சிக்கலில் தலைநகர் காக்கிகள்!சி.பி.ஐ பிடியில் இன்ஸ்பெக்டர்...
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற கும்பலுக்கு ஆதரவாக அடாவடி செய்த புகாரில், நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிந்திருக்கிறது சி.பி.ஐ. கூடவே, அவருடைய வீட்டில் ஐந்து பேர்கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையிட்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். இந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார் ஆனந்த்பாபு. “தென்சென்னைப் பகுதியில் டபுள் டாக்குமென்ட் தயாரித்து நிலத்தை அபகரிக்கும் கும்பலுக்குத் துணையாக இருந்திருக்கிறார் ஆனந்த்பாபு. அவர் தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. சில காவல்துறை உயரதிகாரிகளின் ஆசியோடுதான், அபகரிப்பு கும்பலுக்குத் துணையாக இருந்திருக்கிறார். ஆனந்த்பாபு
இதில் அந்த உயரதிகாரிகளுக்கும் பங்கு போனதா... இதுபோல வேறேதும் நிலத் தகராறில் மிரட்டிப் பணம் பறித்திருக்கிறார்களா... என்பதையெல்லாம் விசாரித்துவருகிறோம். நிலத் தகராறு விவகாரத்தை விசாரித்து, எட்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். இந்த விவகாரம் பல காக்கிகளின் தொப்பிகளைப் பறிக்கப்போகிறது” என்கிறார்கள் சி.பி.ஐ வட்டாரத்தில்.டோஸ்விட்ட அ.தி.மு.க தலைமை!உடைத்துப் பேசிய செல்லூர் ராஜூ…
தி.மு.க-வுடனான உரசல் காரணமாக விரக்தியிலிருக்கும் வி.சி.க-வை, எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய்நகர்த்திக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க வட்டாரம். இந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க என யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அப்படிப் பங்கு கொடுத்தால் நல்லாட்சி செய்ய முடியாது’ என வாய்த்துடுக்காகப் பேசியது அ.தி.மு.க தலைமையை கோபப்படுத்திவிட்டதாம். செல்லூர் ராஜூ
இதையடுத்து செல்லூர் ராஜூவை அழைத்த எடப்பாடி தரப்பு, “எத்தனை முறை உங்களுக்குச் சொல்றது... தேவையில்லாத விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம் என்று. `தி.மு.க-வில் இல்லாவிட்டால், அ.தி.மு.க-வில் நமக்கு இடமிருக்கிறது’ என்ற எண்ணத்தைப் பிற கட்சிகளிடம் ஏற்படுத்த நாங்கள் படாதபாடுபடுகிறோம். நீங்கள் தேவையில்லாமல் பேசி, வாசலை அடைக்கக் கூடாது” எனக் கடிந்துகொள்ள, அப்செட் ஆகிவிட்டாராம் செல்லூர் ராஜூ. “ம்க்கும்… ஸ்டாலினைத் திருமா சந்தித்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவங்க என்னடான்னா ஏதேதோ காரணம் சொல்றாங்க…” எனப் பொருமுகிறது செல்லூரார் தரப்பு.திக்கித் திணறும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை!கலைத்துப்போட்ட டெல்லி தலைமை…
`பா.ஜ.க-வில் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக நடப்பதற்கு, அதைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை நியமித்ததில் நடந்திருக்கும் குளறுபடிகள்தான் காரணம்’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். “உதாரணமாக எல்.முருகன், வினோஜ் பி செல்வம் போன்றோரை தென்மாவட்டங்களுக்கு, இராம.சீனிவாசனை திருவண்ணாமலைக்கு எனச் சம்பந்தமே இல்லாத பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறது டெல்லி தலைமை. கமலாலயம்
இப்படி அந்தந்த மாவட்டங்களோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்களை பொறுப்பாளராக நியமித்திருப்பதால், அவர்களால் இந்த உறுப்பினர் சேர்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்லவோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினருடன் பேசி அவர்களை பா.ஜ.க-வுக்கு அழைத்து வரவோ முடியவில்லை” எனக் கொதிக்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள்.யாகம் செய்த சங்கத்து நடிகர்!ஜோதிடர் சொன்ன அறிவுரை…
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு எதிரிகளை வீழ்த்தி, நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற நடத்தப்படும் ‘சத்ரு சம்ஹார பூஜை’ மற்றும் விசேஷ யாகத்தையும் நடத்தியிருக்கிறார் அந்த சங்கத்து நடிகர். ‘எதற்காக இந்த யாகம்…’ எனக் கேட்டால், “தயாரிப்பாளர் சங்கத்தினரோடு பிரச்னை, நடிகர் சங்கப் பிரச்னை, அரசியல் நுழைவு குறித்த குழப்பம் எனப் பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார் அண்ணன். மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் கொடுத்த கேரன்டி... குழைந்த திருமா... முடிவுக்கு வந்த தி.மு.க-வி.சி.க உரசல்?
`அதிலிருந்து விடுபட வேண்டுமானால், முருகன் கோயிலுக்குச் சென்று வர வேண்டும்’ என அவருடைய ஆஸ்தான ஜோதிடர் சொல்லியிருந்தார். அதன்படிதான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது அண்ணன் மனதளவில் கூடுதல் உற்சாகத்தோடு இருக்கிறார்” என்கிறார்கள் நடிகருக்கு நெருக்கமானவர்கள்.சர்ச்சையில் அமைச்சர் வாரிசு!10 ஏக்கர் நில விவகாரம்...
தென்கோடி மாவட்டத்தின் பிரதான பகுதியில் இருக்கும் 10 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்பதில் அதீத ஆர்வம் காட்டுகிறாராம் அமைச்சரின் வாரிசு. இத்தனைக்கும் அந்த இடம், நீண்டகாலமாக வில்லங்கத்தில் இருந்தது. மாவட்ட நிர்வாகம் வழக்கைச் சரியாக நடத்தாததாலும், மேல்முறையீட்டுக்குச் செல்லாததாலும் தனிநபர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பானதாம். “இப்போதுகூட மாவட்ட நிர்வாகம் மேல்முறையீட்டுக்குச் செல்லலாம். ஆனால், அதைத் தடுத்து நிறுத்தியதற்கு பிரதிபலனாகத்தான், அதை பிளாட் போட்டு விற்பதில் கூட்டாளியாகியிருக்கிறார் வாரிசு” என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
">
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb
">
https://tinyurl.com/2b963ppb
/>
http://dlvr.it/TDQRkt
Thursday 19 September 2024
Home »
» கழுகார்: `செல்லூருக்கு டோஸ்விட்ட அதிமுக தலைமை’ டு `கலைத்துப்போட்ட டெல்லி; திக்கித் திணறும் பாஜக'