பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
Monday 27 March 2017
Friday 24 March 2017
கவனமில்லாத காங்., மேலிடம்: கிருஷ்ணா
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அடிமட்டத்திலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், தலைமை இதில் கவனம் செலுத்தவில்லை. காங்கிரசில், கட்சி தலைமைக்கும் அடி மட்ட தொண்டருக்கு தொடர்பில்லாமல் உள்ளது. கட்சியில் மரியாதையும், என்னிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என மட்டுமே எதிர்பார்த்தேன். எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. ஊழலுக்கு எதிராக மோடி பொறுமை காட்டவில்லை. இது என்னை கவர்ந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்னை கவர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலாவை திட்டி குவிந்த கடிதங்கள்
பெங்களூரு:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக, சிறையில் உள்ள சசிகலாவுக்கு பலரும் கடிதங்கள் எழுதியுள்ளதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு, தினமும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரிடம் இருந்தும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. சிறை விதிகளின் படி, கைதிகளுக்கு வரும் எந்த கடிதங்களும் பிரித்து படிக்கப்பட்ட பிறகே, வழங்கப்படும். அதுபோல, குடும்பத்தினர், நண்பர்களுக்கு கைதிகள் கடிதம் எழுதினாலும், அதை அதிகாரிகள் படித்த பின்பே, அனுப்புவர்.
'சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூரு - 560100' என்ற முகவரியிட்டு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. சசிகலாவுக்கு வரும் கடிதங்களை, தமிழ் தெரிந்த சிறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் படித்த பின்பே, சசிகலாவிடம் தருகின்றனர்.
இது குறித்து, சிறை துறை வட்டாரங்கள் கூறியதாவது:
சசிகலாவுக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள், தமிழக முதல்வராக இருந்த, ஜெயலலிதாவை, சசிகலா திட்டமிட்டு கொலை செய்து விட்டதாகவே குற்றம் சாட்டுகின்றன. அதே நேரத்தில், சசிகலாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், எந்த கடிதங்களும் வருவதில்லை.
சசிக்கு வரும் கடிதத்தை, முதலில் இளவரசி வாசித்து பார்க்கிறார். பின், அது சசியிடம் செல்கிறது. ஆரம்பத்தில், இந்த கடிதங்களை ஆர்வமுடன் வாசித்த சசிகலா, கடுமையாக திட்டப்படுவதை தொடர்ந்து, கடிதங்கள் வாசிப்பதையே நிறுத்தி விட்டார்.
கடிதங்கள், சென்னை, திருச்சி, தர்மபுரி, மதுரை, சேலம், திண்டுக்கல், கரூர், விழுப்புரத்தில் இருந்தே அதிக அளவில் வருகின்றன.
கடிதத்தில், 'நாங்கள் பெரிதும் நேசித்த எங்கள் தலைவியை நீங்கள் கொன்று விட்டீர்கள். நீங்கள் நம்பிக்கையில்லாத நபர், நன்றியில்லாதவர், முதுகில் குத்தி விட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கை அளித்தவரை ஏமாற்றி விட்டீர்கள்.
'நீங்கள் செய்த கெட்ட காரியத்திற்கான பலனை, அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கான விளைவை சந்தித்தே ஆக வேண்டும்' என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday 22 March 2017
Wednesday 8 March 2017
பெங்களூருவுக்கு மாற்றாக புதிய நகரம்
பெங்களூரு : பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கு மாற்றாக புதிய தொழில் நகரத்தை கர்நாடக அரசு உருவாக்க உள்ளது.
விரைவில் புதிய நகரம் :
பெங்களூருவுக்கு மாற்றாக கோலார் கோல்ட் பீல்ட்ஸ் (கேஜிஎப்) என்ற நகரத்தை 11,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க உள்ளது. பெங்களூருவில் இருக்கும் 20 லட்சம் பேரை இந்த புதிய நகரத்திற்கு மாற்றவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நகரின் குடிநீர் தேவைக்காக, மங்களூருவில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்தீகரிப்பு ஆலை ஒன்றை நிறுவி, அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
பணிகள் தீவிரம் :
உலகரத்தரம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நகருக்கான மாதிரி வடிவம் தயார் செய்யப்பட்ட பிறகு, இதற்கான செலவு குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய நகரத்திற்காக பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்டின் நிலத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக நகர வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நகரம் மற்றும் கர்நாடகாவின் முக்கிய நகரங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.3500 கோடி செலவில் 4 கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.400 கோடி கடன் வாங்குவதற்கான நடவடிக்கையையும் கர்நாடக அரசு விரைவில் துவக்க உள்ளது. புதிய நகரம் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான திட்டங்களுக்கு கர்நாடக அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது.
English summary:
Bangalore: Bangalore is the increase in population, but rather the city in Karnataka state, is to create new jobs.

