``கூவம் நதி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்!" என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு, அதை பொதுவெளியில் வெளியிட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், அந்தப் பதிவில் சென்னை மாநகராட்சி, மேயர் பிரியாவின் அக்கவுன்ட்களையும் டேக் செய்திருக்கிறார்.கார்த்தி சிதம்பரம்
அந்தக் கடிதத்தில், ``கூவம் நதி பத்தாண்டுகளுக்கும் மேலாகவே மாசுபட்டுக் கிடக்கிறது. கடந்தகால அறிக்கைகள் கூவம் நதியின் பரிதாபமான நிலையை வெளிக்காட்டுகின்றன. இந்த நிலையில், கூவம் நதியை மறுசீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதில், ஏற்கெனவே ரூ.529 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மண்டலக் குழு தலைவருக்கு நீங்கள் அளித்த பதிலில், அமெரிக்க அதிகாரிகளிடம் தொழில்நுட்ப உதவிகள், நிதிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனாலும், அந்த பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. எனவே, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில், கூவம் நதி மறுசீரமைப்புக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்கள் குறித்தும் விரிவான பதிலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
அதில் அனைத்து மறுசீரமைப்பு திட்டங்களின் சுருக்கம் (A summary of all restoration schemes), தற்போதைய நிலை மற்றும் சவால்கள் (Current Status and Challenges), செலவழிக்கப்பட்ட நிதிகளின் மதிப்பீடு (Assessment of Funds Utilized), எதிர்காலத் திட்டம் மற்றும் அர்ப்பணிப்பு (Future Plan and commitment), பொதுமக்கள் ஈடுபாடு மற்றும் கருத்துக்கேட்பு முறை (Public Engagement and feedback Mechanism) என அனைத்து விவரங்களையும் `வெள்ளை அறிக்கை'யாக வெளியிட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
`நதிகள் சுரண்டப்படுகின்றன!' - கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் கடிதம்
மேலும், ``தற்போதைய நிலையில் 30 சதவிகித சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நாள்தோறும் கூவம் ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. அதில், தமிழ்நாடு அரசின் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கழிவுநீரும் அடங்கியிருக்கிறது. அதேபோல, பக்கிங்காம் கால்வாயில் 60 சதவிகிதம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கிறது. மற்றவை அடையாறில் கலக்கிறது. இப்படியாக சென்னை மாநகரத்தின் கழிவுநீர் கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இப்படியாக நதிகள் சுரண்டப்படுகின்றன. எனவே நான் இந்த நதிகள் தொடர்பான மறுசீரமைப்புத் திட்டங்களை தெரிந்துகொள்வதற்காக ஆர்வமுடன் இருக்கிறேன்.கார்த்தி சிதம்பரம் கடிதம்
அதற்காக, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (58 ஏக்கர்) (Eco-Restoration of Adyar Creek), அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரத்தின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (300 ஏக்கர்) (Eco-Restoration of Adyar Creek And Estuary), ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டம் (Integrated Cooum River Eco Restoration Plan)ஆகியவற்றின் தற்போதைய நிலையையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்!" என கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியில் இருக்கும் தி.மு.க-வின் சென்னை மாநகராட்சி மேயருக்கு, மாநகராட்சி மேற்கொண்டுவரும் திட்டம் குறித்து சந்தேகம் தெரிவித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன்னிச்சையாக கடிதம் எழுதி கேட்டிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வின் ஐ.டி விங்கைச் சேர்ந்த பலரும் கார்த்தி சிதம்பரத்தின் கருத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேயர் பிரியா
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் கடிதம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ``கார்த்தி சிதம்பரத்தின் ட்வீட்டைப் பார்த்துதான் அவர் கடிதம் எழுதியிருப்பதை நான் தெரிந்துகொண்டேன். கூவம் நதியின் மறுசீரமைப்பு பணிகளைப் பொறுத்தவரையில், பல்வேறு துறைகளுடன் இணைந்துதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, மெட்ரோ வாட்டர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட துறைகள் இணைந்து மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் இதற்கான பதிலை நான் தருவேன்!" என்றிருக்கிறார்.`மேல்தட்டு மக்களுக்காக ஃபார்முலா கார் பந்தயம்; அதில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரம்' - சீமான்
http://dlvr.it/TCq2vg
Wednesday 4 September 2024
Home »
» `சுரண்டப்படும் நதி' கூவம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட கார்த்தி சிதம்பரம்; மேயர் பிரியா சொல்வதென்ன?