மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தொட்டப்பநாயக்கணூரில் தொடங்கிய தங்கதமிழ்ச் செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. அதை பெருமைப்படுத்தும் விதமாக உலக அளவில் வீரர்களை வரவழைத்து மிகப்பெரிய கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நிச்சயமாக இந்த கார் பந்தயத்தை சிறப்பு மிக்க பந்தயம் என்றே சொல்ல வேண்டும்.கார் பந்தயம்
நீதிமன்றம் கூட பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த சொல்லியுள்ளது. உதயநிதி ஸ்டாலினும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல்தான் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
தமிழ்நாட்டின் பெருமையை உலக அளவிற்கு தெரியப் படுத்தும் இந்த கார் பந்தய நிகழ்ச்சியை நடத்தும் உதயநிதி ஸ்டாலினை பாராட்ட வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சி படக்கூடாது.
ரஜினிகாந்த் பேசிய சீனியர்- ஜூனியர் விவகாரம் குறித்து முதல்வரும், ரஜினிகாந்தும், துரைமுருகனும் பதில் சொல்லி விட்டார்கள். அதிமுகவினர் ஏன் மீண்டும் மீண்டும் இதை கிளப்பி விடுகிறீர்கள் என புரியவில்லை. எங்களுக்குள் சமரசம் ஆகிவிட்டது. தங்க தமிழ்ச்செல்வன்
சீனியர்கள் நிறைய இருக்கிற கட்சி திமுக, மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கு என்ற பொதுவான கருத்தை தான் ரஜினி சொன்னார். சீனியர்களை விலகச் சொல்லவில்லை. சீனியர்கள் அதிகமாக உள்ள கட்சியை கொண்டு செல்ல பெரிய திறமை வேண்டும், அதற்கு முதல்வருக்கு நன்றி சொன்னார் இது சந்தோசமான செய்தி தானே..." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TCdS9h
Sunday 1 September 2024
Home »
» ``ரஜினி அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் ஏன் கிளப்பி விடுகிறீர்கள்?" - தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி