கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறி உள்ளது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது. பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. நில நடுக்கம்தான் ஏற்பட்டுவிட்டது என்ற அச்சத்தில் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கல்குவாரிக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக ஷிவமோகா மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://dlvr.it/Rr5Nkk
Friday 22 January 2021
Home »
» கர்நாடகா: சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு!