No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday, 27 June 2023

"விற்பனையே இல்லாத டாஸ்மாக் கடைகளைத்தான் மூடியிருக்கின்றனர்!” - ஆர்.பி.உதயகுமார் தாக்கு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "போதைப்பொருளை ஒழிக்க தமிழகத்தில் காவல்துறை மூலம் பல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் செயல்முறையில் பயனளிக்கவில்லை. ராமேஸ்வரத்தில் ஆளும்கட்சிப் பிரமுகர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை மத்திய போதைப்பொருள் கண்காணிப்புப் பிரிவு கண்டுபிடித்தது. ஆனால், அந்த உண்மை வெளியே வரவில்லை.போதைப்பொருள் உலக வர்த்தகத்தில் சட்ட விரோத போதைப்பொருள்கள் விற்பனை ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி என்ற அதிர்ச்சித் தகவல் நமக்கு கிடைக்கிறது. இதனால் புற்றுநோய், பொருளாதர சீரழிவு, குடும்பப் பிரச்னை என சர்வதேச அளவில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வில் 100 சதவிகிதம் அரசு தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 47,248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 20,014 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 25,721 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்பதற்கு இந்தத் தகவல் சாட்சியாக இருக்கிறது.ஆர்.பி.உதயகுமார் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற, திறமையற்றதாக இந்த அரசு இருக்கிறது. 500 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கிறோம் என்று அரசு கூறுகிறது. எடப்பாடியார் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவால்தான் மூடப்பட்டிருக்கின்றன. அதுவும், விற்பனை இல்லாத கடைகளைத்தான் மூடியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தல் நடந்திருப்பது தமிழகத்துக்கு தலைகுனிவாகும். தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளால் பாதிப்படைந்திருக்கின்றனர். போதை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகம் பூஜ்ஜியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி அரசின் கஜானாவுக்குச் செல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது.போதைப்பொருள் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அமைச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சர் கைதியாக இருப்பது வரலாற்றில் புதிதாக இருக்கிறது.   இளைய சமுதாயத்தை அரசு காப்பாற்றாது, இளைஞர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் சுனாமி பேரலையாக எழுந்திருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் 25 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானதுதான். தமிழகத்தில் போதைப்பொருள்கள் அதிகரிக்கும் நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பீகார் சென்றார். இனிமேலாவது மக்களைப் பாதுகாக்கும்  நடவடிக்கையில் முதலமைச்சர்  ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்து போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி இளைஞர்களைப் பாதுகாப்பார்" என்று தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/SrHlrX
Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
553002

Contributors

Search This Blog