 திருப்பதி: அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலர் சசிகலாவுக்கு, தெலுங்கானா மாநில அரசு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
திருப்பதி: அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலர் சசிகலாவுக்கு, தெலுங்கானா மாநில அரசு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.சசிகலா வீடு:
கடந்த, 1990ல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தெலுங்கானா மாநிலம் ஜிடிமெட்டில், கிராம பகுதியில் உள்ள விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, அதற்கு, ஜெ.ஜெ., கார்டன் என பெயரிட்டார். இந்த விவசாய நிலம் வாங்கியபோது, அத்துடன் சேர்த்து, செகந்திராபாத்தில் உள்ள மாரேடுபள்ளி ராதிகா காலனியில், சசிகலா பெயரிலும் வீடு வாங்கப்பட்டது.
நோட்டீஸ்:
இந்த வீட்டிற்கு தொடர்பான சொத்து வரி, இரண்டாண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளது. இதையடுத்து, 35 ஆயிரத்து, 424 ரூபாய் வரி பாக்கியை உடனடியாக செலுத்தும்படி, தெலுங்கானா அரசு சார்பில், சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வீடு, சில மாதங்களுக்கு முன் வரை, வெளியாட்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. தற்போது இந்த வீடு காலியாக உள்ளது.
English summary:
Tirupati: AIADMK general secretary Shashikala Temporary Help, Telangana State Government notice provided.






 
 
 
 Posts
Posts
 
 
