தட்டு மக்களுக்காக ஃபார்முலா கார் பந்தயம்; அதில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரம்' - சீமான்
தூத்துக்குடிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பைபிள், கந்த சஷ்டிக் கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் ’அந்த வார்த்தை’ இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தையை கூறியதற்காக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, அநியாயம். நானே ஒரு தாழ்த்தப்பட்டவன், என்மீது ஏன் வழக்கு தொடுத்துள்ளனர்? சீமான்
என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர். விளையாட்டில் ஆர்வம் இருந்தும் விளையாட வாய்ப்பு இல்லாத சிற்றூர்கள் மற்றும் கிராமங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு கைப்பந்து, கால்பந்து போன்ற பயிற்சிகள் கொடுத்து உரிய போட்டிகளை நடத்த வேண்டும். ஆனால், மேல்தட்டு மக்களுக்காக ஃபார்முலா கார் பந்தயம் என்பது தேவையற்றது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் இந்த கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. இது அநியாயம். சிதிலமடைந்த ஆயிரக்கணக்காண பள்ளிக்கூடங்கள், மேற்கூரைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர். 300 பெண்கள் படிக்கக்கூடிய பள்ளியில் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளது, இதையெல்லாம் சீரமைக்க வேண்டும். சீமான்
தமிழகத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரிப்பதுதான் பாலியல் சீண்டலுக்குக் காரணமாக அமைகிறது. மாத்திரை, ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாலியல் சீன்டல்களும் அதிகமாக நடைபெறுகிறது. போதைப்பொருள்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.`ஆராய்ச்சி படிப்பை விட, நாகரிகமாக பேசுவது குறித்து அண்ணாமலை படித்தால்...' - கடம்பூர் ராஜூ அட்வைஸ்
http://dlvr.it/TCq2Zs

Sylendra Babu: `என்னை விடத் திறமையான பலர், கான்ஸ்டபிளா இருக்காங்க!' - சைலேந்திர பாபு | kathaippoma
விகடன் 'கதைப்போமா' தொடரில், பேச்சாளர் பர்வீன் சுல்தானுடன், சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் தன்னுடைய அனுபவங்களை மனம் திறந்து பேசும்போது,
`நான் ஒரு கான்ஸ்டபிளா இருந்தாக்கூட எங்க அப்பா அம்மா சந்தோசப்பட்டிருப்பாங்க. என்னை விட திறமையான பலர் கான்ஸ்டபிளா இருக்காங்க. எனக்கு குறிப்பிட்ட ஸ்டேஜுக்கு அப்புறம் நல்லா படிக்கனும்'னு ஆர்வம் வந்து, ஓரளவுக்கு நல்ல மார்க் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். எங்க ஸ்கூல்ல நான்தான் முதல் மார்க். எனக்கு மருத்துவத்துறைல ஆர்வம் இருந்தது. ஆனா, அதுல படிக்க வாய்ப்பு கிடைக்கல. சினிமால ஆர்வம் வந்து ஒரு படத்துல நடிக்கிறதுக்கு புக் ஆனேன். அந்த வாய்ப்பினையும் வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டாங்க. என்னோட வாழ்க்கையில ஒரு திருப்புமுனைங்கிறதே நான் ஒரு பட்டப்படிப்பு படிச்சதுதான்.' என, தன்னைப் பற்றி பல சுவராஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முழுமையாகக் காண, கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்! “கையை இழந்தேன்... நம்பிக்கையை இழக்கவில்லை!’’ ஓர் இளைஞரின் வெற்றிக் கதை...
http://dlvr.it/TCpbZG

காங்கிரஸ் எம்.பியிடம் நிதி கேட்ட திமுக எம்.எல்.ஏ; ஒரே மேடையில் நடந்த விவாதம்...
கும்பகோணத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் விழா மேடையிலேயே காங்கிரஸ் கட்சி எம்.பியிடம் நிதி கேட்டு திமுக எம்பி, எம்.எல்.ஏ வாக்கு வாதம் செய்ததது இருகட்சியினரிடமும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.71 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழாவும், ரூ.5.40 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், சுதா, எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி
இதில் பேசிய சாக்கோட்டை அன்பழகன், ``மயிலாடுதுறை எம்.பி சுதா புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாம் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெற வைத்திருக்கிறோம். கஷ்டமே இல்லாமல் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் முதன் முதலில் அடிக்கல் நாட்டும் போது அமைச்சர்கள் இரண்டு பேரும், முதல் செங்கல்லை சுதாவை வைக்கச் சொல்ல அவரும் கல்லை வைத்தார். புதிதாக கட்டப்பட உள்ள கட்டடத்தின் மொத்த தொகையில் ரூ.2 கோடியை அவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தர வேண்டும் தருவார் என நினைக்கிறேன்.
