புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, உ.பி., மாநிலம், ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தவிர, மசூதியை இடித்ததாக, அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது, லக்னோ கோர்ட்டில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.ரேபரேலி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட்டோர் நீக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. நேற்று நாரிமன் கோர்ட்டுக்கு வராததால், இந்த வழக்கு இன்று(மார்ச்,23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டது.இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை இரண்டு வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. மேலும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.