![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3gOMZjO48zvkyGFB2TijfcdG0Ss91e10yDmFSYQ_d9ljeu4QoxAbZoGA7aK7RpfkUZdiEJO4pO7XtlVRb1K7ksxMhKu4Y7u0Fd9ln41ctSL-mUsA7HcQ5O29iOh_5xe3oRnkYBcEAOK8/s320/08-1481187897-trisha3545-600%255B1%255D.jpg)
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நடுவில் கொஞ்சம் தொய்வடைந்தாலும் அவரது கெரியர் தற்போது டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் த்ரிஷா மல்லுவுட் செல்கிறார்.
நிவின் பாலி:
ஷ்யாமாபிரசாத் இயக்கும் மலையாள படத்தில் பிரேமம் பட ஹீரோ நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. இது த்ரிஷா நடிக்கும் 60வது படமாகும்.
அரவிந்த் சாமி:
தமிழில் அரவிந்த்சாமியுடன் சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இது தவிர என்.ஹெச். 10 இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான கர்ஜனை, மோகினி, விஜய் சேதுபதி படங்களும் த்ரிஷா கைவசம் உள்ளன.
த்ரிஷா:
நிவின் பாலியுடன் சேர்ந்து மலையாள படத்தில் நடிக்க உள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். த்ரிஷா ஏற்கனவே பாலிவுட் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோகம்:
தனக்கு மிகவும் பிடித்த நபரான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து த்ரிஷா சோகத்தில் உள்ளார். அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத வருத்தம் வேறு.
English summary:
Trisha is going to Mollywood and the hero of her debut movie is none other than Nivin Pauly.