நம் வெற்றியில் தான் சுதா எம்.பியாக இருக்கிறார். உங்களிடம் ஒன்று கொடுத்து விட்டு ஒன்றை கேட்கிறோம். உங்கள் வெற்றிக்கு நாங்கள் பங்களித்து விட்டு கேட்கிறோம். எம்.பி பெரிய மனது வைத்து நிதி தருவார் என கருதுகிறேன்" என்றார்.
இதைதொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி சுதா, "எம்.பி நிதியிலிருந்து மருத்துவத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என சாக்கோட்டை அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார். அவருக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். கொடுப்பது என்பது என்னுடைய பணத்தை கொடுப்பது அல்ல, மக்களின் பணத்தை மக்களுக்காக கொடுப்பது தான். மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி எம்.பி சுதாBulldozer ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறதா? | சீமானுக்கு செக் வைக்கும் திமுக? - The Imperfect Show
ஆனால், எனக்கென்று, என் மக்களுக்கு செய்ய வேண்டிய கனவு ஒன்று இருக்கிறது. மருத்துவக் கட்டடங்கள் கட்டி விடலாம் ஆனால் அங்கு வேலை செய்வதற்கு, சேவை செய்வதற்கு கல்வி அறிவுள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் தேவை. அதற்கு அடிப்படை கல்வி என்பது ரொம்ப முக்கியம். தரமான கல்வி கிடைத்தால் தான் நாடு முன்னேறும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். கல்வித்துறைக்கான தேவையை என்னுடைய நாடாளுமன்ற நிதியிலிருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
அதன் பின்னர் மீண்டும் மைக் பிடித்த, சாக்கோட்டை அன்பழகன், "உங்கள் கனவு நிறைவேறட்டும், அதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம். அந்த கனவோடு சேர்ந்து மிச்சம் இருந்தால் மருத்துவமனை கட்டுவதற்கும் நிதி கொடுங்கள் என கேட்கிறோம்" என்றார். அன்பில் மகேஷ்
இதையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "நிதி கொடுக்கும் விஷயத்தில் உங்களுக்குள் பேசி நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள், எது எப்படியாக இருந்தாலும் பள்ளி கல்வித்துறைக்கு வரும் பணத்தை நான் ஏன் விடப்போகிறேன். கொடுங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்" என்றார்.
பின்னர் பேசிய எம்.பி கல்யாணசுந்தரம், "எம்.பி சுதா வெற்றிக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக் கொடுத்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அவர் கடமைப்பட்டவர். இந்நிகழ்ச்சியில் நிதி வழங்குவதை அவர் அறிவிப்பார் என எதிர்பார்த்தேன் அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி இதில் ரூ.2 கோடியை மருத்துவமனைக்கு கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்" என்றார்.மோடியின் புருனே பயணம் இந்தியாவுக்கு எப்படி பலனளிக்கும்?
http://dlvr.it/TCp9hY

“பா.ஜ.க வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க கூட்டணியில் தொடர்கிறேன்!”
பா.ஜ.க-வுடன் தி.மு.க காட்டிவரும் இணக்கம், சர்ச்சையான முருகன் மாநாடு, தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு உள்ளிட்ட கேள்விகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனைச் சந்தித்தேன்...
``எல்லோரும் முருகன் மாநாட்டின் தீர்மானங்களை விமர்சித்துக்கொண்டிருக்கும்போது, நீங்களோ ‘மாநாடு நடத்தியதே தவறு’ என்கிறீர்களே ஏன்?!”
``மதச்சார்பற்ற கொள்கையைப் பேசி, அனைத்து மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க அரசு, இப்போது முருகருக்கு மாநாடு நடத்தியதை நான் எதிர்க்கிறேன். மதச்சார்பற்ற அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தலைமையில் இப்படியான நிகழ்வுகளை நடத்தலாமா... அதிலும், ‘ஆன்மிகப் பாடல்களை பள்ளிப் பாடத்தில் கொண்டுவருவோம்’ என்றெல்லாம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோதமானவை!”
`` ‘திராவிட மாடல் அரசு எல்லோருக்குமானது’ என்கிறபோது, ஆன்மிக உணர்வாளர்களுக்கான ஒரு நிகழ்வாகத்தானே மாநாட்டைப் பார்க்க வேண்டும்?”
``அப்படியென்றால், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்குமான விழாவை இப்படி அரசே எடுத்து நடத்தி அவர்கள் விரும்பும் தீர்மானத்தை அரசு முன்னெடுக்குமா... முதலில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் தேவாரம், திருவாசகங்களைப் பாட தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதியில்லாத சூழலில், இப்படி வரலாற்றில் இல்லாத வகையில் கடவுளுக்கு மாநாடு நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றுவது பெரும்பான்மை மதத்தினரை ஆதரவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்குத்தானே ஆளாக்கும்!”தி.வேல்முருகன்
`` ‘ஆளுநரின் தேநீர் விருந்து, கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா இவை இரண்டும் அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள்’ என தி.மு.க விளக்கமளித்துவிட்ட பிறகும்கூட விமர்சித்துக்கொண்டேயிருக்கிறீர்களே?”
