Wednesday, 22 March 2017
Saturday, 4 March 2017
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் திருப்பூர், கோவை மாவட்ட
த்தில் சோமனூர், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி, பல்லடம், மங்கலம், சூலூர் உட்பட பல பகுதிகளில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. நூல் விலையேற்றம், போதிய கூலி கிடைக்காதது ஆகிய காரணத்தால் விசைத்தறி தொழில் மற்றும் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.
விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து பல கட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து விசைத்தறி உரிமையாளர்கள் பெறும் கூலி உயர்வை, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் இதுவரையில் கூலி உயர்வு, தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாதம்தோறும் நிர்ணயிக்கப்பட்ட நூல் விலை தற்போது நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதால் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. மத்திய அரசும் நூல் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்ட உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு கூலியை வழங்கவில்லை. இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் பகுதியில் சுமார் 2 இலட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் சுமார் 75 கோடிக்கு மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல இலட்சம் தொழிலாளர்ககள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதும் தடைபடும். மேலும் விசைத்தறி தொழிலை நம்பி இருக்கின்ற சிறு தொழில்களும் பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தாலும், விவசாயத்திற்கு அடுத்து விசைத்தறி தான் பிரதான தொழிலாக விளங்குகிறது. விவசாயத் தொழில் நலிவடைந்திருப்பதால் விசைத்தறியை நம்பித்தான் இப்பகுதி வாழ் மக்கள் வாழ்கிறார்கள். இச்சூழலில் விசைத்தறியும் இயக்கப்படாமல் இருந்தால் இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே விசைத்தறி தொழிலைப் பாதுகாத்து இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரபலமாக நடைபெற்று வரும் விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழிலை மேம்படுத்துவதற்கு சலுகைகளையும், நல்ல பல திட்டங்களையும் அளித்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.
English Summary:
Chennai, yarn prices and wages, and lack of adequate reasons including power loom workers affected by the provision of central and state governments to preserve the Tamil Manila Congress leader GK Vasan has appealed.
Thursday, 19 January 2017
ஜல்லிக்கட்டு விவகாரம் மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் :
முதலில் இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை மத்திய, அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலே அரசாங்கம் மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் நிலையை எடுத்துக் கூறி விளக்கி, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, மத்திய அரசு மூலம் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதற்கான வழி வகைகள், சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உடனடியாக அரசு அதிகாரிகள் கலந்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதற்கான மத்திய அரசினுடைய நிலைப்பாட்டிற்கு உச்ச நீதிமன்றம் வலு சேர்க்க வேண்டும். இதன் மூலம் ஒரு காலக்கெடுவிற்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசும், தமிழக முதல்வரும், மத்திய அரசின் தமிழகப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கும், மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதனையே பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த பணியை தமிழக நலன் கருதி, மாணவர்கள் நலன் கருதி அரசு உடனடியாக செய்யும் என்று நம்புகிறேன். எனவே இத்தகைய பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.
English summary:
Chennai - Jallikattu has resulted in a rise in support of the struggle of students TMK leader Vasan said. As for the students, because that would create future pillars of the country, who thought achievable. A goal of the culture for the students, in order to preserve their culture, study, work, home, away from relatives, leaving the ban in the state should be done to ensure jallikattu protest themselves.