No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Friday, 15 December 2023

`அமைதியோ அமைதி!’ நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் பாஜக மெளனம் காப்பது ஏன்?!

நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து இருவர் செய்த அத்துமீறல் நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைசச்சர் அமித் ஷா தொடங்கி பா.ஜ.க-வினர் எவருமே இவ்விவகாரம் குறித்து வாய்திறக்கவில்லை. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டும் அவையில் சிறிய விளக்கம் அளித்தார். பாஜக மெளனத்தின் பின்னணி என்ன?!நாடாளுமன்ற அத்துமீறல்

கடந்த டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென பார்வையாளர் மாடத்திலிருந்த இருவர் குதித்து எம்.பிக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தனர். பிறகு ஷூவில் மறைத்து வைத்திருந்த குப்பியை எடுத்து வீசவே, புகை வரத் தொடங்கியிருக்கின்றன. அவைக்குள் நுழைந்தவர்களை எம்.பிக்களே சுற்றி வளைத்திருந்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் பெரும் பரபரப்பையும் பல்வேறு கேள்விகளையும் கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய தி.மு.க எம்பி கனிமொழி, `புதிய நாடாளுமன்றத்துக்குள் யார் வேண்டுமானாலும் நுழையும் அளவில்தாம் கட்டட அமைப்பு இருக்கிறது. பாதுகாப்பின்மையே காரணம்” என விமர்சித்தார்.

சிதம்பரம் எம்.பி திருமாவளவனோ, `` நாட்டையாளும் உயர் மன்றத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். மக்களவைக்குள்ளே வரும் அனுமதிக்காக அந்தப் பார்வையாளருக்குப் பரிந்துரைத்த பா.ஜ.க எம்.பியையும் பதவி்நீக்கம் செய்ய வேண்டும்” என கடுமையாக சாடினார்.நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்துக்குள் இப்படியான சம்பவம் நிகழ்ந்துவிட்ட போதும் இதுகுறித்து எந்தவொரு விளக்கத்தை மத்திய அரசிடமிருந்து வரவில்லை. எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும்போதும் பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுகுறித்து பேசவேயில்லை. அதுமட்டுமின்றி மாநில அளவிலான எந்த பா.ஜ.க உறுப்பினர்களும் மறு உத்தரவு வரும்வரை இதுகுறித்து பேச வேண்டாம் என வாய்மொழி உத்தரவு தரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பா.ஜ.க பதிலளிக்க வேண்டுமென டிசம்பர் 14-ம் தேதி அவைக்குள் கேள்வி எழுப்பியபோது இது குறித்து பேச மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் ``பாதுகாப்பு பணிகளில் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க-வின் இந்த மெளனம் பெரிய அச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் இதுகுறித்து எந்த விளக்கத்தை பா.ஜ.க சொன்னாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க அதுபெரும் வாய்ப்பாக போய்விடும். அதிலும் பா.ஜ.க எம்.பி ஒருவரின் பரிந்துரையில் வந்தவர்கள் இப்படி செய்திருப்பதால் இவ்விவகாரத்தில் எதுவும் பேச முடியாமல் நிலை இருக்கிறது. பா.ஜ.க அமைதியாக இருப்பதே நல்லதென முடிவெடுத்துவிட்டது” என்கிறார்கள்.பிரதமர் மோடி

நம்மிடம் பேசிய தி.மு,க செய்தி தொடர்பாளர் சல்மா, ``பா.ஜ.க எம்.பியின் பரிந்துரையால் அழைத்துவரப்பட்டவர்கள் இப்படி செய்துவிட்டதால் மெளனமாக இருக்கிறார்கள். இதுவே காங்கிரஸ் எம்.பிக்கள் அழைத்து வந்த நபர்களாக இருந்தால் 24 மணி நேரமும் இதையே பேசியிருப்பார்கள். பா.ஜ.க பக்கம் தப்பிருப்பதால் வாய்மூடி மெளனிக்கிறார்கள். இப்படித்தான் மணிப்பூர் விவகாரத்திலும் மெளனமாக இருந்தார்கள். அதுமட்டுமின்றி இதுகுறித்து கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள் எம்.பிக்களுக்கு பதில் தர முடியாமல், 15 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்வது ஜனநாயக விரோத செயல். பா.ஜ.க தனது தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் இது

எப்போதுமே ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையற்றது பா.ஜ.க-வின் அரசு என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகிறது” என்றார் கொதிப்புடன்.அமித் ஷா, மோடி

இச்சம்பவங்கள் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் ஓரிருவரிடம் பேச முயன்றோம்... ஆனால் டெல்லி தலைமை இதுகுறித்து பேச வேண்டாம் என்றுள்ளது, முழுவதாக விசாரணைகள் முடியட்டும்” எனக் கூறி பேச மறுத்துவிட்டனர். நாடாளுமன்றத்தையே பாதுகாக்க தவறியவர்கள் நாட்டை எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்பியுள்ளபோதும் மெளனமாக இருக்கிறது பா.ஜ.க! எப்போது மெளனம் கலைப்பார்களோ?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் உட்பட 4 பேர் கைது - புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு


http://dlvr.it/T097rd
Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
559061

Contributors

Search This Blog