``தி.மு.க அரசு தயாரித்த உரையைத்தான் சட்டமன்றத்தில் வாசிக்க மறுத்தார் ஆளுநர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் செயல்பட்டார். இப்படி அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குரலாகச் செயல்படுபவரின் நிகழ்ச்சியில், ‘அரசுத் தரப்பில் பங்கேற்றோம்’ எனச் சொல்வதும், ‘தி.மு.க அரசுக்கும் கட்சிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு’ என்பதிலும் எந்த லாஜிக்கும் இல்லையே! ஒன்றிய அரசின் பிரதிநிதி இல்லாமல் எம்.ஜி.ஆருக்கு எடப்பாடி பழனிசாமி நாணயம் வெளியிடும்போது, கலைஞரின் நினைவு நாணயத்தை ஆசிரியர் கி.வீரமணி போன்ற முன்னோடிகளைவைத்து வெளியிடாமல், தி.மு.க ஆட்சியைக் கலைக்க மனு கொடுத்த ராஜ்நாத் சிங்கை ஏன் அழைக்க வேண்டும்?”
``தி.மு.க ஆட்சியில் அதிகாரிகள்தான் தவறு செய்கிறார்கள் என முன்பு சொல்லிவந்த நீங்கள், இப்போது ஆட்சியாளர்கள்மீதே குற்றம்சாட்டுகிறீர்களே… இரண்டில் எது உண்மை?”
``சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு, நில வளம் சார்ந்த மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதில் அரசின் மீதும், முதலமைச்சர் மீதும் ஆதங்கம் இருப்பது உண்மைதான். அதேசமயம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க மனப்பான்மையில் செயல்பட்டு, இட ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் சில அதிகாரிகள். ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளும், வடநாட்டு அதிகாரிகளும் தமிழர்களை உயர் பொறுப்புகளுக்கு வரவிடாமல், தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக்கொள்கிறார்கள். தி.மு.க ஆட்சி என்றில்லை, இரு திராவிட ஆட்சிகளிலுமே அமைச்சர்களும் முதலமைச்சர்களும் அதிகாரத்தைக் கைவசம் வைத்திருக்காமல், இப்படி அதிகாரிகளை ஆளவிட்டால் சமூக நீதி எங்கிருந்து வரும்?”
``சரி... இப்படி உங்கள் கோரிக்கைகளெல்லாம் அலட்சியப்படுத்தப்படும் கூட்டணியில் ஏன் தொடர்கிறீர்கள்?”
``தமிழ்நாட்டு மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்புவதற்கு எம்.எல்.ஏ-வாக வேண்டும்... அதற்கு திராவிடக் கட்சிகளோடுதான் கூட்டணி வைக்கவேண்டியிருக்கிறது. எனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மண்ணுக்கும் மக்களுக்கும் தீர்வு கண்டிருக்கிறேன். தி.மு.க ஆட்சியிலும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி தீர்வு காண முயல்கிறேன்... அதற்கான சூழலை முதலமைச்சரே ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதிகார வர்க்கம் இடையில் புகுந்து தடுக்கிறது.”
``பா.ம.க-வுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நெருக்கம் காட்டுவதன் பின்னணி என்ன... ராமதாஸை ரகசியமாக சந்தித்தீர்களாமே?”
``பா.ம.க நிறுவனர் ராமதாஸை ரகசியமாகச் சந்திக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற பொதுத் தலைவராக வளர்ந்துவரும் நான், மீண்டும் பா.ம.க-வோடு இணையப்போவதில்லை. சமூக நீதி போராட்டக் களத்துக்கு ராமதாஸ் அழைத்தால் அதைப் பரிசீலிப்பேன் என்றுதான் சொல்லிவருகிறேன்.”
``கொடி அறிமுகம் செய்து மாநாட்டுக்குத் தயாராகும் விஜய் கட்சியின் பெயரும், `TVK’ என்றே அடையாளப் படுத்தப்படுகிறதே?”
``பல ஆண்டுகளாகவே பத்திரிகை ஊடகங்களில் எங்கள் கட்சியும் `TVK’ என அடையாளப்பட்டிருக்கிறது. எனவே, விஜய் தன் கட்சியின் பெயரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பொதுவெளியில் கோரிக்கை விடுக்கிறேன். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் முறையாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். மற்றபடி அரசியலுக்கு வரும் விஜய்யை வரவேற்கிறேன். மத்திய, மாநில அரசுகளில் தமிழர்களின் பிரதிநிதித்துவம், தத்தளிக்கும் தமிழ்ச் சமூகத்தின் பிரச்னைகள் குறித்தும், தமிழீழம் பற்றியும் சரியான நிலைப்பாட்டை எடுத்தால் அவரைப் பாராட்டவும் செய்வேன்!”
