கும்பகோணத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் விழா மேடையிலேயே காங்கிரஸ் கட்சி எம்.பியிடம் நிதி கேட்டு திமுக எம்பி, எம்.எல்.ஏ வாக்கு வாதம் செய்ததது இருகட்சியினரிடமும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.71 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழாவும், ரூ.5.40 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், சுதா, எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி
இதில் பேசிய சாக்கோட்டை அன்பழகன், ``மயிலாடுதுறை எம்.பி சுதா புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாம் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெற வைத்திருக்கிறோம். கஷ்டமே இல்லாமல் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் முதன் முதலில் அடிக்கல் நாட்டும் போது அமைச்சர்கள் இரண்டு பேரும், முதல் செங்கல்லை சுதாவை வைக்கச் சொல்ல அவரும் கல்லை வைத்தார். புதிதாக கட்டப்பட உள்ள கட்டடத்தின் மொத்த தொகையில் ரூ.2 கோடியை அவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தர வேண்டும் தருவார் என நினைக்கிறேன்.
நம் வெற்றியில் தான் சுதா எம்.பியாக இருக்கிறார். உங்களிடம் ஒன்று கொடுத்து விட்டு ஒன்றை கேட்கிறோம். உங்கள் வெற்றிக்கு நாங்கள் பங்களித்து விட்டு கேட்கிறோம். எம்.பி பெரிய மனது வைத்து நிதி தருவார் என கருதுகிறேன்" என்றார்.
இதைதொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி சுதா, "எம்.பி நிதியிலிருந்து மருத்துவத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என சாக்கோட்டை அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார். அவருக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். கொடுப்பது என்பது என்னுடைய பணத்தை கொடுப்பது அல்ல, மக்களின் பணத்தை மக்களுக்காக கொடுப்பது தான். மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி எம்.பி சுதாBulldozer ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறதா? | சீமானுக்கு செக் வைக்கும் திமுக? - The Imperfect Show
ஆனால், எனக்கென்று, என் மக்களுக்கு செய்ய வேண்டிய கனவு ஒன்று இருக்கிறது. மருத்துவக் கட்டடங்கள் கட்டி விடலாம் ஆனால் அங்கு வேலை செய்வதற்கு, சேவை செய்வதற்கு கல்வி அறிவுள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் தேவை. அதற்கு அடிப்படை கல்வி என்பது ரொம்ப முக்கியம். தரமான கல்வி கிடைத்தால் தான் நாடு முன்னேறும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். கல்வித்துறைக்கான தேவையை என்னுடைய நாடாளுமன்ற நிதியிலிருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
அதன் பின்னர் மீண்டும் மைக் பிடித்த, சாக்கோட்டை அன்பழகன், "உங்கள் கனவு நிறைவேறட்டும், அதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம். அந்த கனவோடு சேர்ந்து மிச்சம் இருந்தால் மருத்துவமனை கட்டுவதற்கும் நிதி கொடுங்கள் என கேட்கிறோம்" என்றார். அன்பில் மகேஷ்
இதையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "நிதி கொடுக்கும் விஷயத்தில் உங்களுக்குள் பேசி நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள், எது எப்படியாக இருந்தாலும் பள்ளி கல்வித்துறைக்கு வரும் பணத்தை நான் ஏன் விடப்போகிறேன். கொடுங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்" என்றார்.
பின்னர் பேசிய எம்.பி கல்யாணசுந்தரம், "எம்.பி சுதா வெற்றிக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக் கொடுத்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அவர் கடமைப்பட்டவர். இந்நிகழ்ச்சியில் நிதி வழங்குவதை அவர் அறிவிப்பார் என எதிர்பார்த்தேன் அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி இதில் ரூ.2 கோடியை மருத்துவமனைக்கு கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்" என்றார்.மோடியின் புருனே பயணம் இந்தியாவுக்கு எப்படி பலனளிக்கும்?
http://dlvr.it/TCp9hY
Wednesday 4 September 2024
Home »
» காங்கிரஸ் எம்.பியிடம் நிதி கேட்ட திமுக எம்.எல்.ஏ; ஒரே மேடையில் நடந்த விவாதம்...