மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே தி.மு.க.சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க நிர்வாகி மணிமாறன் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அந்தசமயத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி சமைத்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய பொதுமக்களுக்கு இரவில் திடீரென வாந்தி, மயக்கம், தலைவலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். ஒரேநேரத்தில் அடுத்தடுத்து பலர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டதால் கள்ளிக்குடி வட்டமே பரபரப்பானது.நலம் விசாரித்தல்
தொடர்ந்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டது விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "பொதுக்கூட்டத்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிய மக்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவுகளை வீட்டிற்கும் பார்சல் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த சாப்பாட்டினை வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கும் உண்ண கொடுத்துள்ளனர். அப்போது, செரிமான பிரச்னை ஏற்பட்டு உணவு ஒவ்வாமை காரணத்தால் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்றனர்.ஆறுதல்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மாணவ மாணவிகள் என மொத்தம் 43 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து பேசிய அவர், நோயாளிகளுக்கு ஆறுதல் சொன்னதோடு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்கவும் மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.ஆறுதல்
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலமாக கட்டுப்பாடான முறையில், சுத்தமாகவும் சுகாதாரமாகவும், உணவு சமைத்து வழங்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் தி.மு.க.சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு அலட்சியப் போக்கில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு இணங்க வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பின்பேரில் பதில் கூறவேண்டியது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதைவிடுத்து மதுஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும் அ.தி.மு.க. என்ன நிலைபாட்டை எடுக்கப்போகிறது என்பது குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தவறானது. தமிழகத்தில் ஆக்டிங் முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மதுரையில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக இருந்தது. அவரை வரவேற்க விமான நிலையம் முதல் கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் நலத்திட்ட உதவியின்போதோ, பொதுக்கூட்ட புதிய அறிவிப்புகளின் போதோ அதைச்சார்ந்த துறை அமைச்சர்கள் அழைக்கப்படுவதில்லை. தி.மு.க.வில் உள்ள மூத்த அமைச்சர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரவேண்டியது எதற்காக?. தமிழக அரசின் துறைகளில் ஒன்றான விளையாட்டுத்துறை மற்றும் அரசு சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சராக உள்ள ஒருவர் மாவட்டம்தோறும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது மரபு அல்லவே. அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டம் நடத்தும் அதிகாரமும், மரபும் முதலமைச்சருக்கே உண்டு.
ஆகவே, முதலமைச்சருக்கு நிகரான அதிகாரப் போக்கில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவது வேடிக்கையாக உள்ளது. இதற்கு உதயநிதி ஸ்டாலினையே முதலமைச்சராக அறிவித்துவிட்டால் எந்த பிரச்னையுமே இருக்காது" என விமர்சித்து பேசினார்.‘சாதிச் சான்றிதழுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது?’- குமுறும் தென்மாவட்டப் பழங்குடியினர்!
http://dlvr.it/TDBX9V
Friday 13 September 2024
Home »
» ``அமைச்சர் உதயநிதியவே முதல்வராக அறிவிச்சிடுங்க' - ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ சாடல்