Tuesday 7 March 2017
ஆஸி.,க்கு இந்தியா பதிலடி: பெங்களூரு டெஸ்டில் வெற்றி
பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், அஷ்வின் 'சுழலில்' அசத்த, இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி தந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், பெங்களூருவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 189, ஆஸ்திரேலியா 276 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (79), ரகானே (40) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்டார்க் அசத்தல்:
இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. புஜாரா, ரகானே ஜோடி நிலையான ஆட்டத்தை தொடர்ந்தது. ரகானே அரை சதம் அடித்தார். பின், ஸ்டார்க் 'வேகத்தில்' அச்சுறுத்தினார். இவர் வீசிய 85வது ஓவரின் மூன்றாவது பந்தில் ரகானே (52) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் கருண் நாயர் டக்-அவுட்டானார். அடுத்த பந்தை சகா தடுத்து விளையாட, ஸ்டார்க் 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.
புஜாரா 92 ரன்கள்:
புஜாரா (92) சத வாய்ப்பை இழந்தார். ஹேசல்வுட் பந்தில் அஷ்வின் (4) அவுட்டானார். இஷாந்த் (6) கிளம்ப, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சகா (20) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.
அஷ்வின் அசத்தல்:
இதனையடுத்து 188 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ரென்ஷா 5 ரன்களில் அவுட்டானார். அஷ்வின் 'சுழலில்' வார்னர் (17) சிக்கினார். உமேஷ் பந்தில் ஷான் மார்ஷ் (9) ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த அஷ்வின் இம்முறை, மிட்சல் மார்ஷ் (13), வேட் (0) ஆகியோரை வெளியேற்றினார். ஸ்டார்க் ஒரு ரன்னில் நடையைக்கட்டினார். மற்ற வீரர்களும் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

சசிகலாவை சந்தித்த அமைச்சர்களின் பதவியை பறிக்க ஐகோர்ட்டில் வழக்கு
பெங்களூரு : 'பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, துமகூரு மகளிர் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்; அவரை பார்த்த நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட்டில், 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை, தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத் துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுார் கே.ராஜு ஆகியோர், சமீபத்தில், சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
'வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நான்கு அமைச்சர்கள் சந்தித்து பேசியது, சட்டப்படி தவறு' என, பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி சார்பில், கர்நாடக ஐகோர்ட்டில், பொதுநல மனு ஒன்றை, அவரது வழக்கறிஞர்கள் அரவிந்தன், சாஜி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
மனுவில் குறிப் பிட்டுள்ளதாவது:
● சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, சட்டத்தை மீறி சந்தித்த நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்
● தமிழகம் உட்பட, எந்த மாநிலத்திலிருந்தும் அவரை சந்திக்க தடை விதிக்க வேண்டும்
● பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து, துமகூரு மகளிர் மத்திய சிறைக்கு அவரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை, 9ம் தேதி, கர்நாடக தலைமை நீதிபதி முன்னிலையில் வரலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary:
'Parappana akrahara jailed Sasikala, Thumakuru want to change federal prison for women; I saw him to be sacked four ministers, "the Karnataka High Court, 'Traffic' Ramasamy is following suit. akrahara jailed Sasikala, tumakuru want to change federal prison for women; I saw him to be sacked four ministers, "the Karnataka High Court, 'Traffic' Ramasamy is following suit.

