புல்டோசர் நீதி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். எப்படி ஒரு குற்றவாளிக்குச் சொந்தமானது என்பதற்காக ஒரு வீடு இடிக்கப்படலாம் எனக் கேள்வி எழுப்பியதுடன், நாடு முழுவதும் வீடுகளை இடிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள், துஷ்யந்த் டேவ், சியு சிங் ``நாடு முழுவதும் புல்டோசர் நீதி பரவாமல் இருக்க நடவடிக்கைத் தேவை" என வாதிட்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்ம.பி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; புல்டோசர் ஆக்ஷன் எடுத்த பெண் காவலர்கள்! - நடந்தது என்ன?
நீதிபதி பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எந்த சொத்தும் ஒருவர் குற்றவாளி என்பதற்காக இடிக்கப்படுவதில்லை, சம்பந்தப்பட்ட கட்டடம் சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தால் மட்டுமே இடிக்கப்படும் என வாதாடினார். மேலும் இந்த வழக்கு தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
"இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இதன் அடிப்படையில் வழிகாட்டுதல்களை உருவாக்குகிறோம். எப்படி ஒருவர் குற்றவாளி என்பதால் அவரது வீடு இடிக்கப்படலாம்." எனக் கேள்வி எழுப்பினார் நீதிபதி கவாய்.
"கட்டடம் அனுமதியற்றதாக இருந்தால் இடிக்கப்படலாம். ஆனால் அதற்கு நெறிமுறைகள் தேவை. நீங்கள் நகராட்சி விதிமுறைகளை கடைப்பிடிக்கவிட்டால்தான் இடிப்பதாகக் கூறுகிறீர்கள். இப்போது அதற்கான வழிகாட்டுதல்கள் தேவை, ஆவணப்படுத்தப்பட்ட நடைமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
"ஒரு கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்னர் நோட்டீஸ் அளித்து, அதற்குப் பதிலளிக்க அவகாசம் கொடுங்கள். சட்டப் பூர்வ தீர்வுகளைத் தேட நேரம் கொடுங்கள் அதன்பிறகு இடிக்கலாம்" எனக் காட்டமாகத் தெரிவித்தார் நீதிபதி கே.வி.விஸ்வநாதன். புல்டோசர்
"நாங்கள் சட்டத்தை மீறிய கட்டடங்களைப் பாதுகாக்கவில்லை, அது கோயிலாக இருந்தாலும் சரி. ஆனால் இடிப்பதற்கு முன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்." என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சியு சிங் டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த சம்பவத்தை மேற்கோள்காட்டினார். வாடகைக்கு இருப்பவர்கள் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால், வீடுகள் இடிக்கப்பட்டன. உரிமையாளரின் மகனுக்குக் குற்றச் சம்பவத்தில் தொடர்பிருந்ததால் 50-60 ஆண்டுகள் பழமையான வீடுகள் இடிக்கப்பட்டன. என வாதாடினார்.
ஒரு மகனின் தவற்றுக்காக வீடு இடிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல என கே.வி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
புல்டோசர் நீதி என்பது கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. சில சம்பவங்களில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்பே புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவற்றுக்காக எப்படி மொத்த குடும்பத்தையும் அரசு தண்டிக்க முடியும் எனக் கேள்விகள் எழுகின்றன!புல்டோசர் நீதி!
http://dlvr.it/TCjK3D
Monday 2 September 2024
Home »
» Bulldozer Justice: புல்டோசர் நீதி... ``இது சரியான அணுகுமுறை அல்ல" - சாட்டை எடுத்த உச்சநீதிமன்றம்!