புதுடில்லி : யோகாகுரு ராம்தேவ் நடத்தி வரும் பஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக பஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதால் அந்நிறுவனத்தின் வருமானமும் 2 மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரூ.5000 கோடி வரை வருமானம் ஈட்டி வரும் இந்நிறுவனம் அடுத்த நிதியாண்டில் ரூ.10,000 வரை வருமானம் பெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சில பொருட்களை பஞ்சலி நிறுவனம், தங்களின் லேபிளை பயன்படுத்தி தவறாக விளம்பரப்படுத்தி வருவதாக 2012 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த ஹரித்வார் கோர்ட், பஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை இந்த மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடருவதற்கு முன் 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதஞ்சலி நிறுவனத்தின் தேன், உப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்ததில், இந்த பொருட்கள் தர சோதனையை தோல்வி அடைந்தன. இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English summary:
NEW DELHI: yogaguru company Rs 11 lakh fine imposed on Ayurvedic patanjali Ramdev, who is leading the court. At present, the firm will earn revenue of Rs 5,000 crore in the next final year is reported as income up to Rs 10,000.