Friday 3 March 2017
கர்நாடகாவில் போராட்டம்: சர்ச்சைக்குரிய மேம்பால பணி நிறுத்தம்
பெங்களூரு : மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சர்ச்சைக்குரிய இரும்பு மேம்பால பணிகளை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது.
சர்ச்சை மேம்பாலம் :
கர்நாடகாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் மட்டும் எந்த போக்குவரத்து இடையூறும் இன்றி செல்வதற்காக ரூ.2100 கோடி செலவில் இரும்பு மேம்பாலம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. பல்லாரியில் இருந்து கேம்பிகவுடா விமான நிலையம் வரை இந்த இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட இருந்தது. இந்த திட்டத்தில் பல கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த திட்டத்திற்காக அவ்வழியில் இருக்கும் சுமார் 800 க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என ஆளும் காங்., தலைவர்கள் பலர் முதல்வர் சித்தராமைய்யாவிடம் தெரிவித்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் வரும் தேர்தலில், தங்களின் கட்சிக்கு அது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சித்தராமைய்யாவிடம் கூறி உள்ளனர்.
இதனையடுத்து இரும்பு மேம்பால பணிகளை கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
English summary:
Bangalore: People struggle raging, the Karnataka government has suspended the controversial steel flyovers tasks

Thursday 2 March 2017
பெங்களூரிலும் தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரு : தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில தலைநகர்பெங்களூருவிலும் வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு :
வரும் மே மாதம் முதல் பெங்களூரு நகரம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள உள்ளது. மே மாதம் முதல், ரேஷன் முறையிலேயே தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள முக்கியமான 9 அணைகளில் 20 சதவீதத்திற்குள் குறைவாக நீர் இருப்பு உள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடக முழுவதற்கும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு கூடுதலாக டேங்கர் லாரிகளும், போர்வெல்களும் தேவைப்படுகின்றன.
அடுத்து பருவமழை பெய்யும் வரை கர்நாடகாவில் இதே நிலை தான் நீடிக்கும் என கூறப்படுகிறது. நிலைமை சரியாகும் வரை ரேஷன் தண்ணீர் சப்ளை முறையே தொடரும் என கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு மக்கள் கோடை துவங்குவதற்கு முன்பாகவே தண்ணீர் தட்டுப்பாடு பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

ஊழல் அதிகாரி வீட்டில் ‛ஜவுளிக் கடை'
பெங்களூரு : பெங்களூருவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அடேங்கப்பா... :
இதில், வணிகவரி துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து மட்டும் 7000 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹிப்பாபள்ளி பகுதியில் வணிக வரித்துறை துணை கமிஷனராக உள்ள கரியப்பா நிங்கப்பா மெர்னல் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையின் போது தான் 7000 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த புடவைகளுக்கு இடையே ரூ.4 லட்சம் மதிப்பிலான ரூ.2000 நோட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள புடவை ஒவ்வொன்றும் ரூ.300 முதல் ரூ.20,000 வரை மதிப்புடையவை. இந்த சேலைகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. துணை கமிஷனரின் மனைவிக்கு இத்தனை புடவைகள் எங்கிருந்து வந்தன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
சோதனையிடப்பட்ட மற்ற அதிகாரிகளின் வீடுகளில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள், அதற்கான ஆவணங்கள், கிலோ கணக்கில் தங்க நகைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
English summary:
Bangalore: Bangalore 7 in the disproportionate assets of government officials to the action of the vigilance department officials raided yesterday.

Wednesday 1 March 2017
அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள்
பெங்களூரு: சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் சசி அடைக்கப்பட்டுள்ளார். இவரை சமீபத்தில் தினகரன் சந்தித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் பெங்களூரு சென்றனர். அனுமதி பெற்று அமைச்சர்கள் சசியை சந்தித்து பேசினர். பொது செயலர் பதவிக்கு ஆபத்து வந்தால் ., அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு மற்றும் பாதாம், முந்திரி , பருப்புகள் வாங்கி சென்று கொடுத்தனர். அமைச்சர்கள் மதியம் 1.23 க்கு சிறைக்குள் சென்றனர். தொடர்ந்து 2.36க்கு வெளியே வந்தனர். பொது செயலர் பதவி செல்லாது என ஓ.பி.எஸ்., தரப்பில் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த மனுவில் சசிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. பொது செயலராக யாரை நியமிப்பது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சிறை மாற்றும் முயற்சி : 90
சில நாட்கள் கழித்தே சிறை மாற்றம் குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படும். அப்போது தமிழகத்திற்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சசியிடம் அமைச்சர்கள் எடுத்துக்கூறியதாகவும் தெரிகிறது.