``அப்படியென்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டில் விரைவிலேயே மாற்றத்தை எதிர்பார்க்கலாமா?”
``தி.மு.க-வுடன் பல்வேறு பிரச்னைகளும், அவர்கள்மீது கோபமும் இருந்தாலும் மனிதகுல விரோத பா.ஜ.க தமிழ்நாட்டில் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு தி.மு.க கூட்டணியில் தொடர்கிறேன். இதுதான் எங்களது இப்போதைய நிலைப்பாடு!”
http://dlvr.it/TCnpkh

Tuesday, 3 September 2024
Aparajita Bill: பாலியல் வன்கொடுமைக்கெதிராக மம்தா நிறைவேற்றிய மசோதாவும்... அதன் அம்சங்களும்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தோடு நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் பாலியல் துன்புறுத்தல்களும், வன்கொடுமைகளும், பெண்களுக்கு எங்குதான் பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி... அனைவரையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறிருக்க, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கடிதம் எழுதினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை - மருத்துவர்கள் போராட்டம்
ஆனால், நேரடியாக மோடியிடமிருந்து பதில் எதுவும் அவருக்குச் சேரவில்லை. அதேமயம், பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 64-ஆனது, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்கிறது. மேலும், BNS-ன் பிரிவு 66-ஆனது பாலியல் வன்கொடுமை, அதனுடன் கொலை, பாதிக்கப்பட்டவர்கள் vegetative நிலைக்குச் செல்லுதல் ஆகியவற்றில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கிறது.நரேந்திர மோடி
ஆனால், இதே பிரிவு 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனையையும் விதிக்கிறது. இவற்றோடு, 18 வயதுக்குட்பட்டவர்களிடம் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தின் தண்டனைகளும் இருக்கின்றன.
இப்படியான சூழலில், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பத்தே நாள்களில் மரண தண்டனை விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்போவதாகக் கடந்த வாரம் மம்தா அறிவித்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் தற்போது கூட்டப்பட்டிருக்கும் இரண்டு நாள் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், `அபரஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024' இன்று தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.மம்தா பானர்ஜி - Aparajita Bill
இந்த மசோதாவானது, மேற்குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் முன்மொழிகிறது. இந்த அபரஜிதா மசோதா நிறைவேற்றப்படுகையில் உரையாற்றிய மம்தா, ``பாலியல் வன்கொடுமை தற்போது தேசிய அவமானம். அதைத் தடுக்கத் தேவையான சமூக சீர்திருத்தத்துக்காக ஒன்றிணைவோம்" என்றார்.அபரஜிதா மசோதா கூறுவதென்ன?
இந்த மசோதாவானது பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதா (Anti-Rape Bill) என்றும் அழைக்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தாலோ அல்லது vegetative நிலைக்குச் சென்றாலோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.தண்டனை
இத்தகைய குற்றங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுகளை குற்றவாளிகள் அல்லது அவர்களின் குடும்பங்கள் ஏற்க வேண்டும். ஒருவேளை அதை அவர்கள் செலுத்தத் தவறினால், அவர்களிடமிருந்து சட்டப்பூர்வ வழிகளில் பெறப்படும்.
இந்தக் குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் மீதான விசாரணையின் முதற்கட்ட அறிக்கை 21 நாள்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த மசோதாவின் கீழ் இத்தகைய குற்றங்களை விசாரிக்க, துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் `அபரஜிதா பணிப் படை' என்ற பெயரில் மாவட்ட அளவிலான சிறப்புப் படை அமைக்கப்படும்.தீர்ப்பு
இந்த வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த பிரத்யேகமாக சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைக் காக்கும் நடவடிக்கையாக, முன் அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களை வெளியிடுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.சட்டம்
மேலும், இந்த மசோதாவானது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமையுடன் கூடிய கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுதல், ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் BNS-ன் பிரிவுகள் 64, 66, 70(1), 71, 72(1), 73, 124(1), 124(2) திருத்தங்களை முன்மொழிகிறது. அதோடு, இத்தகைய குற்றங்களில் குற்றவாளிகளின் வயதைப் பொறுத்து தண்டனை வழங்கும் BNS-ன் பிரிவுகள் 65(1), 65(2), 70(2) ஆகியவற்றைத் தவிர்க்கவும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.பாலியல் வன்கொடுமை - கொடூர கொலைகளும்... மம்தா - முர்முவின் அரசியல் கணக்குகளும்!
http://dlvr.it/TCmPHD