தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானல் மலையில் விதியை மீறி மரங்களை அழித்து அதிக கட்டங்கள் கட்டப்படுகின்றன. கனரக இயந்திரங்களை வைத்து மலைகள் வெட்டப்பட்டுத் தங்கும் விடுதிகளுக்கான கட்டுமான பணிகள் நடத்தப்படுகின்றன.கொடைக்கானல்
இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாகவும், அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் கிளாவரைக் கிராமத்தில் பெரிய அளவில் நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிலச்சரிவு அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கடைசி கிராமமாகக் கிளாவரை உள்ளது. இக்கிராமத்தின் ஒரு பகுதி கீழ் கிளாவரை என அழைக்கப்படுகிறது. கீழ் கிளாவரைப் பகுதியில் செருப்பன ஓடை உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வராததால் குழப்பம் அடைந்த கீழ் கிளாவரை மக்கள் செருப்பன ஓடை பகுதிக்குச் செல்லும் வழியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா எனப் பார்க்கச் சென்றனர்.நிலப்பிளவு
அப்போது கீழ் கிளாவரை வரை பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாகவே செல்லும் போது கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு மிகப்பெரிய பிளவு நிலத்தில் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தில் பிளவு ஏற்பட்டிருந்தாலும் அதனுடைய ஆழம் இதுவரை தெரியவில்லை நிலத்தில் பிளவு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது புரியாமல் குழப்பத்தில் கிராம மக்கள் இருந்த நிலையில், இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்த காட்சிகளில் தாங்கள் இதுவரை இதுபோன்ற ஒரு நிலப்பிளவை பார்த்ததில்லை என்றும் இதனால்தான் தண்ணீர் வரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். நிலப் பிளவு ஏற்பட்டதற்குக் காரணம் நில அதிர்வா அல்லது ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொடைக்கானல்
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், "கொடைக்கானல் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முதற்கட்ட ஆய்வில் கொடைக்கானலில் நில அதிர்வு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/TDWdNp
Saturday 21 September 2024
Home »
» கொடைக்கானல்: பல அடி தூரத்திற்கு ஏற்பட்ட நிலப்பிளவால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் விளக்கம்