சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 27) வெளியிடப்பட உள்ளது. மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் இருப்பது யார் யார்? :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிடோர் போட்டியிடுகின்றனர்.
நேற்று கடைசி நாள் :
தற்போது 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள இன்று கடைசி நாள் ஆகும். பிற்பகல் 3 மணிக்குள், மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து மாலை 5 மணிக்கு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.