சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் முதல்வர் பன்னீர்செல்வம், கட்சியின் பொது செயலர் சசிகலா ஆகிய இருவருடைய அதிகாரப் போர் ஏற்பட்டு, இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவது வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, இருவரையும் மாறி மாறி ஆதரிப்பதில், தி.மு.க.,விலும் ஸ்டாலின், கனிமொழி என இரு கோஷ்டிகளாக செயல்படுவது வெளிப்பட்டிருக்கிறது..
ராஜாத்தி, கனிமொழி:
ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, ஜெயலலிதாவை சந்தித்து உடல் நலம் விசாரிக்கச் சென்றார் கனிமொழி. அவர், சசிகலாவை சந்தித்து பேசிவிட்டுத் திரும்பினார். அடுத்து, ஜெயலலிதாவின் உடல் நலம் விசாரிக்கப் போனார், கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள். அவரும் சசிகலாவை சந்தித்துப் பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
அப்போதே, இது தொடர்பாக பரபரப்பான தகவல்கள், தி.மு.க., தரப்பில் இருந்தே வெளியாகின. ஜெயலலிதா உடல் நிலை சரியாகி, வீடு திரும்பியதும், அவரை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம் என கூறியதாக, தகவல் பரப்பினர். இதனால், கட்சியில் கனிமொழிக்கு எதிரான ஸ்டாலின் தரப்பினர் மீது கனிமொழி உள்ளிட்டவர்கள் கோபமாகினர்.
இப்படி சசிகலாவை, கனிமொழியும் தாயாரும் சந்தித்து பேசியது, ஸ்டாலின் தரப்பினருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, ஜெயலலிதா இறந்ததும், தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவரை, சசிகலா தரப்பினர் எதிர்க்கத் துவங்கினர். இதனால், பன்னீர்செல்வத்தை நேரடியாக இல்லாமல் மறைமுகமாக ஆதரிக்கத் துவங்கினார் ஸ்டாலின்.
பன்னீருக்கு மரியாதை:
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முழு ஆதரவு கொடுத்து வருகிறார். மரியாதையும் முழுமையாக அளித்து வருகிறார். எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் கான்வாய் வந்தால், காரை ஒதுக்கி வழிவிடுவதாகட்டும், குடியரசு தினத்தில் கொடியேற்றிய முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு, முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக செல்வது வரையில், பன்னீர்செல்வத்துக்கு முழுமையான ஆதரவை அளித்து வருகிறார் ஸ்டாலின்.
சட்டசபையிலும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு முழு மரியாதை அளிப்பதோடு, ஆளும்கட்சிக்கு எந்த விதத்திலும் நெருக்கடி இல்லாமல் நடந்து கொள்கிறார் ஸ்டாலின்.
கனிமொழி கடுகடு:
ஆனால், இதற்கு நேர் எதிராக செயல்பட கனிமொழி தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நடந்து கொண்ட விதம், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதாகச் சொல்லி, கலவரத்துக்கு வழிவகுத்த போலீசார்; திறனில்லாத தமிழக அரசு என, தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் குறித்து, பார்லிமெண்ட் கூட்டத் தொடரில், தி.மு.க., தரப்பில் விவாதத்துக்கு எடுத்து வைத்து, கருத்துக்களை பதிய வைப்போம் என கனிமொழி கூறியுள்ளார். கூடவே, தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியைத் தொடர்ந்து, விவசாயிகள் தொடர்ச்சியாக இறந்து போனது குறித்தும் விவாதிக்கப்படும் என கூறியுள்ளார். இதெல்லாமே, பன்னீர்செல்வம் ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துபவைதான்.
அண்ணன் ஸ்டாலின், பன்னீர்செல்வத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்பதாலேயே, தமிழக அரசை, எதிர்க்கும் முடிவுக்கு கனிமொழி வந்திருக்கிறார். பார்லிமெண்டில், தமிழக அரசை எதிர்த்து கருத்துக்களை வைக்கப்போவதாக சொல்லியிருப்பதன் பின்னணி இதுதான்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English Summary:
Chennai: After the death Jayalalithaa, AIADMK chief Panneerselvam, the party's general secretary Shashikala war of power of both, the two factions have been found to be open to doing that. Subsequently, both alternately to support DMK in Latin Stalin, Kanimozhi has been demonstrated that the performance of both teams ..