Friday 24 February 2017
பெங்களூருவில் இருந்து வந்த உத்தரவு டேவிட்சனைத் தொடர்ந்து கிரிஜாவுக்கும் சிக்கல்
தமிழகம் முழுவதும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என கணக்கிடப்படும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, தற்போதைய பொறுப்புகளில் இருந்து மாற்றி, முக்கியத்துவம் இல்லாமல் செய்ய, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா உத்தரவிட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மாதம் வரையில் உளவுத் துறை ஐ.ஜி.,யாக இருந்தவர் சத்தியமூர்த்தி. அவர், சசிகலா தரப்புக்கு ஆலோசகராக மாறிவிட்டத் தகவல் அறிந்ததும், அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் கோபமடைந்தார். அரசு கட்டமைப்புகளைப் பயன்படுத்தி சேகரிக்கப்படும் ரகசியத் தகவல் அனைத்தும், போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அங்கிருந்து கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் சேகரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் சத்தியமூர்த்தி என குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையில், பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே ஈகோ யுத்தம் உச்சகட்டத்தை அடைய, மோதல் வலுத்தது. இதற்கிடையில், தமிழக போலீஸ் உளவுத் துறை ஐ.ஜி.,யாக இருந்த சத்திய மூர்த்தியை அழைத்து கடிந்து கொண்டார். ஆட்சி மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்த சத்தியமூர்த்தி, நீண்ட விடுப்பில் சென்றார்.இதனால், உளவுத்துறையில் செயல்பாடுகள் முழுமையாக முடங்கின.
விடுப்பில் சென்ற அவர், போயஸ் தோட்டத்துக்காக, அந்த பகுதியிலேயே இருந்து ரகசியமாக பணியாற்றும் தகவல் முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. அந்த சமயத்தில் தான், 134 எம்.எல்.ஏ.,க்களை, சென்னை அருகில் உள்ள கூவத்தூரில் அ.தி.மு.க., தரப்பு அடைத்து வைத்தது. அவர்கள் மீது,கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சத்தியமூர்த்தி, சீருடை அணியாமல், சாதாரண சட்டைப் பேண்ட்டில், போயஸ் தோட்டம் பகுதியில் உலவியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம், சத்தியமூர்த்தி மீது ஆளுநகரிடம் புகார் தெரிவித்து விட்டு, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை அழைத்துப் பேசி, உள்துறை செயலர் மூலம், அவரை உளவுத் துறை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றினர். அந்தப் பொறுப்புக்கு, போலீஸ் நலப் பிரிவு, ஐ.ஜி., டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை நியமித்தார்.
இதனால், அவர் ஒரே நாளில் பன்னீர்செல்வம் ஆதரவாளராக முத்திரைக் குத்தப்பட்டார். இந்த நிலையில், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, முதல்வர் பொறுப்பில் அமர்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட, இடைப்பாடி பழனிச்சாமிக்கு, பெங்களூர் சிறையில் உள்ள, அ.தி.மு.க.,வின் நியமன பொதுச் செயலர் சசிகலாவிடம் இருந்து ஒரு உத்தரவு வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த உத்தரவில், பன்னீர் ஆதரவாளர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை, உடனடியாக, ஐ.ஜி., உளவுப் பிரிவில் இருந்து மாற்ற வேண்டும். பின், நம்முடைய ஆதரவாளராக இருக்கும் சென்னை காவல் படையின் நுண்ணரிவுப் பிரிவு கூடுதல் ஆணையராக இருக்கும் தாமரைக்கண்ணனை நியமிக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்தே, அவர், உடனடியாக டேவிட்சன் உளவுப் பிரிவு பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, பழையபடியே, காவலர் நலப் பிரிவு ஐ.ஜி.,யாக தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாரங்கள் மட்டுமே, உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்தவரை மாற்றியது, காவல் துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக, தமிழகத் தலைமைச் செயலராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனும், பன்னீர்செல்வம் காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்பதால், அவரையும் மாற்றுமாறு, சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், கிரிஜா வைத்தியநாதன், பன்னீர்செல்வம், முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவரை, மத்திய அரசே பரிந்துரைத்துள்ளது என்பதால், அவரை பொறுப்பில் இருந்து மாற்றி, நேரடியாக, பிரதமர் மோடியின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாகவும் தகவல்.இருந்தாலும், பெங்களூருவில் இருந்து தொடர் நெருக்கடிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வருவதால், கிரிஜா வைத்தியநாதனும், தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து எந்த நேரமும் மாற்றப்படலாம் என்கிறது, கோட்டை வட்டாரம்.
அப்படி, கிரிஜா மாற்றப்பட்டால், அந்தப் பொறுப்பிற்கு, சசிகலா தரப்பிற்கு வேண்டப்பட்டவரான, நிதித்துறை செயலர் சண்முகம் நியமிக்கப்படலாம் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Tuesday 21 February 2017
இந்தியன் பிரிமீயர் லீக் ஏலம் : பல வீரர்கள் விலை போகவில்லை
பெங்களூரு : இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் சீசன் - 10போட்டிகள் ஏப்ரல் 5 ம் தேதி துவங்கி, மே 21 வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இதில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் இன்று நடந்தது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. இயான் மோர்கன் ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.வீரர் மேத்யூசை, டில்லி அணி, 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
ஏலம் போகாத வீரர்கள் விபரம் : மார்டின் குப்தில், ஜாசன் ராய், பைஸ் பாசல், அலெக்ஸ் ஹாலிஸ், ரோஸ், டெய்லர், சவுரப் திவாரி. மொத்தம், 352 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இதில், 76 பேர் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.

