சென்னை : சென்னை தி.நகர் ராஜாபாதர் தெருவில் இயங்கி வரும் வணிக வளாகத்தின் 4 வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் திடீரென குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண் ஷர்மிளா. இவருக்கு பேஸ்புக் மூலமாக விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஷர்மிளாவுக்கும் அவரது காதலர் விக்னேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஷர்மிளா தியாகராய நகர் ராஜபாதர் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 4வது மாடியில் இருந்து குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஷர்மிளா ரத்தவெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு திரண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளம் பெண் ஒருவர் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் பரவியதால் அங்கு ஏராளமானேர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English summary:
A young woman jumped from 4th floor in a shopping mall and commit suicide in Chennai, T.Nagar. The girl commit suicide by the clash with her boy friend.