கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கோர விபத்து!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. இந்தக் கோர விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது வரை மூன்று பேர் பலியாகியிருக்கின்றனர். மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு!
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மாற்றப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று தொடங்கி தற்போது வரையில் மழை நீடித்துவருகிறது. இன்றும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.மழை
இந்த நிலையில் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை!
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று பகல்பொழுதில் மிதமான மழை பெய்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மழை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த சில நாள்களாகவே கோடை வெயில் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்த நிலையில், இந்தத் திடீர் மழை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளைக் குளிர்வித்திருக்கிறது.
http://dlvr.it/SqtbMD
Monday, 19 June 2023
Home »
» Tamil News Today Live: கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கோர விபத்து! - 3 பேர் பலி; 80 பேர் படுகாயம்!
Tamil News Today Live: கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கோர விபத்து! - 3 பேர் பலி; 80 பேர் படுகாயம்!
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!