
விராட் கோலி தலை
மையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெற்றிகளை குவித்து வருகிறது. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போட்டிகளில் இந்திய அணி மேற்கு இந்திய தீவு நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை அபாரமாக வென்று சாதனை படைத்தது. இதனால் டெஸ்ட் தர வரிசை பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்திய ஒரு நாள் அணிக்கு எம்.எஸ். டோனி கேப்டனாக உள்ளார். ஒரு நாள் போட்டிகளுக்கும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்துகிறார்கள்.
இது பற்றி கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,
டோனி தனது பணியை அற்புதமாக செய்து வருகிறார். அது தான் முக்கியம். அவர் அனுபவம் வாய்ந்த வீரர். ஒரு நாள் போட்டிக்கு அவரே கேப்டனாக நீடிக்க வேண்டும். நேரம் வரும் போது, டோனியே அனைத்து நிலை கிரிக் கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவார். கேப்டன் பதவியில் டோனி, கோலி ஆகியோரை ஒப்பிட்டு பார்க்க முடியாது.
கோலி ஆக்ரோஷமானவர். டோனி அமைதியானவர். இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் கடினம் என நினைக்கிறேன். ஏனென்றால், இருவரும் வேறு விதமான அணியையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளனர். இன்று நீங்கள் டோனி, கோலி ஆகியோரை கங்குலியுடன் ஒப்பிட்டு சொல்லுங்கள் என்று கேட்பீர்கள் ஒவ்வொரு கேப்டனும் தங்களிடம் உள்ள ஆக்ரோஷம், ஊக்கப்படுத்துதல், ஆகியவற்றை வெவ்வேறு விதமான வெளிப்படுத்துவார்கள். ஆனால் இவையனைத்தும் அணியின் வெற்றிக்கு எவ்வாறு உதவுகிறது? என்பதுதான் முக்கியம்.
வேகப்பந்து வீச்சாளர்கள் 135 கி.மீ. வேகத்தில் வீசினாலும் சரியான அளவில் வீச வேண்டும். முகமது சமி, உமேஷ் யாதவ் இஷாந்த் சர்மா , புவேனேஷ் குமார் அகியோர் நல்ல முன்னேற்றத்துடன் உள்ளனர். இவ்வாறு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறினார்.
English summary:
In one-day cricket to prolong the Indian cricket team captain Mahendra Singh Dhoni Kapil Dev, former president stressed.