Monday 20 February 2017
நடுங்கும் முன்னாள் அமைச்சர்கள் சசிகலா எடுத்த சபதம் ஏற்படுத்தும் கிலி
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா. அங்கு செல்வதற்கு முன், சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்ட சசிகலா, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வணங்கினார். அப்போது, மூன்று முறை சமாதியில் குனிந்து குனிந்து கையால் ஓங்கி ஓங்கி அறைந்து, சபதம் எடுத்தார்.
அந்த காட்சிகளை அவருக்கு பின்னாலேயே நின்று பார்த்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திராவும், வளர்மதியும். சற்று தள்ளி நின்றவர், தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம்.
இவர்கள் மூவருக்கு மட்டுமே, சசிகலா எடுத்த சபதங்கள் குறித்து முழுமையாக தெரியும் என்பதால், அவர்கள் எங்கு போனாலும், சசிகலா சபதம் குறித்தே கேட்கின்றனராம். அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் பொது மக்களும், கட்சிக்காரர்களும், சசிகலா சபதம் குறித்து கேட்பதால், பல சமயங்களில் வளர்மதியும், கோகுல இந்திராவும் செல்போனை ஆப் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் தங்களுக்கு சபதம் குறித்து எதுவும் தெரியாது என்று சொல்லி வருவதால், அவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளை பெற நினைக்கும் பொதுமக்கள், இப்படித்தானே சசிகலா சபதம் எடுத்தார் என, சம்பந்தமில்லாமல் பலவற்றையும் கூறி, அவர்கள் வாயால், சபதங்களை அறிய முயல்கின்றனராம்.
விட்டால் போதும் என்று, அவர்கள் சொல்லும் தகவலுக்கு ஆமாம் என்று சொல்லி, அது மறுமுனையில் டேப் செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப்பில் வெளியானாலோ, கட்சித் தலைமையாக இருக்கும் டி.டி.வி.தினகரனுக்குச் சென்றாலோ, கட்சியில் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என அஞ்சி நடுங்குகின்றனர். அதனால், தற்போது எந்த போன் வந்தாலும், அவர்கள் நடுங்குவதாகக் கூறப்படுகிறது.

Saturday 18 February 2017
வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம்
பெங்களூரு: சசிகலா அடைபட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம் அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சசிக்கு சிறை:
கடந்த 21 ஆண்டு காலமாக நடந்த சொத்து குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14 ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க., பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு நானகு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உறுதிசெய்யப்பட்டது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். சுப்ரீம் கோட்டின் தீர்ப்பையடுத்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதுகாப்பு:
இதே வழக்கில் கடந்த 2014ல் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது சிறை வளாகமே மிகுந்த பரபரப்புக்குள்ளானது. சிறைவளாகம் முன்பு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது நிலவிய பரபரப்பான சூழ்நிலையை சமாளிக்க கர்நாடகா அரசு நூற்றுக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியது.
நாதி இல்லை:
ஜெயலலிதா சிறையில் இருந்த போது இருந்த நிலை மாறி, தற்போது சசிகலா சிறையில் வைக்கப்பட்ட பிறகு சிறைவளாகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு தான் மக்கள் உள்ளனர். அ.தி.மு.,க., வைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும் எட்டிப்பார்க்காத சூழ்நிலையில் பொதுமக்கள் யாரும் சசியை தேடி வரவில்லை.
கூடுதல் பாதுகாப்பு:
சசி சிறையில் அடைக்கப்பட்டதும், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்று எண்ணிய கர்நாடகா போலீசார் பாதுகாப்பை அதிகபடுத்தியிருந்தனர். ஆனால், தற்போது சிறை பக்கம் மக்கள் யாரும் வராமல் இருந்தாலும் போலீசார் பாதுகாப்பு மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி: கர்நாடக அரசு கடிதம்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இந்த வழக்கு கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.
செலவு ரூ.12.04 கோடி:
இந்நிலையில் இந்த வழக்கு செலவு குறித்து தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும். இது கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2016 வரை செய்யப்பட்ட செலவு. இதில் நீதிமன்ற கட்டணம், நீதிபதி, வழக்கறிஞர்கள் ஊதியம், பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் அடக்கம். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday 17 February 2017
சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு
பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால், அவருக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
பெங்களூரு சிறையில்..
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதாரண அறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால் முதல் வகுப்பு அறைக்கு மாற வாய்ப்பு உள்ளது.
வசதிகள்:
முதல் வகுப்பு அறையில் மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி உண்டு. தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரத்துக்கு இரு முறை அசைவ உணவு உண்டு. காலை உணவாக சப்பாத்தியும், அரை லிட்டர் சாம்பார் மற்றும் கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி, ராகி கிடைக்கும். இதில் பிடித்தமான ஒன்றை அவர் தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.
English Summary:
Bangalore: Bangalore Sasikala in prison, to build an income tax documents show, he is likely to be available in first class.

சிறையில் சசி பரோல் குறித்து ஆலோசனை
பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பரோலில் எடுப்பது குறித்து வக்கீல்கள் சிறையில் சசியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜாமீன்:
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதி மன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சசியின் வக்கீல்கள் செந்தில், மற்றும் அசோகன் ஆகியோர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சசியின் பரோல் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிகிறது.
English summary:
Bangalore is languishing in jail on parole to consider Shashikala lawyers said he had consulted with in prison.

புளியோதரை சாப்பிட்ட சசி
பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இன்று மதியம் புளிச்சோறு சாப்பிட்டார். காலை 5. 30க்கு சிறை காவலர்கள் எழுப்பினர். எழுந்தவுடன் சில நிமிடங்கள் தியானம் செய்தார். தொடர்ந்து பிஸ்கட், டீ ( சுகர்லஸ் ) வழங்கப்பட்டது. தொடர்ந்து புளியோதரையும், 11 மணிக்கு சாண்ட்விச், மாலை 4 மணிக்கு டீ , பிஸ்கட் வழங்கப்பட்டது. சசி சோர்வாகவே காணப்பட்டார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.
English Summary:
Bangalore: Bangalore is languishing in prison Shashikala puliyotharey ate this afternoon. 5. In the morning of 30 raised to the prison guards. Did wake up a few minutes of meditation. Following biscuits, tea (cukarlas) awarded. Following puliyotharai also, Sandwich 11 at 4 pm for tea and biscuits provided. Sasi was tired, according to a source that the prison.

Thursday 16 February 2017
சிறையில் சகல வசதிகளும் கேட்கும் சசிகலா
பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. சிறைக்குள் தனக்கு செய்து வர வேண்டும் என கேட்கும் வசதிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
நீளும் பட்டியல் :
சிறையில் தனக்கு தனி அறை வேண்டும். அதில் கட்டில், டிவி இருக்க வேண்டும். வெஸ்டன் டாய்லட், 24 மணிநேர வெந்நீர் வசதி, மினரல் வாட்டர், வீட்டு சாப்பாடு, தனக்கு வேண்டியவற்றை செய்து தர தனியாக ஒரு ஆள் வேண்டும் என நேற்று கேட்டிருந்தார். ஆனால் சிறையில் அவருக்கு விஐபி அந்தஸ்து தர முடியாது என சிறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது, தான் இருக்கும் அறையில் ஒரு மேஜை, பேன் வேண்டும். தியானம் செய்தவற்கு தனி இடம் வேண்டும். வாரத்திற்கு இருமுறை அசைவ உணவு வழங்கப்பட வேண்டும் என சசிகலா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சசிகலா, 2014ம் ஆண்டு ஜெயலலிதாவும், அவரும் 3 வாரங்கள் அடைக்கப்பட்டிருந்த அதே சிறை அறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary:
Bangalore: Bangalore convicted and jailed Shashikala black money case. Ask him to come into the prison to the list of amenities goes on day by day.